இம்பால் சண்டை
இம்பால் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
the Burma Campaign பகுதி | |||||||
Gurkhas advancing with Lee tanks to clear the Japanese from Imphal-Kohima road in North Eastern British India |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் | சப்பான் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
William Slim Geoffrey Scoones Jack Baldwin | Masakasu Kawabe Renya Mutaguchi சுபாஷ் சந்திர போஸ் |
||||||
பலம் | |||||||
4 Infantry Divisions 1 Armoured Brigade 1 Parachute Brigade | 3 Infantry Divisions 1 Tank Regiment |
||||||
இழப்புகள் | |||||||
17,500 killed and wounded[1] | 53,879 killed and wounded[1] |
1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி ஜூலை மாதம் வரையான ஏழு மாதங்கள் இரண்டாம் உலகப்போரின் போது வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரின் தலைநகரான இம்பாலுக்கு அருகில் உள்ள கோகிமாவில் நடந்த போர்தான் இம்பால் சண்டை (Battle of Imphal) எனப்படுகிறது. பிரிடீஸ் அரசின் கீழ் ஆட்சியிலிருந்த இந்தியாவின் மேல் ஜப்பனீஸ் படைகளும் சுபாஸ் வழிநடத்தில் ஆஷாத் ஹிந்து இயக்கமும் சேர்ந்து படையெடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக ஜப்பானிய படைகள் பின்வாங்கி பர்மா நாட்டில் தஞ்சம் அடைந்தது. ஜப்பானின் வரலாற்றிலேயே முதன் முறையாக அதிக இழப்பு ஏற்பட்ட சண்டை இதுதான். பிரித்தானிய ஆட்சியில் வெளியிலிருந்து வந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தது இதுவே முதன் முறையாகும். அதோடு இந்தப் போர் மிகவும் கொடூரமானது என்று கருதப்படுகிறது.
போரின் போக்கு
[தொகு]1944 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு எதிரான போர் பல முனைத்தாக்குதல் மூலம் நடந்து கொண்டு இருந்தது. மத்திய மற்றும் தெற்கு, மேற்கு பசிபிக் கடல் பகுதில் ஜப்பானின் படைகளின் போர்க் கப்பல்கள் மீது நேச நாடுகளின் படைகள் நீர்மூழ்கிக்கப்பல்கள் மூலமும் விமானம் மூலமும் தாக்குதல் நடத்தி அழித்தார்கள். தென் கிழக்கு ஆசியாவில் இந்திய மற்றும் அதைச் சுற்றியுள்ள நேச நாடுகளின் கீழ் உள்ள இடங்களை ஜப்பான் தாக்கியது. மேலும் பர்மா மீதும் தனது ஆதிக்கத்தைச்செலுத்தியது.
சீன படைகள் ஆனால் ஜப்பானின் படைகள் பர்மா, சீன மக்கள் குடியரசின் கீழ் அமைந்துள்ள சீன மாகாணங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. பர்மாவை அடுத்து இந்தியப்பகுதிக்கான எல்லையாக மணிப்பூரின் இம்பால் நகரம் அமைந்திருந்தது. அந்த வழியாக ஜப்பானின் படைவீரர்கள் அணிவகுத்து செந்குத்தான காடுகளின் ஊடாக பிரமபுத்திரா நதி பள்ளத்தாக்கு வழியாக திமாபூர் என்ற இடத்தை அடைந்தார்கள்.
பிரித்தானிய இந்திய இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி ஸ்கூனெஸ் (Geoffrey Scoones) தலைமையில் நான்கு பட்டாளம் போருக்குத் தயாரானது. அதோடு லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் ஸ்லைம் (William Slim) தலைமையின் கீழ் பதினான்காவது படையும் போருக்குத் தயாரானது.