சிக்கிம் முதலமைச்சர், இந்திய மாநிலமான, சிக்கிமின், அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
1975 முதல் தற்போது வரை ஐந்து பேர் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த காசி லீந்தப் டோர்ஜி என்பவர் பதவி வகித்தார். சிக்கிம் சனநாயக முன்னணி கட்சியின் தலைவரான, பவன் குமார் சாம்லிங் 1994 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சிக்கிமின் முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறார். இவரே இம்மாநிலத்தின் நீண்டநாட்களாக பணியாற்றுகின்ற முதலமைச்சர் ஆவார்.[1][2]