சூர்ப்பனகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும், முலையையையும் அரியும் இலக்குவன்

சூர்ப்பனகை என்பவள் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். இவள் அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கை. இவளது ஏனைய சகோதரர்கள் கும்பகர்ணன், விபீடணன், கரன் மற்றும் தூஷணன் ஆவார். 14 ஆண்டு வன வாசத்தின் போது இராமன், சீதை மற்றும் இலட்சுமணன் ஆகியோர் தண்டகாரண்யம் காட்டில் வாழ்ந்து வந்தபோது, சூர்ப்பனகை இராமன் மீது ஆசை கொண்டாள்.[1] சூர்பனகை ராமனை டையும் பொருட்டு சீதை கொலை செய்ய முயலகையில் அது தடுக்கப்பட்டு இலட்சுமணன்அவளது மார்பகங்களையும், மூக்கையும், காதுகளையும் வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த சூர்ப்பனகை தனது அண்ணன் இராவணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன், இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையின், அசோகவனத்தில் சிறை வைத்தான்.

சூர்ப்பனகையின் அழகு[தொகு]

சூர்ப்பனகை ஒரு அழகான மங்கை என்பது பல இடங்களில் மறைக்கப்படுகிற ஒரு நிகழ்வு.பொதுவாக அவள் அழகில்லாத பெண்ணாகவே கம்பராமாயணத்தில் சித்தரிக்கப்படுகிறாள். அவள் எத்தகைய அழகு மங்கை என்பதை கம்பன் இராமன் வாயிலாகவே வெளிப்படுத்துகிறார்.

பிறக்கும்போதே அவள் தன் தாய் கேசி மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களையும் அழகில் விஞ்சியிருந்தாள். அவள் கண்களின் அழகை முன்னிட்டு மீனாட்சி என்றும் அழைக்கப்பட்டாள்.

செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்

நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன, - (கம்பராமாயணம் ஆரணிய காண்டம் பாடல்:117)

பொருள்: சிவந்த கயல் மீன் போன்று பிறழும் கரிய நீண்ட கண்கள் கொண்டவள். தேன் ஊறும் தாமரை வசம் செய்யும் திருமகள் இலட்சுமி இவளே என்று இராமன் இயம்புகிறான்.

வால்மீகி ராமாயணத்தில்[தொகு]

கம்பராமாயணத்தில் மேற்படி இருந்தாலும், வால்மீகியில் அவ்வாறு இல்லை. அவள் ராமனைக் கண்டு மோகிக்கும்போது, கிழப்பருவம் எய்திய ஒரு ராட்சசியாகவே வர்ணிக்கப்படுகிறாள். அதன் காரணமாகவே ராமன் அவளைக் கிண்டல் செய்கிறான். அந்தக் கிண்டல் வினையாகிப் போக, அவள் சீதையைக் கொல்ல எத்தனிக்கிறாள். அச்சந்தர்ப்பத்தில் ராமன் அவளை இடைமறித்து, இலக்குவனிடம், அவளை அங்க ஈனப்படுத்த உத்தரவிடுகிறான்.

கம்பராமாயணத்தில், காதுகளையும், மூக்கையும், முலையையையும் அரியும் லட்சுமணன், மூலகதையான வால்மீகியில் காதுகளையும் மூக்கையும் மட்டுமே அரிகிறான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 5. சூர்ப்பணகைப் படலம்

வெளி இணைப்பு[தொகு]

மூல இராமாயணம் / இடதுசாரிகளின் ராமயாண விமர்சனம் - ஒரு சிறு ஒப்பாய்வு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்ப்பனகை&oldid=2575953" இருந்து மீள்விக்கப்பட்டது