பெர்சவல் மாவட்டம்
பெர்சல் மாவட்டம் | |
---|---|
![]() வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பெர்சவல் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (பெர்சவல்): 93° 11' 16.0440 East and 24° 15' 43.0524 N | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
நிறுவிய ஆண்டு | 8 டிசம்பர் 2016 |
தலைமையிடம் | பெர்சவல் |
பரப்பளவு | |
• Total | 2,285 km2 (882 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 47,250 |
• அடர்த்தி | 21/km2 (54/sq mi) |
மக்கள்தொகை பரம்பல் | |
• எழுத்தறிவு | 79% |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | MN0 |
தேசிய நெடுஞ்சாலை எண்கள் | NH-150, NH-2 |
இணையதளம் | pherzawldistrict |
பெர்சல் மாவட்டம் (Pherzawl) (Pron:/ˌpherˈzâwl/) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பெர்சல் நகரம் ஆகும். சுராசாந்துபூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[1]
அமைவிடம்
[தொகு]
மணிப்பூர் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்ந்த பெர்சல் மாவட்டத்தின் கிழக்கில் சுராசாந்துபூர் மாவட்டம், வடக்கில் தமெங்கலாங் மாவட்டம் மற்றும் ஜிரிபாம் மாவட்டம், மேற்கில் அசாம் மாநிலத்தின் கசார் மாவட்டம், தெற்கில் மிசோரம் மாநிலத்தின் சிங்லுங் மலைகள் எல்லைகளாக உள்ளது. இம்மாவட்டம் கிழக்கில் 93° 11' 16.0440' பாகையும், வடக்கில் 24° 15' 43.0524 பாகைகளுக்கிடையே மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் ஏறத்தாழ 200 கிராமங்களைக் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[2]அவைகள்:
- பெர்சல் வட்டம்
- பர்புங்க் வட்டம்
- தன்லோன் வட்டம்
- வங்காய் மலைகள் வட்டம்
தட்ப வெப்பம் & புவியியல்
[தொகு]இம்மாவட்டத்தின் குறைந்தபட்ச வெப்பம் 3.4 °C (38.1 °F) ஆக்வும்; அதிகபட்ச வெப்பம் 34.1 °C (93.4 °F) உள்ளது. சராசரி ஆண்டு மழைப்பொழ்வு 670 முதல் 1,450 mm (26 முதல் 57 அங்) ஆகவுள்ளது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 1037 மீட்டர் (3,402 அடி) உயரத்தில் கிழக்கு இமயமலைப் பகுதியில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History of Imphal East". Imphal East district. 2 November 2019. Archived from the original on 3 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ New 7 Districts and talukas of Manipur State – Government Order