ஜாபாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாபாலி மகரிஷி, (Jaabaali Maharshi) ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்றான நியாயா தத்துவத்தை நிலைநிறுத்திய தத்துவாதியும் மகரிஷியும் ஆவார். ஜபல்பூர் நகரம் இம்முனிவரின் பெயரால் நிறுவப்பட்டது.

ஜாபாலி, உபநிடத்தில் கூறப்படும் கௌதமரின் சீடரான சத்தியகாம ஜாபாலா என்பவரின் வழித்தோன்றலில் பிறந்தவர்.

ஜாபாலி கோத்திரம்[தொகு]

தென்னிந்தியாவில் வாழும் அந்தணர்கள் மற்றும் சௌராட்டிரர்களில் சில குடும்பத்தினர், தாங்கள் ஜாபாலி ரிஷியின் வழிதோன்றல்கள் என்பதால், தங்களை ஜாபாலி கோத்திரத்தினர் என அடையாளம் கொண்டுள்ளனர்.[1]

இராமாயணத்தில் ஜாபாலி ரிஷி[தொகு]

இராமாயணத்தில் ஜாபாலி முனிவர் நாத்திக வாதம் பேசுபவராக வருணிக்கப்படுகிறார். தந்தை தசரதன் கூறியதாக தாய் கைகேயின் கூற்றுப்படி, இராமர் மேற்கொண்ட பதினான்கு ஆண்டு வனவாசத்தின் போது, சித்திரகூட மலையில் சீதை மற்றும் இலக்குமணனுடன் வாழ்ந்த வேளையில், பரதன் இராமரை சந்தித்து, அயோத்திற்கு திரும்பி வந்து மணிமகுடம் சூட்டிக் கொள்ள வேண்டினான். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறி, பரதனின் வேண்டுகோளை இராமர் ஏற்க மறுத்தார். அந்நேரத்தில் ஜாபாலி முனிவர், சத்திரிய தர்மப் படி, மூத்த மகனே நாடாள வேண்டும் என்றும், தாய் கைகேயியின் சொல்லுக்கு அடிபணிய வேண்டியதில்லை என்றும் நாத்திக வாதம் பேசினார்.

ஜாபாலா உபநிடதம்[தொகு]

ஜாபால ரிஷி இயற்றிய ஜாபால உபநிடதத்தில் [2][3]சத்தியகாம ஜாபாலாவின் கதை கூறப்பட்டுள்ளது.[4] ஜாபால உபநிடத்தில் தாயைக் கடவுளாகப் போற்றும் தன்மை குறித்தும், பெண்களின் கடமை குறித்தும் விளக்கியுள்ளார். மேலும் பிரம்ம வித்தையை அறிவதற்கான முதற் படி சத்தியத்தை பின்பற்றுவதே என வலியுறுத்தியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாபாலி&oldid=3801654" இருந்து மீள்விக்கப்பட்டது