உள்ளடக்கத்துக்குச் செல்

மால்யவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மால்யவான் (Malyaban or Malyavan), இலங்கையின் அரக்கர் குல வேந்தன் இராவணின் தாய்வழி தாத்தா சுமாலியின் மூத்த சகோதரும், மரியாதைக்குரிய தலைமை அமைச்சரும் ஆவார். [1]

சுகேது என்கின்றவருக்குப்பிறந்த மூவரில் மூத்தவன் மால்யவான். இளையவர்கள் சுமாலி (இராவணனின் தாய்வழித் தாத்தா) மற்றும் மாலி ஆவர். இவர்கள் இலங்கையை ஆண்ட போது, குபேரன் இவர்களிடமிருந்து இலங்கையைப் பறித்தான்.

இராமாயணத்தில்

[தொகு]

இராமருடன் போரிடாது, அசோக வனச் சீதையை விடுதலைச் செய்ய இராவணனுக்கு அறிவுரை வழங்கியவர் மால்யவான். [2]

இராம - இராவணப் போரில், இராவணன் மடிந்த பின், இலங்கை வேந்தனாக பதவியேற்ற வீடணனின் தலைமை அமைச்சராக தொடர்ந்தவர் மால்யவான்.

குடும்பம்

[தொகு]

சுகேது என்ற அரக்கருக்கு பிறந்த மூவரில் மூத்தவன் மால்யவான். இளையவர்கள் சுமாலி மற்றும் மாலி ஆவர். மால்யவானின் மனைவி சுந்தரி. மால்யவான் - சுந்தரி இணையரின் எட்டு குழந்தைகள் முறையே: வஜ்ஜிர முஷ்டி, விருபாக்சன், துர்முகன், சுப்தகன், யாக்கியகோப், மத், உன்மத்தன் மற்றும் பெண் குழந்தை அனலா. ஆவார். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Death of Malyavan". Archived from the original on 2020-10-19. பார்க்கப்பட்ட நாள் 2018-02-02.
  2. Malyavan Urges Ravana to Make Peace
  3. "Malyavan". Archived from the original on 2018-01-30. பார்க்கப்பட்ட நாள் 2018-02-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்யவான்&oldid=3717135" இலிருந்து மீள்விக்கப்பட்டது