காம்ஜோங் மாவட்டம்
காம்ஜோங் மாவட்டம் | |
---|---|
ஆள்கூறுகள் (காம்ஜோங்): 24.857044N 94.513463 E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
நிறுவிய ஆண்டு | 8 டிசம்பர் 2016 |
தலைமையிடம் | காம்ஜோங் |
பரப்பளவு | |
• Total | 2,000 km2 (800 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 45,616 |
• அடர்த்தி | 23/km2 (59/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
காம்ஜோங் மாவட்டம் (Kamjong district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் காம்ஜோங் ஆகும். உக்ருல் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2] [3] [4] [5] [6] [7]மாநிலத் தலைநகரான இம்பால் நகரத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இம்மாவட்டம் உள்ளது.
புவியியல்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து 3114 மீட்டர் கிழக்கு இமயமலையில் அமைந்த இம்மாவட்டத்தின் கிழக்கில் மியான்மர் நாட்டின் நீண்ட எல்லையும், மேற்கில் சேனாபதி மாவட்டம், வடக்கில் உக்ருல் மாவட்டம் மற்றும் தெற்கில் சந்தேல் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மக்கள்
[தொகு]2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட் இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 45,616 ஆகவுள்ளது. மக்கள்தொகையில் பழங்குடி இன 94% தங்குல் நாகா மக்களும், 4.59% குக்கி மக்களும் வாழ்கின்றனர். இம்மாவட்ட மக்களில் கிறித்துவ சமயத்தை பெரும்பான்மையாக பயில்கின்றனர்.
வருவாய் வட்டங்கள்
[தொகு]இம்மாவட்டத்தில் 4 வருவாய் வட்டங்கள் கொண்டது.[8]
- காம்ஜோங் வட்டம்
- சஹாம்பூங்
- கசோம் குல்லென் வட்டம்
- புயூங்கியார் வட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History of Imphal East". Imphal East district. 2 November 2019. Archived from the original on 3 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "7 new districts formed in Manipur amid opposition by Nagas : India, News - India Today". Indiatoday.intoday.in. 2016-12-09. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
- ↑ "Manipur Creates 7 New Districts". Ndtv.com. 2016-12-09. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
- ↑ "New districts to stay, says Manipur CM". தி இந்து. 2016-12-31. http://www.thehindu.com/news/national/other-states/New-districts-to-stay-says-Manipur-CM/article16966242.ece. பார்த்த நாள்: 2017-06-30.
- ↑ "Manipur Chief Minsiter [sic] inaugurates two new districts amid Naga protests". Timesofindia.indiatimes.com. 2016-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
- ↑ "Simply put: Seven new districts that set Manipur ablaze". இந்தியன் எக்சுபிரசு. 2016-12-20. http://indianexpress.com/article/explained/manipur-violence-new-districts-okram-ibobi-united-naga-council-4436039/. பார்த்த நாள்: 2017-06-30.
- ↑ "Creation of new districts could be game-changer in Manipur polls | opinion". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/opinion/creation-of-new-districts-could-be-game-changer-in-manipur-polls/story-UPuB37G5kcybvNQqCCf61I.html. பார்த்த நாள்: 2017-06-30.
- ↑ New 7 Districts and talukas of Manipur State – Government Order