சிருய் தேசிய பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிருய் தேசிய பூங்கா (Shirui National Park) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய பூங்கா ஆகும். இது 1982ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1] இப் பூங்கா ட்ராகோபன் (வண்ணக்கோழி), புலி மற்றும் சிறுத்தை ஆகிய விலங்குகளின் புகலிடமாக உள்ளது. இங்குதான் பிரபலமான சிருய் லில்லி (லில்லியம் மேக்லைனே) இயற்கையாக வளருகின்றன. மழைக்காலத்தில் முக்கியச் சிகரங்கள் லில்லிப் பூக்களால் நிறைந்து சொர்க்கம் போலக் காணப்படும்.

மணிப்பூர் சிராய் தேசிய பூங்காவிலிருந்து ஒரு பார்வை

உக்ருலுக்கு அருகிலுள்ள சிருய் கசோங் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2,835 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த சிகரத்தின் பள்ளங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளில் ஏராளமான ஆறுகள் உருவாகின்றன. இப்பகுதிக்கே உரித்தான கவர்ச்சியான சிருய் லில்லி மலர் (லிலியம் மாக்லினியா) மே / ஜூன் மாதங்களில் மலையடிவாரத்தில் பூக்கும். இந்த மலர் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.

அரிய பறவையான திருமதி குயூமின் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி மலை உச்சியில் வசிக்கிறது

தாவரங்கள்[தொகு]

இந்த தேசிய பூங்கா முழுவதும் அடர்த்தியான வெப்பமண்டல காடுகளும், மலை உச்சியில் மித வெப்பமண்டல காடுகளும் காணப்படுகின்றது.[1]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிருய்_தேசிய_பூங்கா&oldid=3392025" இலிருந்து மீள்விக்கப்பட்டது