மணிப்பூர் உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மணிப்பூர் உயர் நீதிமன்றம், இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திற்கான தலைமை நீதிமன்றம் ஆகும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம், வட கிழக்குப் பகுதிகளுக்கான மறுசீராக்கப் பிரிவு ஆகியவற்றின்படி மார்ச்சு 2013 அன்று நிறுவப்பட்டது. இது மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் அமைந்துள்ளது. இதன் முதலாவது நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆவார். இது அமைக்கப்பட்டதற்கு முன்பு வழக்குகள் கவுகாத்தி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.

சான்றுகள்[தொகு]