உள்ளடக்கத்துக்குச் செல்

ஓல்லா மொகல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோலா மொகல்லா
தற்காப்புப் பேரணி
கால்சாவினர் சீக்கியத் திருவிழா ஹோலா மொகல்லா அல்லது ஹோலாவைக் கொண்டாடுதல்
வகைசீக்கியம்
கொண்டாட்டங்கள்அனந்த்பூர் சாகிபில் மூன்று நாட்கள் சந்தை ஹோலா மொகல்லா நாளில் முடிவடையும்.[1] தற்காப்புக் கலைகள்.
நாள்இரண்டாம் சந்திர மாதமான சேத்தில்
நிகழ்வுஆண்டுதோறும்

ஹோலா மொகல்லா (Hola Mahalla, Punjabi: ਹੋਲਾ ਮਹੱਲਾ, Hindi: होला मोहल्ला; சுருக்கமாக ஹோலா) இரண்டாம் சந்திர மாதமான சேத்தின் இரண்டாம் நாள் கொண்டாடப்படும் ஒருநாள் சீக்கியத் திருவிழாவாகும். (ஹோலிகா தகனம் முதல் மாதமான பகுன் மாதத்தின் கடைசி நாளில், முழுமதி நாளில், கொண்டாடப்படுகின்றது; அடுத்த நாள், சேத்து மாதத்தின் முதல்நாளில் ஹோலி கொண்டாடப்படுகின்றது.)[2] இது பெரும்பாலும் மார்ச்சு மாதத்தில் வருகின்றது.[3] சில ஆண்டுகளில் சீக்கியப் புத்தாண்டு நாளிலும் வருவதுண்டு.[4]

ஆண்டுதோறும் மரபார்ந்து அனந்த்பூர் சாஹிப்பில் நடைபெறும் சந்தை மூன்று நாள் நிகழ்வாகும். இருப்பினும் இதில் பங்கேற்பவர்கள் அவ்வாரம் முழுமையும் அனந்த்பூர் சாகிபில் தங்குகின்றனர். இந்நாட்களில் பல்வேறு தற்காப்புக் கலைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. தங்கள் வீரத்தையும் திறனையும் வெளிப்படுத்துகின்றனர். கீர்த்தன் பாடலிசைத்தல், கவிதை படித்தல் ஆகியவையும் நிகழ்த்தப்படுகின்றன.[5] குருத்துவாராவில் உணவு உண்கின்றனர்; வருகையாளர்கள் பங்கத்கள் எனப்படும் வரிசையில் அமர்ந்து லங்கர்களில் வழங்கப்படும் ஊன்விலக்கிய உணவை உண்கின்றனர்.[6] இந்த மூன்று நாள் விழாவின் இறுதியில், ஹோலா மொகல்லா நாளன்று, சீக்கியத்தின் ஐந்து உலகியல்சார் இருக்கைகளில் ஒன்றான தக்த் சிறீ கேசுகர் சாகிபின் அருகிலிருந்து படைத்துறை அணிவகுப்பை ஒத்த நீண்ட பேரணியாகச் செல்கின்றனர்.[7]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. http://www.holifestival.org/hola-mohalla.html
  2. Yang, Ananad. A. (1998) Bazaar India: Markets, Society, and the Colonial State in Gangetic Bihar University of California Press [1]
  3. Ahluwalia, M.S. (November 2004). "Tourism: The Festival of Hola Mahalla". SikhSpectrum.com Quarterly (18). http://www.sikhspectrum.com/112004/hola.htm. பார்த்த நாள்: 2008-09-14. 
  4. Amolak Singh. "Sikh Calendar". SikhWorld.co.uk. Retrieved 2008-09-17.
  5. Amolak Singh. "Sikh Ceremonies". SikhWorld.co.uk. Retrieved 2008-09-17.
  6. "The Hola Mohalla Festival". SikhChic.com. March 2007. Retrieved 2008-09-17.
  7. T. Singh (August 15, 2008). "Celebrating Holi". Reflections On Gurbani. Retrieved 2008-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்லா_மொகல்லா&oldid=3889336" இலிருந்து மீள்விக்கப்பட்டது