மந்தரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மந்தரை மகாராணி கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தி. இவளை கூனி என்றும் அழைப்பார்கள். இவள் இராமன் மீது வெறுப்புற்றிந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. கைகேயியின் மகன் பரதன் அரசனாக வேண்டும் என்றே விரும்பினாள். அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் ஆலோசனைப்படி இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்றும் தனது மகனான பரதன் அரசனாக வேண்டும் என்றும் தசரத மன்னனிடம் வரம் கேட்டுப் பெற்றாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தரை&oldid=3832490" இலிருந்து மீள்விக்கப்பட்டது