சனாமகி அகோங் கோங் சிங்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனாமகி அகோங் கோங் சிங்பா
Sanamahi Ahong Khong Chingba
கடைபிடிப்போர்மணிப்புரி மக்கள்
பங்கல் மக்கள்
வகைமதச்சார்பு
கொண்டாட்டங்கள்அரிசி, காய்கறிகள் மற்றும் பழங்கள் இலைனிங்தௌ சனாமகி கடவுளுக்கு காணிக்கையாக்கப்படுகின்றன.
அனுசரிப்புகள்சனாமகி தெய்வம் பெரிய தேரில் வைக்கப்பட்டு பக்தர்களால் ஊர்வலமாக இழுக்கப்படுகிறது
நாள். பண்டைய காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை; 2018-முதல்
நிகழ்வுஆண்டுதோறும்

சனாமகி அகோங் கோங் சிங்பா (Sanamahi Ahong Khong Chingba) மணிப்பூர் மாநிலத்தில் வாழ்கின்ற மணிப்புரி மக்கள் கொண்டாடுகின்ற ஒரு மதத் திருவிழாவாகும். சனாமகி செங் ஓங்பா அல்லது காங் சிங்பா என்ற பெயர்களாலும் இவ்விழா அழைக்கப்படுகிறது. மணிப்புரி மக்களின் கடவுளான லைனிங்தௌ சனாமகியை உள்ளடக்கிய பிரமாண்டமான இரதத்துடன் கூடிய பொது ஊர்வலம் இத்திருவிழாவின் முக்கியமான அடையாளமாகும். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் இம்பால் நகரத்தில் நடைபெறுகின்றன. ஊர்வலத்தில் சேரும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை இந்நிகழ்வுகள் ஈர்க்கின்றன. . 350 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்ட இத்திருவிழா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2018ஆம் ஆண்டு முதன்முதலில் கொண்டாடப்பட்டது.[1][2][3]

சனாமகி அகோங் கோங் சிங்பா திருவிழாவின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரிசி, பழங்கள், காய்கறிகள், பணம் மற்றும் பாரம்பரிய சடங்குகளை காணிக்கையாக்கியும் சடங்குகள் நிகழ்த்தியும் கடவுளிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்கள். இம்பால் நகரின் மையப்பகுதியில் அலங்கரிக்கப்பட்ட சனாமகியை ஏற்றிய தேர் ஒன்று பயணிக்கும். இந்தப் பயணம் உள்நாட்டில் காங் சிங்பா என்று அழைக்கப்படுகிறது.

சனாமகி அகோங் கோங் சிங்பா திருவிழா என்பது முற்றிலும் சனாமகி இனத்தினரின் மதத் திருவிழாவாகும். ஆனால் மணிப்புரி மக்கள் சமூகத்தின் இந்துமயமாக்கலுக்குப் பிறகு, இதேபோன்ற ஒரு திருவிழா உருவாக்கப்பட்டது.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ancient Manipur ritual held". www.telegraphindia.com.
  2. "Sanamahi Ahong-Khong Chingba ritual to be organised :: Manipur News | Manipur Daily | Poknapham - Manipuri News!". thepeopleschronicle.in. Archived from the original on 2021-09-13. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
  3. "Sanamahee Ahong Khong Chingba observed after 350 years". June 28, 2018.
  4. "Kang Chingba". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
  5. Yojana Magazine. Government of India. August 2020. பக். 18. 
  6. "Kang Rath Yatra Manipur | Kang Chingba Festival Manipur". www.tourmyindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனாமகி_அகோங்_கோங்_சிங்பா&oldid=3664160" இலிருந்து மீள்விக்கப்பட்டது