சடாயு
சடாயு | |
---|---|
![]() இராவணன் சடாயுவுடன் சண்டை செய்கிறான். |
சடாயு (வடமொழி: जटायू, ஜடாயு) இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் கழுகு வடிவிலான ஒரு பாத்திரம் ஆகும். இவன் கருடனின் தம்பியான அருணனின் மகன், சம்பாதியின் தம்பி. இராமனின் தந்தை தசரதனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தவன்.[1]
இராமன் சீதையுடன் வனவாசத்தில் இருக்கும் போது சீதையைத் தனியே விட்டு விட்டு வேட்டைக்குப் போகும் போது சீதைக்குத் துணையாக இருந்தவன் சடாயு. இராவணன் சீதையைச் சிறைப்பிடித்துச் செல்லும்போது அவனுடன் சண்டையிட்டு காயமடைகிறான். இராமன் வேட்டையில் இருந்து திரும்பி வரும்போது அவனிடம் நடந்த நிகழ்வை எடுத்துக் கூறிவிட்டு இறந்து விடுகிறான்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி (2000). ராமாயணம். சென்னை: வானதி பதிப்பகம்.