மாயாங்கு இம்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயாங்கு இம்பால்
Mayang Imphal
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்மேற்கு இம்பால்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்24,239
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மணிப்புரியம் (மணிப்புரி)
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எ -->795132

மாயாங்கு இம்பால் (Mayang Imphal) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மேற்கு இம்பால் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். இதன் அஞ்சல் குறியீட்டு எண் 795132.[1]

புவியியல்[தொகு]

24.60°வடக்கு 93.90° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் மாயாங்கு இம்பால் அமைந்துள்ளது. மணிப்பூர் அல்லது இம்பால் ஆறு என்றழைக்கப்படும் ஆற்றின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோக்தாக் ஏரி இந்நகரின் தென்மேற்கில் அமைந்திருக்கிறது[2].

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[3] மாயாங்கு இம்பால் நகரத்தின் மக்கள் தொகை 20,536 ஆகும். இத்தொகையில் 50 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 50 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்தநகரத்தின் படிப்பறிவு 56% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 67% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 45% ஆகவும் இருந்தது. மாயாங்கு இம்பால் நகரின் மக்கள் தொகையில் 17 % எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். மக்கள் தொகையில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் ஆகிய பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் கலந்துள்ளனர்.

அரசியல்[தொகு]

உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் மணிப்பூர் சட்டப்பேரவையின் 23 ஆவது தொகுதியாகவும் மாயாங்கு இம்பால் நகரம் உள்ளது[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-15.
  2. "Yahoo maps location of Mayang Imphal". Yahoo maps. பார்க்கப்பட்ட நாள் 2008-12-30.
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  4. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Manipur. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாங்கு_இம்பால்&oldid=3761838" இலிருந்து மீள்விக்கப்பட்டது