இட்சூக்கோ பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இட்சூக்கோ பள்ளத்தாக்கு இந்திய மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர் ஆகியவற்றின் எல்லையில் உள்ளது. மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள இசீ மலையில் இருந்து ஐந்து மணி நேரத்தில் சென்றடையலாம்.[1] இந்த வழியை மணிப்பூர் மாநில மலையேறுவோர் சங்கத்தினர் திறந்துவைத்தனர்.[2] இந்த பள்ளத்தாக்கில் குறிப்பிட்ட காலங்களில் பூக்கும் அரிய வகைப் பூக்களைக் கொண்ட தாவரங்கள் உள்ளன.

இட்சூக்கோ என்ற சொல் அங்காமி மொழியில் இருந்து தோன்றியது. இதற்கு தண்ணீர் என்று பொருள். இந்த பள்ளத்தாக்கில் குளிர்ச்சியான நீர் பாய்வதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.[3] மாவோ நகரம் மணிப்பூர் உடனான நாகாலாந்தின் எல்லைக்கு அருகில் உள்ளது. நாகாலாதில் உள்ள விஸ்வேமா என்ற ஊரில் இருந்தும் இந்த பள்ளத்தாக்கை வந்தடையலாம்.[4]

இந்த பள்ளத்தாக்கை சென்றடைய அரசு சார்பற்ற அமைப்புகளும், சுற்றுலா நிறுவனங்களும் உதவுகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. "The Assam Tribune Online". பார்த்த நாள் 2015-12-21.
  2. "New Dzukou trekking route inaugurated". பார்த்த நாள் 2015-12-21.
  3. "Senapati District, Government of Manipur, India". பார்த்த நாள் 2015-12-21.
  4. "New Dzukou trekking route inaugurated". பார்த்த நாள் 2015-12-21.