ஹோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இக்கட்டுரை, Holi எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.


Holi
A Holi Festival - Krishna Radha and Gopis.jpg
God Krishna playing Holi with Radha and other Gopis
பிற பெயர்(கள்) Festival of colours
கடைபிடிப்போர் இந்தியர்s (mainly Hindus, Sikhs,Muslims, Buddhists and Jains), almost all Nepalese (mainly Hindus and a fair amount of Buddhists)
கொண்டாட்டங்கள் 3 - 16 days
அனுசரிப்புகள் March 6
தொடக்கம் Phalgun Purnima or Pooranmashi (Full Moon)
நாள் March
2016 இல் நாள் date missing (please add)


ஹோலி அல்லது ரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, டிரினிடேட், இங்கிலாந்து, மொரீசியஸ் மற்றும் ஃபிஜி போன்ற இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் டோல்யாத்திரை (டெளல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன் மற்றும் பர்சனா நகரங்களில் ஹோலி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தளங்களாக இருக்கும் [1].

துல்ஹேதி , துலாந்தி அல்லது துலேந்தி எனவும் அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) அல்லது சோட்டி ஹோலி (சிறிய ஹோலி) எனவும் அழைக்கப்படும். ஹிரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரஹலாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன. ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரஹலாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் காம தகனம் எனக் குறிப்பிடப்படுகின்றது.

ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி/மார்ச்) (பங்குனிப் பெளர்ணமி) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தின் இறுதியில் வரும். 2009 ஆம் ஆண்டில் ஹோலிப் பண்டிகை (துலாந்தி ) மார்ச் 11 ஆம் தேதியன்றும் ஹோலிகா தகனம் மார்ச் 10 ஆம் தேதியன்றும் கொண்டாடப்பட்டது.

பஞ்சமிக்கு (முழு நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள்) சில நாட்கள் கழித்து வருகின்ற ரங்கபஞ்சமி வண்ணங்களைக் கொண்டு பண்டிகை முடிவடைவதை அறியலாம்.

முக்கியத்துவம்[தொகு]

வைஸ்ணவ சமயவியலில் அரக்கர்களின் அரசனான ஹிரண்யகசிபு பிரம்மாவிடம் தன்னை யாராலும் கொல்ல முடியாத வரத்தைப் பெற்றிருந்தான். தனது கடுமையான தவத்தின் பயனாய் அவன் இவ்வரத்தைப் பெற்றான். தவத்தின் முடிவில் அவன், "பகலிலோ அல்லது இரவிலோ; வீட்டின் உள்ளேயோ அல்லது வெளியிலோ, பூமியிலும் இல்லாமல் வானத்திலும் இல்லாமல்; மனிதனாலும் அல்லது விலங்குகளாலும் அல்லாமல்; ஆயுதத்தாலும் அல்லது சாஸ்த்திர முறையிலும் அல்லாமல்" போன்ற எவ்விதத்தாலும் தான் கொல்லப்படக் கூடாது என்ற வரத்தைக் கோரிப் பெற்றான். இதனால் அவன் மிகவும் ஆணவம் பிடித்தவனாக வளர்ந்தான். மேலும் அவன் சொர்க்கத்தையும் பூமியையும் தாக்கினான். மக்கள் கடவுளை வழிபடத் தடை விதித்து தன்னை வழிபடும்படி கட்டளையிட்டான்.

இதற்கு மாறாக ஹிரண்யகசிபுவின் மகன் (பிரஹலாதன்), கடவுள் விஷ்ணுவின் மீது மிகுந்த பக்தியுடைவனாக இருந்தான். ஹிரன்யகசிபுவின் பல அச்சுறுத்தல்களுக்குப் பிறகும் பிரஹலாதன் கடவுள் விஷ்ணுவை வழிபடுவதைத் தொடர்ந்தான். இதனால் அவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது, ஆனால் விஷம் அவன் வாயில் ஊற்றப்பட்டவுடன் பழச்சாறாக மாறியது. அவன் யானைகளைக் கொண்டு பிரஹலாதனை மிதிப்பதற்கு ஆணையிட்டாலும், அவனுக்கு காயமேதும் ஏற்படவில்லை. அவன் பசிமிகுந்த கொடிய விஷப்பாம்புகள் உள்ள அறையில் அடைக்கப்பட்டாலும் எந்த தீங்குமின்றி தப்பினான். அவனது மகனைக் கொல்வதற்கு ஹிரன்யகசிபுவினால் செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இறுதியாக அவனது சகோதரி ஹோலிகாவின் மடியில் உள்ள சிதையின் மீது அவனது இளம் மகன் பிரஹலாதனை அமர ஆணையிட்டான். அவள் நெருப்பினால் இறக்க முடியாத படி அதிலிருந்து காப்பாற்றும் தன்மையுடைய சால்வையினை அணிந்திருந்தாள். பிரஹலாதன் தனது தந்தையின் கட்டளைக்குக் கீழ்படியத் தயாரானான். ஆனால் அவன் தன்னைக் காக்கும்படி விஷ்ணுவை வேண்டினான். நெருப்பு மூட்டப்பட்டவுடன் ஹோலிகாவைச் சுற்றியிருந்த சால்வை நழுவி பிரஹலாதனைச் சுற்றியதால் காயமின்றி தப்பினான். மாறாக ஹோலிகா நெருப்பில் எரிந்து இறந்தாள், இதை அனைவரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹோலிகா எரிக்கப்பட்டதே ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

ராதா மற்றும் கோபியர்கள் இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு ஹோலி கொண்டாடுகின்றனர்

பின்னர் கடவுள் விஷ்ணு நரசிம்ம (சிங்க முகமும், மனித உடலும் கொண்ட அவதாரம்) அவதாரத்தில் வந்து ஹிரன்யகசிபுவை அந்திப் பொழுதில் (இரவிலும் அல்லாமல் பகலிலும் அல்லாமல்) அவனது வீட்டின் வாயில் மாடத்தில் (வீட்டிற்கு உள்ளேயும் அல்லாமல் வெளியேயும் அல்லாமல்) அவரது மடியில் அடக்கி வைத்து (வானத்திலும் அல்லாமல் நிலத்திலும் அல்லாமல்) அவனது கூரிய நகங்களாலேயே அவனைக் கிழித்து (ஆயுதத்தாலும் அல்லாமல் சாஸ்த்திரத்தாலும் அல்லாமல்) அவனைக் கொன்றார்.

கிருஷ்ண பகவான் வளர்ந்த இடமான விருந்தாவன் மற்றும் மதுராவில் இப்பண்டிகை 16 நாட்கள் கொண்டாடப்படுகிறது (கிருஷ்ணன் மீது ராதா வைத்திருந்த தெய்வீகக் காதலுக்காக அனுசரிக்கப்படும் ரங்கபஞ்சமி வரை). கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் குறும்புத்தனமாக விளையாடியதால் கொண்டாடப்படும் பண்டிகை என்று நம்பப்படுகின்றது. கிருஷ்ணர் தனது தாயாரிடம் தான் கரிய நிறத்திலும் ராதா (சக்தி அல்லது உலகைச் செலுத்தும் ஆற்றல்) அழகான தோல் நிறத்துடனும் இருப்பது தொடர்பாகக் குறை கூறியதாக நம்பப்படுகிறது. அதனால் கிருஷ்ணரின் தாயார் ராதாவின் முகத்தில் நிறத்தைப் பூச முடிவு செய்தார். அன்பைக் கொண்டாடும் காலமான வசந்த காலத்தில் இந்தப் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

ஹோலிப் பண்டிகை உருவானதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகின்றது. இக்கதை காதல் கடவுளான காமதேவனைப் பற்றியது. பார்வதிதேவி சிவ பெருமானை மணப்பதற்கு உதவும் பொருட்டு சிவபெருமானின் மீது காமன் தன் ஆயுதத்தைச் செலுத்தி அவரது தவத்தைக் கலைத்த போது காமனின் உடல் அழிந்தது. சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்ததால் சக்தி வாய்ந்த அவரது பார்வையைத் தாங்க முடியாமல் காமனின் உடல் சாம்பலானது. காமனின் மனைவி ரதியின் (மனக்கிளர்ச்சி) வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவரை உயிர்ப்பித்தார். ஆனால் உணர்வுப்பூர்வமாகவும் ஆன்மீக ரீதியாகவும் மட்டுமே அன்பை வெளிப்படுத்தக்கூடிய உடல் ரீதியாக காமத்தை வெளிப்படுத்த முடியாத மன அடிப்படையான உருவத்தை அவருக்கு உருவாக்கினார். இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையிலேயே ஹோலி நெருப்பு கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.

பிரபஞ்சத்தில் ஒளியின் (தேஜா) திருவிழாவாக ஹோலி எண்ணப்படுகிறது. இப்பண்டிகையின் போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர்கள் பிரபஞ்சத்தில் பயணிக்கின்றன. இதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி சூழ்நிலையில் உள்ள மூலப் பொருட்களின் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன.[2]

ஹோலி சடங்குகள்[தொகு]

7 ஆம் நூற்றாண்டு சமஸ்கிருத நாடகமான ரத்னாவளியில் ஹோலி கொண்டாடப்பட்டதற்கான பண்டையகால எழுத்துப்பூர்வச் சான்றுகள் உள்ளன [3]. ஹோலியானது நிறப்பொடிகளை ஒருவருக்கொருவர் தூவிக் கொள்ளுதல் மற்றும் பைக்காரிஸ் எனப்படும் மிகப்பெரிய பீச்சுக் குழாய் அல்லது நீர்ப்பாய்ச்சும் துப்பாக்கிகளில் நிறம் மற்றும் மணமுடைய நீரினை நிரப்பி பாய்ச்சுதல் போன்ற சடங்குகளைக் கொண்டுள்ளது. உண்மையில் திருவிழா தொடங்குவதற்கு வெகுநாட்களுக்கு முன்னரே 'ஹோலி மிலன்' அல்லது பைதாக்ஸ் போன்ற பண்டிகை தொடர்பான பாடல்களும், ராதா கிருஷ்ணன் காவியக் காதல் தொடர்பான பாடல்களும் பாடப்படுகிறது. குறிப்பாக "ஹோரி" எனப்படும் நாட்டுப்புறப் பாடல்களை பாடுதல் போன்ற இசைக் கோலாகலங்களுடன் தொடங்குகிறது. ஆஜ் பைரஜ் மெய்ன் ஹொலி ரே ரசியா போன்ற மரபு சார்ந்த நாட்டுப்புறப்பாடல்கள் பல தலைமுறைகளாக உள்ளன.

பண்டிகைக்கான உணவுத் தயாரிப்பும் வெகு நாட்களுக்கு முன்னரே தொடங்கிவிடும். குஜியா, அப்பளம், காஞ்சி மற்றும் மால்புவாஸ், மாத்ரி, பூரன் போலி, டாஹி படாஸ் உள்ளிட்ட பலவகையான சிற்றுண்டிகளும் ஹோலிக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதற்காக தயாரிக்கப்படும். ஹோலி அன்று இரவில் பாங்க் கடைதல் (கன்னாபிஸ்) எனப்படும் பாலை உலுக்கித் தயாரிக்கப்படும் உணவு தயாரிக்கப்படுகிறது.

ஹோலிகா தகனம்: ஹோலி நெருப்பு[தொகு]

ஹோலிகா தகனம் (ஹோலி நெருப்பு)

ஹோலி நெருப்பு அல்லது ஹோலிகாவை எரித்தலே இந்தப் பண்டிகையின் முக்கியத்துவமாக வலியுறுத்தப்படுகின்றது. ஹோலியின் பாரம்பரியமான நெருப்பு மூட்டுதலுக்கான ஆரம்பம் ஹோலிகா, ஹோலகா மற்றும் புட்டன்னா போன்ற தீமையின் பிரதிநிதியான அரக்கர்களை எரித்தல் அல்லது மற்றவர்களுக்காக மதனை எரித்தல் மூலம் தொடங்கியது.

ஹோலியன்று மரபு ரீதியாக நெருப்பு மூட்டுவது, இந்துமத புராணத்தின்படி பக்த பிரஹலாதனைக் கொள்ள முயற்சித்த அரக்கன் ஹிரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகாவை எரிப்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காக செய்யப்படுவதாகும் [3].

விஜயதசமி (தசரா) அன்று ராவண தகனம் செய்வது போன்று திருவிழாக்களில் உருவ பொம்மையை எரிக்கும் பிற பண்டிகைகளை ஹோலி பண்டிகை ஒத்துள்ளது. உலகம் முழுதும் பல மதங்களிலும் தீய சக்திகளின் அழிவை ஹோலிகா தகனம் போன்று குறிப்பால் உணர்த்துகிறார்கள். தற்போது பிரஜா மண்டலத்தின் சில பகுதிகளைத் தவிர பிற இடங்களில் உருவ பொம்மை எரிப்பது அழிக்கப்பட்டுவிட்டது. அதற்கு பதிலாக அதனையொத்த பிற வடிவங்கள் கடைபிடிக்கப்படுகிறது. எனினும் தெரு மூலைகள், பொது இடங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் மரத்தாலான உருவபொம்மைகளைக் காணலாம். இந்த சடங்குகளைச் செய்த பிறகு இதனை நெருப்பு மூட்டி அந்த நெருப்பை மக்கள் வணங்குவார்கள். அதற்கு அடுத்த நாள் இந்த வெற்றியை துலேந்தி தினமாகக் கொண்டாடுவார்கள்.

துலேந்தி[தொகு]

அனைத்து சாத்தியமுள்ள வர்ணங்களில் அபீர் மற்றும் குலால் போன்றவை கொண்டாட்டத்தின் முதன்மை மூலப்பொருட்களாக உள்ளன. அடுத்து பைகாரிஸைப் பயன்படுத்தி வண்ணம் கலந்த நீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. வண்ணம் கலந்த நீர் என்பது தேசுப் பூக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றது. தேசுப் பூக்களை மரங்களிலிலிருந்து முதலில் பறித்து வெயிலில் காய வைக்கப்பட்டு அரைக்கப்பட்ட பின்னர் அதனுடன் நீர் சேர்த்து ஆரஞ்சு-மஞ்சள் வண்ணங்கள் கொண்ட நீராக தயாரிக்கின்றனர். இலட்சக்கணக்கில் கோள வடிவங்களால் மூடப்பட்ட சிவப்பு பொடி, உடனடியாக உடைக்கப்பட்டு கொண்டாட்டப் பகுதி முழுவதும் பொடியால் நிரப்பப்படும் மற்ற மரபு ரீதியான ஹோலிப் பொருட்கள் தற்போது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன.[4]

மண்டல சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள்[தொகு]

நேபாளம்[தொகு]

ஹோலிகா தகனம், காத்மண்டு, நேபாளம்.

நேபாளத்தில் தாஷைன் (இந்தியாவில் இது தசரா என்று அழைக்கப்படுகின்றது) மற்றும் திஹார் அல்லது தீபாவளி (இந்தியாவிலும் தீபாவளி என்றே அழைக்கப்படுகின்றது) போன்றவை போலவே ஹோலி மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் 80% மேற்பட்ட மக்கள் இந்துக்கள் [5], அங்கு பெரும்பாலான இந்துத் திருவிழாக்கள் தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் மதங்களைக் கடந்து ஒவ்வொருவரும் கொண்டாடுகிறார்கள். அதாவது முஸ்லீம்கள் கூட இப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துவர்கள் கூட அவர்களின் லெண்ட் நேரத்தில் ஹோலி வந்த போதும் அதனைக் கொண்டாடுவார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஹோலி தினம் நேபாளத்தில் தேசிய விடுமுறை தினங்களில் ஒன்றாகும்.

மக்கள் வெளிவந்து தங்கள் அருகில் குடியிருப்பவர்களுடன் ஒருவொருக்கொருவர் நிறங்களைத் தூவுதல் மற்றும் நீரை வீசுதல் மற்றும் பீய்ச்சுதல் மூலம் ஹோலியைக் கொண்டாடுவார்கள். ஒருவருக்கொருவர் லோலா (நீரடைக்கப்பட்ட பலூன் எனப் பொருள்படும்) எனப்படும் நீரடைக்கப்பட்ட பலூனினை வீசிக்கொள்வது மிகவும் பிரபலமான செயல்பாடுகளில் ஒன்றாகும். மேலும் பலர் மக்கள் தங்கள் அருந்தும் பானம் மற்றும் உணவில் 'பாங்க்' கலந்து சிவராத்திரியைக் கடைபிடிப்பார்கள். இத்திருவிழாவின் போது வெவ்வேறு வண்ணங்களின் கலவையில் விளையாடுவதால் அனைத்துக் கவலைகளும் கலைந்து வாழ்க்கை மிகவும் வண்ணமயமாக மாறும் என நம்பப்படுகிறது.

இந்தியா[தொகு]

பஞ்சாப்

பஞ்சாபில் சீக்கியர்கள் இதே போன்ற பண்டிகையை ஹோலா மொஹல்லா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இப்பண்டிகை அங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உண்மையில் அனந்தபூர் சாஹிப் ஹோலி கொண்டாட்டங்கள் இந்தியா முழுவதும் பிரபலமான ஒன்றாகும். வெளிநாட்டு மக்கள் கூட பஞ்சாப் சென்று வடக்கத்திய முறையில் ஹோலி கொண்டாடுகிறார்கள்.

உத்தரப் பிரதேசம்

ஹோலி சமயத்தில் பார்சானா என்ற இடத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இங்கு பிரபலமான லத் மர் ஹோலியானது ராதா ராணி கோவிலின் நீண்ட வளாகத்தில் கொண்டாடப்படுகின்றது. லத் மர் ஹோலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள். அவர்கள் முன்னிலையில் பெண்கள் ஆண்களைத் தடியால் அடிப்பார்கள். மேலும் உணர்ச்சிப்பூர்வமாக ஹோலி பாடல்களைப் பாடுவார்கள் அல்லது ஸ்ரீ ராதே அல்லது ஸ்ரீ கிருஷ்ணா என உரக்கக் கூறுவார்கள். பிரஜ் மண்டலத்தில் பாடப்படும் ஹோலி பாடல்கள் சுத்தமான பிரஜ் மொழியில் பாடப்படுகின்றன.

பர்சானாவில் கொண்டாடப்படும் ஹோலியில் பெண்கள் ஆண்களைத் தடிகளுடன் விரட்டுவது தனித்துவமான ஒன்றாகும். ஆண்கள் கூட பெண்களின் கவனத்தைக் கவர்ந்து அவர்களை அழைக்கும் விதமாக தூண்டல் பாடல்களைப் பாடுவார்கள். பெண்கள் அதை எதிர்க்கும் விதமாக லத்தி எனப்படும் நீண்ட தடிகளைக் கொண்டு அடிபட முடியாத படி தடுப்புக்கவசத்தை அணிந்துள்ள ஆண்களை அடிப்பார்கள். உ.பி.யில் உள்ள சுல்தான்பூரில் ஹோலி வேடிக்கையாகக் கொண்டாடப்படுகின்றது. அங்குள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

கிருஷ்ண பகவான் பிறந்த இடமான மதுரா மற்றும் விருந்தாவன் ஆகியவற்றில், இந்நாட்களில் பாரம்பரிய மரபுப்படி சிறப்புப் பூஜைகளைச் செய்து பகவான் கிருஷ்ணரை வணங்குகிறார்கள். இங்கு திருவிழா பதினாறு நாட்களில் நிறைவடைகிறது [1]. பிரஜ் மண்டலம் முழுதும் மற்றும் அதன் அருகிலுள்ள ஹத்ராஸ், அலிகார், ஆக்ரா போன்ற பகுதிகளில் ஏறக்குறைய மதுரா, விருந்தாவன் மற்றும் பார்சானாவில் கொண்டாடப்படுவது போன்றே ஹோலி கொண்டாடப்படுகின்றது.

உத்திரப் பிரதேசத்தின் வடகிழக்கு மாவட்டமான கோரக்பூரில் இந்நாள் ஹோலி தினமாகக் காலையில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் மக்களிடையே சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான தினமாக அனுசரிக்கப்படுகின்றது. இது "ஹோலி மிலன்" எனப்படுகிறது. இதில் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று ஹோலி பாடல்களைப் பாடி நிறப்பொடிகளைப் (அபீர்) பூசுவதன் மூலம் தங்கள் நல்லுணர்வினை வெளிப்படுத்துகிறார்கள். இந்துக்களின் நாள்காட்டிப்படி ஆண்டின் கடைசி பங்குனி மாதத்தின் இறுதி நாளில் ஹோலி வருவதாகவும் கருதப்படுகின்றது. ஹோலியன்று மக்கள் மாலையில் புது ஆண்டு இந்து நாள்காட்டியுடன் (பஞ்சாங்கம்) அடுத்த ஆண்டிற்கான திட்டமிடுதலில் ஈடுபடுவார்கள்.

ராஜஸ்தானில் உள்ள புஷ்கரில் ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
பீகார்

பீகாரில் மற்ற வட இந்தியப் பகுதிகளில் கொண்டாடப்படும் அதே உணர்வு மற்றும் புத்துணர்வுடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இங்கும் ஹோலிகா பற்றிய பாரம்பரியக் கதைகள் பொதுவானதாகவே இருக்கிறது. பங்குனி மாதத்தின் பெளர்ணமி தின மாலையில் மக்கள் நெருப்பை மூட்டுவார்கள். அவர்கள் சாண வரட்டிகள், அராட் அல்லது ரேடி மற்றும் ஹோலிகா மரக்கட்டைகள், புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் மற்றும் தேவையற்ற காய்ந்த இலைகள் ஆகியவற்றை அந்த நெருப்பில் போட்டு எரிப்பார்கள். தொடர்ந்து பாரம்பரியத்தை கடைபிடிக்கும் மக்கள் தங்கள் வீட்டினை அந்நாளில் சுத்தப்படுத்துவார்கள்.

ஹோலிகா சமயத்தில் மக்கள் நெருப்புக்கு அருகில் ஒன்று கூடுவார்கள். அங்குள்ள மூத்த குடிமகன் அல்லது புரோகிதர் தீபமேற்றுவார். பின்னர் அவர் மற்றவர்களையும் அழைக்கும் விதமாக மற்றவர்கள் மீது வண்ணங்களைப் பூசுகிறார். பண்டிகையின் அடுத்த நாள் வண்ணங்களுடனும் நிறைய கேளிக்கைகளுடனும் கொண்டாடப்படுகின்றது.

சிறுவர்களும் இளைஞர்களும் இந்த திருவிழாவில் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைகின்றனர். பொதுவாக இத்திருவிழா வண்ணங்களுடனே கொண்டாடப்பட்ட போதும் சில இடங்களில் மக்கள் சகதிகளிலும் ஹோலியைக் கொண்டாடி மகிழ்கின்றனர். நாட்டுப்புறப்பாடல்கள் உச்சஸ்தாயியில் பாடப்படும். மேலும் மக்கள் டோலக்கின் இசைக்கேற்பவும் ஹோலியின் ஆர்வத்திலும் நடனமாடுவார்கள்.

திருவிழா மனநிலையை அதிகரிக்க கடையப்பட்ட பாங்க் பகோராஸ் மற்றும் தண்டை போன்ற சுவைமிக்க பல்வேறு பதார்த்தங்களுடன் இணைத்து உண்ணப்படுகின்றன.

வங்காளம்

டோல் பூர்ணிமா தினத்தன்று அதிகாலையில், மாணவர்கள் குங்குமப்பூ நிறத்தில் ஆடைகளை உடுத்தி நறுமணமிக்க பூக்களால் செய்யப்பட்ட மாலைகளை அணிவார்கள். அவர்கள் ஏக்தரா, டூப்ரி, வீணை போன்ற இசைக் கருவிகளை இசைத்து பாடிக்கொண்டே நடனமாடுவார்கள். அது பார்ப்பவர்களைக் கவரும் விதத்தில் இருக்கும். மேலும் அந்த நினைவுகள் பல வருடங்களுக்கு நினைவில் இருக்கும். ஹோலிப் பண்டிகையானது 'டோல் ஜத்ரா', 'டோல் பூர்ணிமா' அல்லது 'வசந்தகாலத் திருவிழா' போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. திருவிழாவில் கிருஷ்ணா மற்றும் ராதாவின் சிலைகள் அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டு நகரம் அல்லது கிராமத்திலுள்ள முக்கிய தெருக்களில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு மிகவும் கண்ணியமான முறையில் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் அச்சிலைகளை ஊஞ்சலில் வைத்து ஊஞ்சலாட்டுவார்கள். அப்பொழுது பெண்கள் அவற்றைச் சுற்றி நடனமாடிப் பக்திப்பாடல்களைப் பாடுவார்கள். அப்போது ஆண்கள் அவர்களின் மீது வண்ணம் கலந்த நீரைப் பீய்ச்சுதல் மற்றும் அபீர் எனப்படுகின்ற நிறப்பொடியைத் தூவுதல் போன்றவற்றைச் செய்வார்கள்.

வீட்டின் தலைவர் கிருஷ்ண பகவான் மற்றும் அக்னிதேவனை வணங்கி விரதமிருப்பார். பின்னர் அவர் கிருஷ்ணர் சிலையில் குலால் எனப்படும் நிறங்களைப் பூசி, கிருஷ்ணர் மற்றும் அக்னிதேவனுக்கு "போக்" எனப்படும் படையலைப் படைப்பார். இதன் பிறகு பாரம்பரிய சடங்குகள் முடிவடையும்.

சாந்திநிகேதனில் ஹோலிப் பண்டிகை சிறப்பான இசையைக் கொண்டுள்ளது.

மால்போவா, கீர் சந்தேஷ், பாசந்தி சந்தேஷ் (குங்குமப்பூ உடன்),குங்குமப்பூ பால், பாயசம் உள்ளிட்டவை பாரம்பரியமான பதார்த்தங்களாகும்.

ஒரிசா

ஒரிசா மக்களும் ஹோலியை இதே விதமாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அங்கு கிருஷ்ணர் மற்றும் ராதா சிலைகளுக்கு பதிலாக பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தின் கடவுளான ஜகன்நாதர் சிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

குஜராத்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிறங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகின்றது. பங்குனி மாதத்தின் முழு நிலவு நாளில் வரும் முக்கிய இந்துத் திருவிழாவான ஹோலிப் பண்டிகை விவசாயத்தில் குளிர்கால அறுவடை காலத்தின் அறிகுறியாகும்.

கிராமங்களின் முக்கிய இடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் நெருப்பு மூட்டப்படும். தீமை அழிந்து நன்மை வெற்றியடைந்ததின் அறிகுறியான நெருப்பு மூட்டும் நிகழ்வை மக்கள் பாட்டுபாடி நடனமாடிக் கொண்டாடுகிறார்கள். குஜராத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் ஹோலியை மிகுந்த உற்ச்சாகத்துடனும் நெருப்பைச் சுற்றி நடனமாடியும் கொண்டாடுகிறார்கள்.

கிருஷ்ணனும் மற்ற மாடு மேய்க்கும் சிறுவர்களும் வெண்ணெய் திருடியதையும் மற்ற 'கோபியர்கள்' அதை தடுக்க முயன்றதையும் நினைவு கூறும் வகையில் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத்தில் உள்ள அஹமதாபாத்தில் தெருவில் உயரத்தில் கட்டி வைக்கப் பட்டிருக்கும் வெண்ணெய் நிரம்பிய பானையை ஆண்கள் மனித பிரமிடுகள் மூலமாக அடைந்து அதை உடைக்க முயற்சிப்பார்கள். அச்சமயம் பெண்கள் நிறம் கலந்த நீரை அவர்கள் மீது தெளித்து அதைத் தடுக்க முயற்சிப்பார்கள். இந்த நேரத்தில் கிருஷ்ணர் தங்கள் வீடுகளுக்கு வெண்ணெய் திருடுவதற்காக வரலாம் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிறங்களால் நனைக்கப்பட்ட ஆண்கள் பெரிய ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கேலி செய்யப்படுவார்கள். இறுதியாக பனையை உடைப்பவரே அந்த சமூகத்தில் அந்த ஆண்டின் ஹோலி ராஜாவாக முடிசூட்டப்படுவார்.

பல இடங்களில், கூட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வழக்கப்படி தங்கள் சகோதரியின் கணவர் மீது கேலியான கோபம் கொண்டு தங்கள் சேலையில் கயிற்றைச் சுற்றி அதில் அவர்களை அடிப்பார்கள். மேலும் அவரை நிறங்களால் அமிழ்த்த முயற்சிப்பார்கள், மாறாக சகோதரியின் கணவர் மாலையில் இனிப்புப் பண்டங்களை அவர்களுக்குக் கொடுப்பார்.

தோழியுடன் ஹோலி பண்டிகை கொண்டாடும் இந்திய நடிகை நாராயணி சாஸ்த்ரி, மும்பை, 2011.
மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் ஹோலிப் பண்டிகை முக்கியமாக ஹோலிகாவை எரிப்பது தொடர்புடையதாகவே இருக்கின்றது. ஹோலி பெளர்ணமி இங்கு சிம்கா எனவும் கொண்டாடப்படுகிறது. திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இளைஞர்கள் சுற்றியுள்ள இடங்களுக்கு சென்று விறகுக் கட்டைகள் மற்றும் பணம் போன்றவற்றைச் சேகரிக்கின்றனர். ஹோலி தினத்தன்று சுற்றுப்புறத்திலிருந்து எடுத்து வரப்பட்ட அனைத்து விறகுக் கட்டைகளும் பெரிய குவியலாக அடுக்கி வைக்கப்படுகின்றன. மாலையில் அவற்றிற்கு நெருப்பு மூட்டப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டாரும் இனிப்புகள் மற்றும் முழுமையான உணவினைத் தயார் செய்து அக்னிக் கடவுளுக்குப் படைப்பார்கள். பூரன் போலி என்பது இங்கு முக்கிய உணவுப்பண்டமாகும். மேலும் சிறுவர்கள் " ஹோலி ரே ஹொலி புரானச்சி போலி " எனக் கத்துவார்கள். சிம்கா அனைத்து தீமைகளையும் அழித்தலுடன் தொடர்புடையது. வட இந்தியாவைப் போல் இரண்டாவது நாளில் வண்ணங்களைக் கொண்டு கொண்டாடாமல், இங்கு பாரம்பரியமாக ரங்கபஞ்சமி அன்று வண்ணங்களுடன் கொண்டாட்டப்படுகின்றது.

மணிப்பூர்

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் மணிப்பூர்வாசிகள் ஹோலிப் பண்டிகையை ஆறு நாட்கள் கொண்டாடுகின்றனர். இது வைஷ்ணவ மதத்துடன் பதினெட்டாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பண்டிகையான யாசாங்குடன் இணைந்துவிட்டது. பாரம்பரியமாக பங்குனி முழுநிலவு இரவில், 'தாபல் சோங்க்பா' என்றழைக்கப்படும் ஒரு குழு நாட்டுபுற நடனமும் அதனோடுக் கூட நாட்டுபுறப் பாடல்களும் உள்ளூரைச் சார்ந்த மேளக்காரர்களின் ராகம் நிறைந்த தாளங்களையும் இளைஞர்கள் இரவில் நிகழ்த்துவார்கள். இருப்பினும் இப்போது இந்த நிலவொளிக் கொண்டாட்டம் நவீன இசைக்குழுக்களையும் ஒளிர் விளக்குகளையும் கொண்டிருக்கின்றன. கொண்டாட்டத்திற்கு எரியவிடுவதற்காக கொப்புகளும் வைக்கோலும் வைத்துக் கட்டிய கூரை வேய்ந்த குடிசையும் ஒழுங்குச் செய்யப்படுகின்றன. ஆண்கள், தங்களோடு சேர்ந்து 'குலால்' விளையாடுவதற்காகப் பெண்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும். கிருஷ்ணர் கோவில்களில் பக்தர்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பாரம்பரியத் தலைப்பாகைகளை அணிந்துக்கொண்டு பக்திப் பாடல்களைப் பாடியும் நடனங்கள் ஆடியும் 'குலால்' விளையாடுகின்றனர். பண்டிகையின் கடைசி நாளின் போது இம்பாலுக்கு அருகில் இருக்கும் முக்கிய கிருஷ்ணர் கோவிலிற்கு பெரிய ஊர்வலங்கள் நடத்தப்பட்டு அங்கு பலதரப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

தென்னிந்தியா

கொச்சியிலுள்ள மட்டன்சேரி பகுதியில் 22 வேறுபட்ட சமுதாயத்தினர்கள் ஒன்றுசேர்ந்து வாழ்கின்றனர். மேலும் மேற்குக் கொச்சியிலிருக்கும் சேர்லை பகுதியில் கொங்கனிப் பேசும் கௌட சாரஸ்வாத் பிராமணர்களும் (GSB) ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அவர்கள் அதை கொங்கனியில் உக்குளி என்றும் அல்லது மலையாளத்தில் மஞ்சள் குளி என்றும் அழைக்கின்றனர். கோசரிபுரம் திருமலைக் கோவில் என்றழைக்கப்படும் மதிப்புவாய்ந்த கொங்கனிக் கோவிலில் நடத்தப்படுகின்றது. 2008 ஆம் ஆண்டின் உக்குளியானது 23 மார்ச் 2008 அன்று சேர்லையில் கொண்டாடப்பட்டது. பாகல்கோட்டில் ஹோலிப் பண்டிகை இன்னும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது. ஹோலிப் பண்டிகையன்று பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகின்றது. மேலும் பெங்களூரில் 2009 ஆம் ஆண்டில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் போன்ற சில MNC நிறுவனங்கள் ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்தன. குழந்தைகளும் பெரியோர்களும் ஹோலியை ஒரேமாதிரியாக கொண்டாடுகின்றனர்.

காஷ்மீர்

காஷ்மீரில் குடிமக்களும் இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும் கூட ஹோலியைக் கொண்டாடுகின்றனர். இங்கு ஹோலி என்பது கோடைப் பயிர்களை அறுவடை துவங்குவதை குறிக்க மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும். மேலும் இப்பண்டிகை வண்ணம் கலந்த நீரையும் தூளையும் தூக்கி எரிந்து பாடலோடும் ஆடலோடும் கூடக் கொண்டாடப்படுகின்றது.

நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் இயக்கத்தினால் நடத்தப்படும் ஹோலி கொண்டாட்டங்கள்
ஹரியானா, கிராமப்புற டெல்லி & மேற்கு உத்தரப்பிரதேசம்

இந்த மண்டலமும் அதற்கு ஏற்ற ஹோலிப் பண்டிகையைக் கொண்டிருக்கின்றது. இங்கு இப்பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்படுகின்றது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்[தொகு]

ஆண்டுகள் செல்ல செல்ல ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்காசியாவிற்கு அருகிலிருக்கும் நாடுகள் போன்ற பல பகுதிகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஹோலி முக்கியமான பண்டிகையாகிவிட்டது.[6]

பாரம்பரிய ஹோலி[தொகு]

தக் அல்லது பலாஷ் பூக்கள் மரபு வண்ணங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன

வசந்த காலத்தில் காலநிலை மாறும் நேரங்களின் போது நச்சுயிரி சார்ந்த காய்ச்சலும் சளியும் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இதனால் இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை விளையாட்டாகத் தூக்கி எரிவதினால் உண்டாகும் மருத்துவ முக்கியத்துவம், இந்த வண்ணங்கள் ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைச் செய்யப்படும் வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம் மற்றும் மற்ற மருத்துவ மூலிகைகளினால் பாரம்பரிய முறையில் செய்யப்படுகின்றன.

இப்பண்டிகையின் போது தண்டை என்றழைக்கப்படும் ஓரு சிறப்பு பாணம் செய்யப்படும். சிலநேரங்களில் அது பாங்க்கைக் (கான்னாபிஸ் சதிவா ) கொண்டிருக்கின்றது. ஈர வண்ணங்களுக்காக மஞ்சள் வண்ண நீரை தயாரிக்க பாரம்பரிய பலாஷ் மலர்களைக் கொதிக்கவைத்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கப்படுகின்றது. இதுவும் மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக இக்கொண்டாட்டத்தின் வணீகரீதியான பார்வை, செயற்கை வண்ணங்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது. இது சில நேரங்களில் விஷமாகவும் இருக்கலாம்.

செயற்கை வண்ணங்கள்[தொகு]

இளைஞர்கள் ஹோலி கொண்டாடுகிறார்கள்

முன்பு ஹோலியைக் கொண்டாடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த வசந்தம்-அரும்பும் மரங்கள் அழிந்துவிட்டதால், அதற்குப் பதிலாக ரசாயன ரீதியாக தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் சாயங்களே இந்தியாவின் பெரும்பாலான நகர்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2001 ஆம் ஆண்டில் டெல்லியில் இருக்கும் டாக்ஸிக் லிங்க் மற்றும் வட்டவரன் என்ற குழுக்களால் பண்டிகையில் பயன்படுத்தப்படும் வேதி சாயங்களைப் பற்றிய ஒரு உண்மை அறிக்கை வெளியிடப்பட்டது.[7] அவர்கள் கண்டுப்பிடித்த ஹோலி நிறங்கள் தயாரிக்கப்படும் அனைத்து மூன்று முறைகளிலும் உள்ள பாதுகாப்பு சிக்கல்களாவன: பசைகள், உலர் வண்ணங்கள் மற்றும் நீர் வண்ணங்கள் ஆகியவை அதில் ஈடுபடுத்தப்பட்டன.

பசைகளை ஆய்வு செய்கையில், உடநலக்கேட்டை அதிகம் உண்டாக்கக்கூடிய விஷம் நிறைந்த வேதிப் பொருட்களை அவர்கள் கண்டுப்பிடித்தனர். கருப்புப் பசைகளில் சிறுநீரக செயலிழப்பை உண்டாக்கக்கூடிய காரீய ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டது. காசினோசனிக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்ட இரண்டு நிறங்கள்: அலுமினியம் புரோமைடைக் கொண்ட வெள்ளி மற்றும் பாதரச சல்பேட்டைக் கொண்ட சிவப்பு ஆகியவை ஆகும். நீலப் பசையில் பயன்படுத்தப்படுகின்ற பிரஷ்யன் நீலம் அன்னியப் பொருளைத் தொடும்போது உண்டாகும் தோலழற்சியை உண்டாக்குவதற்குச் சாதகமாக இருக்கின்றது. பச்சையில் இருக்கும் மயில் துத்தம் கண் ஒவ்வாமை, அதைப்பு மற்றும் தற்காலிகக் குருட்டுத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டன.[8]

குலால்ஸ் என்றும் அழைக்கப்படும் உலர்ந்த நிறங்களில் அதிக எடையுள்ள உலோகங்களுடன் பயன்படுத்தப்படுகின்ற நிறங்கள் ஆஸ்துமா, தோல் நோய்கள் மற்றும் தற்காலிக குருட்டுத்தன்மையை விளைவிக்கும் நச்சு நிறைந்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் அல்லது சிலிக்கா ஆகிய இரண்டும் உடல்நலக் சிக்கல்களை உண்டாக்குபவைகளுடன் இணைந்துள்ளன.[9]

செந்தியன் ஊதா நிற மூலப்பொருட்களை ஈரமான வண்ணங்களில் பயன்படுத்துவதால் அவை தோல் நிறமாற்றம் மற்றும் தோல் அழற்சியை ஏற்படுத்தலாம் என்று அறிவித்தார்கள்.

அவைகள் எவ்வாறு செய்யப்படுகிறது என்பது பற்றியே தெரியாத வியாபாரிகளினால் அடிக்கடி விற்கப்படுவதால் இந்த வண்ணங்களின் தரத்தையும் மூலப்பொருள்களையும் கட்டுப்படுத்துவதில் பிரச்சனை இருக்கிறது.

ஹோலியை இன்னும் இயற்கையான முறையில் கொண்டாடுவதற்காக இந்த அறிக்கை சில குழுக்களை ஊக்கப்படுத்தியது. டெல்லியிலுள்ள மேம்பாட்டிற்கான மாற்றுகள் மற்றும் பூனாவிலுள்ள கல்பவிருக்ஷ் [10] மற்றும் கிளின் இந்தியா பிரச்சாரம் [11] ஆகியவை சேர்ந்து பாதுகாப்பான இயற்கையான மூலபொருட்களிலிருந்து குழந்தைகள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப வண்ணங்களைத் தயாரிப்பதற்குக் கற்றுக்கொள்ள உதவுவதற்கான பிரச்சாரங்களைத் துவங்கினார்கள். அதேசமயத்தில் தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனம் போன்ற சில வணீக ரீதியான நிறுவனங்கள் "மூலிகை" சாயங்களை கொடிய மாற்றுக்களை விட விலை அதிகமாக இருந்தபோதிலும் அவற்றை விற்பனைச் செய்ய ஆரம்பித்தன. எனினும் இந்திய கிராமப்புறங்களின் அதிகமான பகுதிகளில் இயற்கையான வண்ணங்களின் கிடைக்கும் தன்மையைப் பொருத்து, அவற்றை (வண்ணங்களைவிட கொண்டாட்டத்தின் மற்ற பகுதிகளில்) எப்போதும் கடைசி முயற்சியாகத்தான் வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய ஹோலிகா தகனம் கொண்டாட்டத்திற்காக உண்டாக்கும் நெருப்பே, ஹோலி கொண்டாட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடிய பிரச்சனையாகும். இந்த நிகழ்வு வன அழிப்புக்கு வழிவகுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. ஒரே ஒரு காலக்கட்டத்தில் மட்டும் 30,000 விழவெரித் தீக்கள் உண்டாக்கப்படுவதால் ஏற்படும் ஒவ்வொரு நெருப்பிலும் தோராயமாக 100 கி.கி மரக்கட்டைகள் எரிக்கப்படுகின்றன என்று உள்ளூர் சிறுபக்கச் செய்தித்தாளில் ஒன்றில் கருத்துரை வெளியிடப்பட்டது. இந்த மரக்கட்டை பயன்பாட்டைத் தடுப்பதற்காக மரக்கட்டைகளுக்கு பதிலாக தேவையில்லாத பொருட்களை எரித்தல் அல்லது ஒரே சமூகத்தினர் பல சிறிய நெருப்புக்களை மூட்டுவதற்குப் பதிலாக ஒரே ஒரு நெருப்பை மூட்டுதல் உள்ளிட்ட பல வழிமுறைமைகள் முன்மொழிப்பட்டுள்ளன. இருப்பினும், அவர்களுடைய கலாச்சாரங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் மேற்கத்திய தாக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதும் ஏதோ ஒரு சில சமுதாயத்தின் முக்கியப் பிரிவினர், மற்ற இடங்களில் கொண்டாடப்படும் இதே போன்ற கொண்டாட்டங்களில் பல எடுத்துக்காட்டுகளை மேற்கோள்காட்டி தேவையில்லாத பொருட்களை எரிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

குறிப்புகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோலி&oldid=1828442" இருந்து மீள்விக்கப்பட்டது