சுபாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபாகு (Subahu) (சமக்கிருதம்: सुबाहु அரக்கர் குலத்தவனும், தாடகையின் மகனும், மாரீசனின் உடன்பிறந்தவனும் ஆவான்.

வரலாறு[தொகு]

சுபாகுவுடன், மாரீசன் மற்றும் அவர்களின் தாயான தாடகை, விசுவாமித்திர முனிவர் நடத்தும் வேள்விகளில், இறந்த விலங்குகளின் சதையும், எலும்புகளையும் வேள்வித்தீயில் கொட்டி, வேள்வி நிறைவுறாத படி, தீது செய்து கொண்டிருந்தனர்.

இவர்களது தீத்செயல்களை தடுத்து நிறுத்த, தசரதன் அனுமதியுடன், சிறுவர்களாக இருந்த இராமன் மற்றும் இலக்குமணன் துணையோடு, காட்டிற்குச் சென்று வேள்வி நடத்துகையில், வேள்விக்கு தீங்கு செய்ய வந்த தாடகை மற்றும் சுபாகு ஆகியவர்களை இராமர் தனது கூரிய அம்புகளால் கொன்றும், மாரீசனை கடலில் வீழ்த்தியும் விசுவாமித்திரரின் வேள்வியை நிறைவு செய்ய உதவினார். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாகு&oldid=3832503" இலிருந்து மீள்விக்கப்பட்டது