இம்பால்
இம்பால் மாநகராட்சி | |||||
— மாநகராட்சி — | |||||
அமைவிடம் | 24°49′N 93°57′E / 24.82°N 93.95°E | ||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | மணிப்பூர் | ||||
மாவட்டம் | இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு | ||||
ஆளுநர் | இல. கணேசன்[1] | ||||
முதலமைச்சர் | ந. பீரேன் சிங்[2] | ||||
மக்களவைத் தொகுதி | இம்பால் மாநகராட்சி | ||||
மக்கள் தொகை | 268,243 (2011[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
• 786 மீட்டர்கள் (2,579 ft) | ||||
குறியீடுகள்
|
இம்பால் இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரின் மையத்தில் மணிப்பூர் நாட்டின் அரசர்கள் வாழ்ந்த காங்லா அரண்மனை உள்ளது. இந்த அரண்மைனையைச் சுற்றி அகழியும் அமைந்துள்ளது. இந்த நகரம் சுமார் முப்பத்து ஒரு வார்டுகளையும் இரண்டு இலட்சத்து அறுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டுள்ளது.
வரலாறு[தொகு]
இரண்டாம் உலகப் போரின் போது, இம்பால் சண்டை 1944 மார்ச் மற்றும் ஜூலை வரை நடந்தது.[3]
நிலவியல் மற்றும் காலநிலை[தொகு]
இம்பால் 24°48′27″N 93°56′18″E / 24.8074°N 93.9384°E இல் வடகிழக்கு இந்தியாவில் உள்ளது.[4] இது சராசரியாக 786 மீட்டர் (2,579 அடி) உயரத்தில் உள்ளது. இப்பகுதியானது மிதமான, உலர் குளிர்காலம் மற்றும் வெப்பமான பருவப் பெயர்ச்சிக் காற்றுடன் ஈரப்பதமான துணை வெப்ப மண்டல காலநிலையைக் (கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்டது.[5] சூலை வெப்பநிலை சராசரி 29 °C (84 °F); சனவரி மிகக் குளிர்மிக்க மாதமாகும், அப்போதைய குறைந்த சராசரி வெப்பநிலை 4 °C (39 °F) ஆகும் ஜூன் மாதம் மழைக்காலமாக 1,320 மிமீ (52 அங்குலம்) மழை பெய்யும். நகரில் சூன் மாதம் மழைக்காலமாகும் சராசரி மழையளவு 1,320 மிமீ (52 அங்குலம்) ஆகும். நகரின் அதிகபட்ச வெப்ப அளவாக 2009 மே 22 அன்று 35.6 °C (96.1 °F), எனவும், குறைந்தபட்ச வெப்பமாக 1970 சனவரி 10 அன்று −2.7 °C (27.1 °F) எனவும் பதிவாகியுள்ளது.[6] [7]
சுற்றுலா தலங்கள்[தொகு]
- காங்லா
காங்லா கோட்டையானது இம்பால் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, மேலும் இது காங்க்லா அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது. காங்லா என்பதற்கு மணிப்புரிய மொழியில் "உலர்ந்த நிலம்" என்று பொருள். இந்த கோட்டை பஞ்சக்பாவின் அரண்மனையாக இருந்தது, மேலும் சமய முக்கியத்துவமும் கொண்டது. கோட்டையில் பல கோயில்கள் உள்ளன, அது ஒரு ஏரியால் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது.
- ஹையங்க்தாங்க லயிர்மி கோயில் வளாகம்
இக்கோயில் வளாகத்தில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஆண்டு தோறும் துர்கா பூஜை விழாவானது சிறப்பாக நடக்கிறது.
- இம்பால் போர்க் கல்லறை
இந்த கல்லறைத் தோட்டமானது இரண்டாம் உலகப் போரில் (1944) போராடி இறந்த பிரிட்டிஷ் மற்றும் இந்திய வீரர்களை நினைவூட்டுகிறது.
- இமா கைதேல் - அம்மா சந்தை
இச்சந்தை மணிப்பூரைத் தாண்டியும் புகழ் பெற்ற பெரிய சந்தையாகும். இது முழுக்கமுழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு மணிப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அன்றாடம் தங்கள் பொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிட்டு செல்கின்றனர். இச்சந்தையில் பூக்கள், காய் கனிகளில் இருந்து கருவாடு, வாசனைத் திரவியங்கள், கைவினைப்பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கும்.[8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ "Imphal and Kohima". Britain's Greatest Battles. National Army Museum. 9 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Maps, Weather, and Airports for Imphal, India". 10 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Climate: Imphal - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. 31 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Imphal, India". India Meteorological Department. 16 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ever recorded Maximum and minimum temperatures upto 2010" (PDF). India Meteorological Department. 21 மே 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 16 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ சமஸ் (15 செப்டம்பர் 2017). "மாநில சுயாட்சி ஓர் தேசிய முழக்கம்!". கட்டுரை. தி இந்து. 18 செப்டம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.