சிக்கிம் உயர் நீதிமன்றம்
சிக்கிம் உயர் நீதிமன்றம் | |
---|---|
सिक्किम उच्च न्यायालय | |
நிறுவப்பட்டது | 16 சூன் 1975 |
அதிகார எல்லை | சிக்கிம் |
அமைவிடம் | கேங்டாக் |
புவியியல் ஆள்கூற்று | 27°19′55″N 88°36′53″E / 27.3319°N 88.6146°E |
நியமன முறை | இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி & ஆளுநர் பரிந்துரையின்படி |
அதிகாரமளிப்பு | இந்திய அரசியலமைப்பு |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | இந்திய உச்ச நீதிமன்றம் |
நீதியரசர் பதவிக்காலம் | ஓய்வு வயது 62 |
இருக்கைகள் எண்ணிக்கை | 3 |
வலைத்தளம் | hcs.gov.in/hcs/ |
தலைமை நீதிபதி | |
தற்போதைய | பிசுவநாத் சோமாதர் |
பதவியில் | 12 அக்டோபர் 2021 |
சிக்கிம் உயர் நீதிமன்றம், 1975-ல் சிக்கிம் இந்தியாவின் பகுதியாக இணைந்தபொழுது சிக்கிம் மாநில உயர்நீதிமன்றமாக நிறுவப்பட்டது. மாநிலத் தலைநகரமான காங்டாக்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றது. இந்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் பணிபுரிகின்றனர்.
வரலாறு
[தொகு]சிக்கிம் உயர் நீதிமன்றம் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் உயர் நீதிமன்றமாகும். சிக்கிமீல் உயர் நீதிமன்றத்தை நிறுவுவதற்கு நீதித்துறை (அதிகாரம் மற்றும் அதிகாரங்கள்) பிரகடனம், 1955-ல் வெளியிடப்பட்டது. சட்டப்பிரிவு 371F இன் பிரிவு (i) இன் கீழ்,சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த தேதிக்கு முன் உயர் நீதிமன்றம், நாட்டில் உள்ள மற்ற உயர் நீதிமன்றங்களைப் போலவே அரசியலமைப்பின் கீழ் சிக்கிம் மாநிலத்திற்கான உயர் நீதிமன்றம் செயல்படத் துவங்கியது. இது 1975இல் நிறுவப்பட்டது. நீதிமன்றத்தின் இருக்கை மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரான காங்டாக்கில் உள்ளது. 3 நீதிபதிகள் கொண்ட அனுமதிக்கப்பட்ட நீதிமன்ற பலத்துடன் செயல்படும் சிக்கிம் உயர்நீதிமன்றம் இந்தியாவின் மிகச்சிறிய உயர்நீதிமன்றமாகும்.
தலைமை நீதிபதி
[தொகு]நீதியரசர் பிசுவநாத் சோமாதார் சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 12 அக்டோபர் 2021 முதல் நியமிக்கப்பட்டார்.[1]
தலைமை நீதிபதி பட்டியல்
[தொகு]# | தலைமை நீதிபதி | முதல் | வரை |
---|---|---|---|
1 | மன் மோகன் சிங் குஜ்ரால் | 7 மே 1976 | 14 மார்ச் 1983 |
2 | மோகன் லால் ஸ்ரீமால் | 17 டிசம்பர் 1983 | 3 ஜனவரி 1985 |
3 | ஜுகல் கிஷோர் மொகந்தி | 21 ஜனவரி 1986 | 4 ஜனவரி 1989 |
4 | பிரஜா நாத் மிஸ்ரா | 20 ஜனவரி 1990 | 8 நவம்பர் 1992 |
5 | சுரேந்திர நாத் பார்கவா | 20 ஜனவரி 1993 | 10 பிப்ரவரி 1996 |
6 | கிருஷ்ணா முராரி அகர்வால் | 15 பிப்ரவரி 1996 | 26 அக்டோபர் 1996 |
7 | கன்னியப்பா ஆறுமுக தணிகாசலம் | 27 ஆகஸ்ட் 1997 | 26 செப்டம்பர் 1997 |
8 | ரெபுசுதன் தயாள் | 3 பிப்ரவரி 1999 | 17 மே 2003 |
9 | ராதா கிருஷ்ண பத்ரா | 9 ஜூலை 2003 | 23 நவம்பர் 2004 |
10 | பினோத் குமார் ராய் | 30 செப்டம்பர் 2005 | 26 டிசம்பர் 2006 |
11 | அஜய் நாத் ரே | 27 ஜனவரி 2007 | 30 அக்டோபர் 2008 |
12 | அஃப்தாப் ஹுசைன் சைகியா | 7 மார்ச் 2009 | 7 ஏப்ரல் 2010 |
13 | பேரின் கோஷ் | 13 ஏப்ரல் 2010 | 8 ஆகஸ்ட் 2010 |
14 | பி. டி. தினகரன் | 9 ஆகஸ்ட் 2010 | 29 ஜூன் 2011 |
15 | பெர்மோட் கோஹ்லி | 12 டிசம்பர் 2011 | மார்ச் 2013 |
16 | பயஸ் சி. குரியகோஸ் | 28 மார்ச் 2013 | 1 பிப்ரவரி 2013 |
17 | என்.கே. ஜெயின் | 7 ஜனவரி 2014 | 7 அக்டோபர் 2014 |
18 | சுனில் குமார் சின்ஹா | 8 அக்டோபர் 2014 | 6 ஜூலை 2016 |
19 | சதீஷ் கே. அக்னிஹோத்ரி | 22 செப்டம்பர் 2016 | 2018 |
20 | விஜய் குமார் பிஸ்ட் | 30 அக்டோபர் 2018 | 16 செப்டம்பர் 2019 |
21 | அருப் குமார் கோஸ்வாமி | 15 அக்டோபர் 2019 | 5 ஜனவரி 2021 |
22 | ஜிதேந்திர குமார் மகேசுவரி | 6 ஜனவரி 2021 | 31 ஆகத்து 2021 |
23 | பிஸ்வநாத் சோமாதர் | 12 அக்டோபர் 2021 | பதவியில் |
சான்றுகள்
[தொகு]- ↑ "Chief Justices appointed to Five High Courts [Read Notifications - Bar & Bench"] (in en-US). Bar & Bench. 2018-10-24. https://barandbench.com/chief-justices-five-high-courts-2/.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Sikkim High Court website பரணிடப்பட்டது 2009-11-24 at the வந்தவழி இயந்திரம்