கயானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கயானா கூட்டுறவுக் குடியரசு
Co-operative Republic of Guyana
கயானாவின் கொடி கயானாவின் சின்னம்
குறிக்கோள்
"ஒரே மக்கள், ஒரு நாடு, ஒரு இலக்கு"
நாட்டுப்பண்
Dear Land of Guyana, of Rivers and Plains
"ஆறுகளையும், சமவெளிகளையும் கொண்ட அருமை கயானா நாடே"

Location of கயானாவின்
தலைநகரம் ஜார்ஜ்டவுன்
6°46′N 58°10′W / 6.767°N 58.167°W / 6.767; -58.167
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
பிரதேச மொழிகள்
தேசிய இனங்கள் (2002[1])
மக்கள் கயானீசு
அரசு ஒற்றையாட்சி பகுதி-சனாதிபதி குடியரசு
 -  சனாதிபதி டேவிட் கிரேஞ்சர்
 -  பிரதமர் மோசசு நாகமுத்து
அமைப்பு
 -  டச்சு கயானா 1667–1814 
 -  பிரித்தானிய கயானா 1814–1966 
 -  பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை 26 மே 1966 
 -  குடியரசு 23 பெப்ரவரி 1970 
 -  தற்போதைய அரசமைப்புசட்டம் 6 அக்டோபர் 1980 
பரப்பளவு
 -  மொத்தம் 214,970 கிமீ² (85வது)
83,000 சது. மை 
 -  நீர் (%) 8.4
மக்கள்தொகை
 -  2014 மதிப்பீடு 735,554[1] (165வது)
 -  2012 குடிமதிப்பு 747,884[2] 
 -  அடர்த்தி 3.502/கிமீ² (232வது அல்லது 8வது உலகின் மிகக்குறைந்த மக்கள்தொகை நாடு)
9.071/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2012 கணிப்பீடு
 -  மொத்தம் $6.155 பில்.[3] 
 -  ஆள்வீத மொ.தே.உ $7,938[3] 
மொ.தே.உ(பொதுவாக) 2012 மதிப்பீடு
 -  மொத்தம்l $2.788 பில்.[3] 
 -  ஆள்வீத மொ.தே.உ $3,596[3] 
ம.வ.சு (2013) 0.638 (121வது)
நாணயம் கயானிய டாலர் (GYD)
நேர வலயம் GYT (கயானா நேரம்) (ஒ.ச.நே.-4)
இணைய குறி .gy
தொலைபேசி ++592

கயானா (Guyana, /ɡˈɑːnə/[4] அதிகாரபூர்வமாக கயானா கூட்டுறவுக் குடியரசு (Co-operative Republic of Guyana),[5] என்பது தென் அமெரிக்காவின் கரிபியன் கரையில் உள்ள ஒரு நாடு ஆகும். கயானாவின் எல்லைகளாக கிழக்கே சுரிநாம், தெற்கு மற்றும் தென்மேற்கே பிரேசில், மேற்கே வெனிசுவேலா ஆகிய நாடுகளும், வடக்கே அத்திலாந்திக் பெருங்கடலும் அமைந்துள்ளன.

கயானா முதன் முதலில் 1667 முதல் 1814 வரை டச்சுக்களின் குடியேற்ற நாடாக இருந்தது. பின்னர், பிரித்தானியரின் ஆட்சியில் பிரித்தானிய கயானா என்ற பெயரில் 150 ஆண்டுகளாக இருந்து வந்தது. 1966 மே 26 இல் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1970 பெப்ரவரி 23 இல் குடியரசானது. 2008 இல் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்தில் ஆரம்பகால உறுப்பினராக இணைந்தது. கரிபியன் சமூகம் என்ற அமைப்பில் உறுப்புரிமை கொண்டுள்ளது. இவ்வமைப்பின் தலைமையகம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ளது.

பொதுநலவாய அமைப்பில் உறுப்பினராக உள்ள கயானா தென்னமெரிக்க நாடுகளில் ஆங்கிலம் அதிகாரபூர்வமொழியாக உள்ள ஒரே ஒரு நாடு ஆகும். கயானாவின் பெரும்பாலானோர் ஆங்கிலம், டச்சு, மற்றும் அரவாக்கன், கரிபியம் கலந்த கயானிய கிரியோல் மொழியையும் பேசுகின்றனர்.

215,000 சதுர கிமீ (83,000 சதுரமைல்) பரப்பளவு கொண்ட கயானா தென்னமெரிக்காவில் உருகுவை, சுரிநாம் நாடுகளை அடுத்த மூன்றாவது சிறிய நாடாகும்.

வரலாறு[தொகு]

டச்சு கயானாவின் (1667–1814) வரைபடம்.

கயானாவில் யாய் வாய், மச்சூசி, பட்டமோனா, அரவாக், காரிப், வப்பிசானா, அரெக்குனா, அக்கவாயோ, வராவு ஆகிய ஒன்பது பழங்குடி இனங்கள் வாழ்கின்றனர்.[6] வரலாற்று ரீதியாக, அரவாக்கு, காரிப் இனங்கள் பெரும்பான்மையாக இங்கு வாழ்ந்து கொண்டுள்ளார்கள். கொலம்பசு 1498 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது கடல் பயணத்தின் போது கயானாவைக் கண்டு பிடித்திருந்தாலும், டச்சு நாட்டவரே முதன் முதலில் இங்கு தமது குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள்: எசெக்கிபோ (1616), பெர்பிசு (1627), தெமெராரா (1752). பிரித்தானியர் 1796 ஆம் ஆண்டில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1814 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் முழுமையாக வெளியேறினர். 1831 இல் மூன்று தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் "பிரித்தானிய கயானா" என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன.

பிரித்தானிய கயானாவின் வரைபடம்

1824 இல் வெனிசுவேலா விடுதலை பெற்ற பின்னர், எசெக்கிபோ ஆற்றின் மேற்குப் பகுதியை அது தனது நிலப்பகுதியாகக் கோரியது. பெர்பிசு, டெமெரேரா பகுதிகளில் குடியேற்றம் நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிமோன் பொலிவார் பிரித்தானிய அரசுக்குக் கடிதம் எழுதினார். இப்பகுதி பிரித்தானியாவுக்குச் சொந்தமானது என 1899 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஆணையம் தீர்ப்பளித்தது. ஆனாலும், இந்த எல்லைப் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் இப்போதும் தொடர்ந்து வருகிறது.[7]

கயானா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 2966 மே 26 ஆம் நாள் விடுதலை பெற்றது. பின்னர் 1970 பெப்ரவரி 23 இல் குடியரசு ஆனது. ஆனாலும் தொடர்ந்து பொதுநலவாய அமைப்பில் தொடர்ந்து உறுப்பினராக உள்ளது. இக்காலகட்டத்தில் அமெரிக்க அரசுத் திணைக்களம், அமெரிக்க சிஐஏ, ஆகியன பிரித்தானிய அரசுடன் இணைந்து கயானாவின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The World Factbook: Guyana". CIA. பார்த்த நாள் 6 சனவரி 2014.
  2. Guyana 2012 Census GeoHive– Guyana. Retrieved 02 August 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 "Guyana". International Monetary Fund. பார்த்த நாள் 18 ஏப்ரல் 2013.
  4. "Guyana - Dictionary definition and pronunciation - Yahoo! Education". Education.yahoo.com. பார்த்த நாள் 2014-03-30.
  5. "Independent States in the World". state.gov.
  6. "Ministry of Amerindian Affairs - Georgetown, Guyana". Amerindian.gov.gy. பார்த்த நாள் 2014-03-30.
  7. "Guyana ponders judicial action in border dispute with Venezuela". FoxNews Latino (டிச. 23, 2014). பார்த்த நாள் பெப். 22, 2015.
  8. US Declassified Documents (1964–1968) guyana.org

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கயானா&oldid=1858864" இருந்து மீள்விக்கப்பட்டது