ராம ஜென்ம பூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராம ஜென்மபூமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராம ஜென்மபூமி
राम जन्मभूमि
ராம ஜென்மபூமி is located in உத்தரப் பிரதேசம்
ராம ஜென்மபூமி
ராம ஜென்மபூமி
ராம ஜென்மபூமி (உத்தரப் பிரதேசம்)
சர்ச்சைக்குரிய பகுதி
இருப்பிடம் அயோத்தி
பகுதி உத்திரப் பிரதேசம்
ஆயத்தொலைகள் 26°47′44″N 82°11′39″E / 26.7956°N 82.1943°E / 26.7956; 82.1943ஆள்கூற்று: 26°47′44″N 82°11′39″E / 26.7956°N 82.1943°E / 26.7956; 82.1943
பகுதிக் குறிப்புகள்
உரிமையாளர் நீதிமன்ற விசாணையில் உள்ளது

ராம ஜென்மபூமி, அயோத்தியில் இராமர் பிறந்த இடமென இந்துக்கள் நம்புகின்றனர். விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், சரயு ஆற்றின் கரையில் உள்ள அயோத்தி நாட்டு அரசன் தசரதனின் மூத்த மகனாக பிறந்தார் என இராமாயணம் எனும் இதிகாசத்தில் விளக்கப்பட்டுள்ளது. முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் ராம ஜன்ம பூமியும் ஒன்று.

ராம ஜென்மபூமி உத்திரப் பிரதேசத்தின், ஃபைசாபாதிலிருந்து எழு கிலோ மீட்டர் தொலைவிலும், லக்னோவிலிருந்து கிழக்கே 136 கிலோ மீட்டர் தொலைவில், சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.[1].

மொகலாய அரசர் பாபரின் படைத்தலைவர், இங்கிருந்த இராமர் கோயிலை இடித்துவிட்டு அதன் மேல் 1528-இல் தொழுகைப் பள்ளிவாசல் கட்டி அதற்கு பாப்ரி மசூதி என்று பெயர் சூட்டினார்.[2] [3] இவ்விடம் 1528 முதல் 1853 வரை இசுலாமியர்களின் தொழுகைப் பள்ளிவாசலாக இருந்தது.[4]

1863 முதல் 1949 முடிய இவ்விடத்தில் இந்துக்களும் இசுலாமியர்களும் வழிபடுவதற்கு வசதியாக, இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் இவ்விடத்தை இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் பிரித்துக் கொடுத்தனர். டிசம்பர் 6, 1992 இல் ஒன்றரை இலட்சம் கரசேவகர்கள் கொண்ட கூட்டம் பாபர் மசூதியை முழுவதுமாக இடித்து அவ்விடத்தில், இந்துக்கள் வழிபடக் குழந்தை இராமர் சிலையை நிறுவியது.

தொல்லியல் அகழ்வாராய்வு[தொகு]

இந்தியத் தொல்லியல் துறையினர் பிரச்சினைக்குரிய, ராமர் பிறந்ததாக கூறப்படும் இடத்தையும், பாபர் மசூதி இருக்கும் நிலத்தையும் 1970, 1992 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அகழ்ந்து பார்த்ததில், பாபர் மசூதிக்கு முந்தைய காலத்து தொன்மையான கட்டிடங்கள், பாபர் மசூதிக்கு கீழும் பக்கவாட்டிலும் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டெடுத்தனர்.[5].

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புகள்[தொகு]

பிரச்சினைக்குரிய இராம ஜன்ம பூமி – பாபர் மசூதி இடம் குறித்து செப்டம்பர் 30, 2010 இல் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய மேற்படி 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்து, தற்போது குழந்தை இராமர் சிலை நிறுவப்பட்ட இடம் ஒரு பகுதியாகவும், சன்னி வக்ஃப்போர்டு அமைப்புக்கு மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும்[6], நிர்மோகி அக்காரா அமைப்புக்கு மீதி உள்ள நிலத்தையும் வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[7]

உச்ச நீதிமன்ற தீர்ப்பு[தொகு]

ஜனவரி 27, 2013-இல் இந்திய உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பகுதிகள் ஏற்கனவே உள்ளது உள்ளபடி (status quo) மாநில அரசு நிர்வாகிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய இராம ஜன்மபூமி மற்றும் பாபர் மசூதி குறித்த அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல வழக்குகள் நிலுவை உள்ளதால், உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளது..[8]

மேற்குறிப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம_ஜென்ம_பூமி&oldid=2262079" இருந்து மீள்விக்கப்பட்டது