உள்ளடக்கத்துக்குச் செல்

வானதி பதிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானதி பதிப்பகம் என்பது தமிழ்நாட்டிலுள்ள புத்தகம் வெளியிடும் பதிப்பகங்களில் ஒன்றாகும். இதன் அலுவலகம் சென்னை, தியகராய நகர்த் தலைமையஞ்சலகம் அருகே அமைந்துள்ளது.

பெயர்

[தொகு]

வானதி திருநாவுக்கரசு என்பவர் 1955இல் கல்கியின் நினைவாக, அவரதுப் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பாத்திரங்களுள் ஒன்றான வானதி என்னும் பெயரையே தன் பதிப்பகத்துக்குச் சூட்டி, எல்லா வயதினருக்கும் ஏற்ற நூல்களை வெளியிடும் நிறுவனமாக, இப்பதிப்பகத்தை உருவாக்கினார். இதன் மூலம் பிரபல எழுத்தாளர்களின் புத்தங்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

நூல் வகைகள்

[தொகு]

கண்ணதாசனின் கவிதை நூல்கள், சமூகப் புதினங்கள், சரித்திர நாவல்கள்; அமரர் கல்கியின் அற்புதமான நூல்கள், சாண்டில்யன் எழுதிய கடல் புறா (3 பாகம்), யவன ராணி போன்ற அவரின் பல படைப்புகள், டாக்டர் எல். கைலாசத்தின் சரித்திரப் புதினங்களான மலர்ச்சோலை மங்கை மற்றும் எம்.எசு. உதயமூர்த்தியின், வாழ்வில் தன்னம்பிக்கையூட்டி மனிதனை மேம்படவைக்கும் உயரிய எண்ணங்களை வளர்க்கும் கட்டுரை நூல்கள், காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகளின் தெய்வத்தின் குரல் தொகுதி நூல்கள் என்று இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பதிப்பாளர்

[தொகு]

இப்பதிப்பகத்தின் மூலம் இதன் பதிப்பாளரான வானதி திருநாவுக்கரசர் சிறந்த பதிப்பாளர் என்னும் விருதினைப் பலமுறை பெற்றிருக்கிறார். திரு.வி.க., ராஜாஜி, ம.பொ.சி., அறிஞர் அண்ணா, காமராஜர், கவிஞர் கண்ணதாசன், வாரியார் சுவாமிகள், நீதியரசர் மு.மு. இஸ்மாயீல், நெ. து. சுந்தரவடிவேலு, எஸ்.ஏ.பி., சா.கணேசன், அ. ச. ஞானசம்பந்தன் என்று பலருடனும் நெருங்கிப் பழகிய இவர் காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகளிடம் பக்தி கொண்டவர். இவர் பதிப்பாளர் என்பதோடு மட்டுமின்றி நல்ல தமிழ் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் விரிவான வாழ்க்கைச் சரிதத்தை வெற்றிப் படிகள் எனும் தலைப்பில் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானதி_பதிப்பகம்&oldid=2008911" இலிருந்து மீள்விக்கப்பட்டது