பல்லக்கு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

காமா எனப்படும் கொரியப் பல்லக்கு (1890களில்)
பல்லக்கு அல்லது சிவிகை (Litter) என்பது மனிதர்கள் சுமந்து செல்லும் ஒரு வகை வாகனம். பல்லக்குகளில் பல வகைகள் உள்ளன. வரலாற்றில் பல நாடுகளில் பல வகைப் பல்லக்குகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். பல்லக்குகளில் ஒருவரோ ஒரு சிலரோ அமர்ந்து கொண்டோ சாய்ந்து கொண்டோ பயணிக்க முடியும். பயணிகள் பெட்டிக்கு (இருக்கை) முன்னும் பின்னும் உள்ள நீண்ட கம்பங்களை தோள்களிலும் கைகளிலும் சுமந்து பணியாளார்கள் நடக்க, பல்லக்கு நகருகின்றது. உலகம் எந்திரமயமான பின்னர் சிவிகைகளைப் பயன்படுத்துவது பெரும்பாலும் நின்று விட்டது. மலைப் பகுதிகள், சுற்றுலாத் தலங்கள் போன்ற சில இடங்களிலும் கோயில்களில் தெய்வத்தின் சிலைகளைச் சுமந்து செல்லவும் மட்டும் இன்றளவும் பயன்படுகின்றன.