டீஸ்டா ஆறு
Jump to navigation
Jump to search
டீஸ்டா ஆறு (River Teesta) (நேபாள மொழி:टिस्टा}}) இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடியான ஆறாகும். அம்மாநிலத்தின் ஊடாக முழுமையும் ஓடி பசுமையான ஆற்றுபடுகைகளையும் பள்ளத்தாக்குகளையும் உருவாக்கியுள்ள ஓர் ஆறாக விளங்குகிறது. பின்னர் இது சிக்கிமிற்கும் மேற்கு வங்காளத்திற்குமிடையேயான எல்லையை வரையறுக்கிறது. இறுதியாக வங்காள தேசத்தில் பிரம்மபுத்திராவின் துணையாறாக கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 315 கிலோமீட்டர்கள் (196 mi).