சிக்கிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
འབྲས་མོ་ལྗོངས་
सिक्किम
—  மாநிலம்  —

முத்திரை
இந்தியாவில் சிக்கிமின் அமைவிடம்
அமைவிடம் 27°20′N 88°37′E / 27.33°N 88.62°E / 27.33; 88.62ஆள்கூற்று : 27°20′N 88°37′E / 27.33°N 88.62°E / 27.33; 88.62
நாடு  இந்தியா
மாநிலம் சிக்கிம்
மாவட்டங்கள் 4
நிறுவப்பட்ட நாள் மே 16, 1975
தலைநகரம் கேங்டாக்
மிகப்பெரிய நகரம் கேங்டாக்
ஆளுநர்
முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங்
ஆளுநர் சீனிவாஸ் தாதா சாகேப் பாடீல்
முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங்
உயர்நீதிமன்ற நீதிபதி
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (32)
மக்களவைத் தொகுதி འབྲས་མོ་ལྗོངས་
सिक्किम
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/சிக்கிம்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/சிக்கிம்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/சிக்கிம்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை 6,07,688 (28வது) (2011)
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg 0.684 (medium
கல்வியறிவு 76.6%% (7வது)
மொழிகள் நேபாளி, பூட்டியா மொழி, லெப்கா மொழி (1977 இருந்து), லிம்பு (1981லிருந்து), நேவாரி, ராய் மொழி, குருங் மொழி, மங்கார் மொழி, செர்பா மொழி, தமங் மொழி (1995லிருந்து) மற்றும் சுன்வார் மொழி (1996லிருந்து)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
ஐ. எசு. ஓ.3166-2 IN-SK
இணையதளம் [http://sikkim.gov.in sikkim.gov.in]


Sikkim in India.png

சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலம்.[1] தனி நாடாக விளங்கிய சிக்கிம், 1975ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேர்க்கப் பட்டது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இந்திய மாநிலங்களிலேயே கோவா மாநிலம் மட்டும் தான் சிக்கிமை விட சிறிய மாநிலம். சிக்கிமின் மேற்கில் நேபாளமும், வடக்கில் சீனாவும், கிழக்கில் பூட்டானும், கிழக்கில மேற்கு வங்காளமும் உள்ளன. உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்சன்சங்கா சிக்கிமில் உள்ளது.

இந்தியாவுடன் இணைப்பு[தொகு]

1947ல் இந்தியா விடுதலையடைந்த போது, சிக்கிமும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று முடியாட்சியாக தொடர்ந்தது. அதன் விடுதலைக்கு இந்தியா பாதுகாப்பு கொடுத்தது. இந்தியாவுடன் இணைவதற்கான வாக்கு வெற்றி பெறாததால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து (SPECIAL PROTECTORATE STATUS) கொடுத்தார். சிக்கிம் இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற நாடாக விளங்கியது. அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன; மற்ற அனைத்து துறைகளிலும் தன்னாட்சி பெற்றிருந்தது. நேப்பாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975-ல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5% சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்க, 16.05.1975-ல் சிக்கிம் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது.

வித்தியாசமான மாநிலம்[தொகு]

சிக்கிம், 7096 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். தெற்கு வடக்காக 115 கிலோமீட்டரும், கிழக்கு மேற்காக 65 கிலோமீட்டரும் விஸ்தீரணம் கொண்டுள்ளது. நான்கே மாவட்டங்கள். ]]கிழக்கு சிக்கிம் மாவட்டம்]] (தலைநகரம் காங்டாக்), மேற்கு சிக்கிம் மாவட்டம் (தலைநகரம் கைஷிங்), வடக்கு சிக்கிம் மாவட்டம் (தலைநகரம் மங்கன்), தெற்கு சிக்கிம் மாவட்டம் (தலைநகரம் நாம்ச்சி) என்பவை தான் மாவட்டங்களின் பெயர்கள். சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம் காங்டாக்.

இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் எவ்வளவோ அரசியல் குழப்பங்கள், தீவிரவாத துர்நிகழ்வுகள், போதைப் பொருள் புழக்கங்கள், சமூக பொருளாதாரக் கோணங்களில் பின்தங்கிய நிலை என்று இருந்தாலும் இயற்கை அன்னையின் பூரண அரவணைப்பு இருக்கிறது. வடகிழக்கின் ஏழு மாநிலங்களில் அடிதடிப் பிரச்னை, அரசியல் குழப்பம், தீவிரவாத நடவடிக்கைகள் என்று ஏதும் ஒரு சிறிதும் இல்லாத அமைதியான ஒரே மாநிலம் சிக்கிம்.

அரசியல் என்று பார்த்தால் சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்(குடியரசுத் தோழன்) என்கிற ஒரே கட்சி தான் பிரதானம். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. 2009 மே மாதம் பாராளுமன்றத்துடன் சேர்ந்து நடந்த மாநில சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 23 தொகுதிகளையும் பாராளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றி இருக்கிறது சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்.

சுற்றுச்சூழல் பராமரிப்பிலும், பொது சுகாதாரம், தூய்மை ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் தந்து நிர்வகிக்கப்படும் பகுதியாகத் திகழ்கிறது இந்தச் சிறிய மாநிலம். ஒட்டுமொத்த சிக்கிமிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை உள்ளது. கடைகளில் துணிப்பையில் தான் பொருட்கள் தருகிறார்கள். பயண வழியெங்கும், குறிப்பாக மலைப்பகுதிகளில் அவ்வளவு பயணிகள் வந்து செல்லும் இடத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள் கண்களில் படுவதில்லை.

ஏழெட்டு மாதங்கள் சுற்றுலாப் பயணிகளின் வரவு நிறைய பணப்புழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. டாக்சி வாடகையாகட்டும், அறைகளின் வாடகையாகட்டும், உணவுப் பொருட்களின் விலையாகட்டும் எல்லாமே மாநிலம் இருக்கும் உயரத்துக்குப் பொருத்தமாகவே. மூவாயிரம் அடியிலிருந்து 28208 அடி உயரம் (உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்சன் ஜங்கா இந்த மாநிலத்தின் தான் உள்ளது) வரை மாநிலத்தின் உயரம் வேறுபடுகிறது.

மொத்த மாநிலத்திலும் எங்கும் தொடர்ந்து ஐந்நூறடி தூரம் ஏற்ற இறக்கம் இல்லாமல் இல்லை. அதனாலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறிப்பாக காவலர்க்கும் தொப்பை என்பது அரிதாகவே உள்ளது.

போக்குவரத்து[தொகு]

ஏமேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பக்தோக்ரா விமான நிலையம் 114 கிலோமீட்டர் தூரத்திலும், NJP என்று சொல்லப்படும் நியூ ஜல்பாய்குரி (இதுவும் மேற்கு வங்காளமே) என்கிற ஊரின் புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் 125 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சாலைமார்க்கமாக டார்ஜிலிங் 94 கிலோமீட்டர் தொலைவிலும், சிலிகுரி என்கிற ஊர் 114 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சிக்கிமில் புகைவண்டித் தடமோ, விமான நிலையமோ கிடையாது. பாக்யாங் விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [2]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 540,851 100%
இந்துகள் 329,548 60.93%
இசுலாமியர் 7,693 1.42%
கிறித்தவர் 36,115 6.68%
சீக்கியர் 1,176 0.22%
பௌத்தர் 152,042 28.11%
சமணர் 183 0.03%
ஏனைய 12,926 2.39%
குறிப்பிடாதோர் 1,168 0.22%

இந்திய இராணுவம்[தொகு]

நாதுலா[தொகு]

இந்திய சீன எல்லைப் பகுதியான நாதுலாவுக்குச் செல்ல முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். வாகன சோதனை முதலான பல சோதனைகளுக்குப் பின்னரே இப்பகுதிக்குச் செல்ல முடியும். எல்லைக்கு அப்பால் சீன இராணுவ வீரர்கள் நடமாடுவதையும் இங்கிருந்து பார்க்க முடியும். சுமார் 14400 அடி உயரத்தில் உள்ள இப்பகுதி கடுங்குளிர் கொண்டது.[1]

பாபா மந்திர்[தொகு]

சிக்கிமில் உள்ள பாபா மந்திர் புகழ் பெற்றது. பஞ்சாப் ரெஜிமெண்டைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் எனும் இராணுவ வீரர் ஞாபகார்த்தமாக ஏற்படுத்தப்பட்ட பாபா மந்திர் வித்தியாசமானது. ஆச்சர்யமான விதத்தில் இந்திய ராணுவம் அவர் தனது பணியைத் தொடர்வதாகக் கருதுகிறது. அங்கு பணிபுரியும் இந்திய இராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்கள் மனவலிமையை அவர் திடப்படுத்துவதாக நம்பப்படுகின்றது. வருட விடுமுறையில் அவரது பெயரில் பஞ்சாபில் உள்ள அவரது வீட்டிற்கு அவர் செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. அவரது இராணுவ சீருடையுடன் ஓர் ராணுவ வீரர் பயணம் செய்து ஹர்பஜன்சிங் வீட்டில் அவரது சீருடையை சேர்த்து விட்டு திரும்புகிறார்.[1]

சுற்றுலா[தொகு]

சுற்றுலாத் துறை இம்மாநிலத்தின் ஒரு முக்கியமான வருவாய் ஈட்டும் துறை ஆகும். இம்மாநிலம் முழுவதும் மலைப்பாங்கான பகுதியில் இருப்பதால் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது. மேலும் பௌத்தர்களுக்கு ஒரு முக்கியமான சமய மையமாகவும் அமைந்துள்ளது. இங்கு சாங்கு ஏரி, குருதோங்மார் ஏரி, யும்தாங் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களும் ரும்டெக் மடம் போன்ற பௌத்தத் தலங்களும், நாதுலா எனும் இந்திய சீன எல்லைப் பகுதியும் குறிப்பிடத்தக்க இடங்களாகும்.

ருஸ்தம்ஜி பார்க்[தொகு]

தலைநகரில் அரசு தலைமை செயலகத்திற்கு அருகிலுள்ளது. அரிய வகை மான்களும் சிவப்பு பாண்டாக் கரடிகளும் வாழ்கின்றன.[1]

மின் உற்பத்தி[தொகு]

இந்தியாவில், தன் மாநிலத்தின் தேவைக்கதிகமான மின் உற்பத்தி உள்ள மாநிலங்களில் முதலாவதாக சிக்கிம் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 கலைமகள்; நவம்பர் 2014; பக்கம் 10-12
  2. Census of india , 2001
  3. http://timesofindia.indiatimes.com/india/Tripura-to-supply-100MW-power-to-Bangladesh/articleshow/44588026.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிம்&oldid=2008618" இருந்து மீள்விக்கப்பட்டது