நேபாள மாநில எண் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாநில எண் 1
प्रदेश न० १
மாநிலம்
மேலிருந்து கடிகாரச் சுற்றில்: எவரெசுட்டு சிகரம், நம்ச்சி பஜார், கன்யாம், வருண் சமவெளி
மேலிருந்து கடிகாரச் சுற்றில்: எவரெசுட்டு சிகரம், நம்ச்சி பஜார், கன்யாம், வருண் சமவெளி
நேபாளத்தில் மாநில எண் 1ன் அமைவிடம்
நேபாளத்தில் மாநில எண் 1ன் அமைவிடம்
வார்ப்புரு:Province No. 1 districts labelled map

மாநில எண் 1
ஆள்கூறுகள்: 26°27′15″N 87°16′47″E / 26.45417°N 87.27972°E / 26.45417; 87.27972ஆள்கூறுகள்: 26°27′15″N 87°16′47″E / 26.45417°N 87.27972°E / 26.45417; 87.27972
நாடு நேபாளம்
மாநிலம்மாநில எண் 1
நிறுவப்பட்டது.20 செப்டம்பர் 2015
தலைநகரம்விராட்நகர்[1]
பெரிய நகரங்கள்விராட்நகர், இதாரி, தரண், தன்குட்டா, வீரதமோத்
மாவட்டங்கள்14 மாவட்டங்கள்
அரசு
 • Bodyமாநில எண் 1 அரசு
 • ஆளுநர்கோவிந்த சுப்பா
 • முதலமைச்சர்செர்தன் ராய் ( மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)
 • சட்டமன்ற அவைத் தலைவர்பிரதீப் குமார் பண்டாரி
 • சட்டமன்றத் தொகுதிகள்
 • மாநில சட்டமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்25,905
உயர் புள்ளி8,848
தாழ் புள்ளி59
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4
 • அடர்த்தி180
இனங்கள்நேபாளிகள்
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)
GeocodeNP-ON
அலுவல் மொழிகள்நேபாளி, லிம்பு மொழி மற்றும் ராய் மொழி
பிற மொழிகள்ராஜ்வம்சி, லெப்ச்சா, செர்பா முதலியன
நேபாள மாநில எண் 1ல் உள்ள 14 மாவட்டங்களின் வரைபடம்

நேபாள மாநில எண் 1 (Province No. 1) நேபாளத்தின் 7 எண்களின் பெயர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். மாநில எண் 1 நேபாளத்தின் புதிய அரசியல் அமைப்பு சட்டப்படி, 20 செப்டம்பர் 2015 அன்று துவக்கப்பட்டது.[2][3]17 சனவரி 2018 அன்று இம்மாநிலத்தின் இடைக்காலத் தலைநகரமாக விராட்நகர் அறிவிக்கப்பட்டுள்ளது.[4] [5] [6] நேபாளத்தின் கிழக்குப் பகுதியின் இமயமலையில் அமைந்த இம்மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 25,905 சதுர கிலோ மீட்டர் ஆகும். இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,534,943 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 175.6 ஆக உள்ளது. [7]இம்மாநிலம் 14 மாவட்டங்களைக் கொண்டது.

அமைவிடம்[தொகு]

நேபாளத்தின் தூர-கிழக்கில் அமைந்த இம்மாநிலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் இந்தியாவின் பிகார், கிழக்கில் சிக்கிம், தென் மேற்கில் நேபாள மாநில எண் 2, மேற்கில் நேபாள மாநில எண் 3 எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்டங்கள்[தொகு]

நேபாள மாநில எண் 1-இல் அமைந்துள்ள 14 மாவட்டங்களின் விவரங்கள்:

1.. தாப்லேஜுங் மாவட்டம்
2. பாஞ்சதர் மாவட்டம்
3. இலாம் மாவட்டம்
4. சங்குவாசபா மாவட்டம்
5. தேஹ்ரதும் மாவட்டம்
6. தன்குட்டா மாவட்டம்
7. போஜ்பூர் மாவட்டம்
8. கோடாங் மாவட்டம்
9. சோலுகும்பு மாவட்டம்
10. ஒகல்டுங்கா மாவட்டம்
11. உதயபூர் மாவட்டம்
12. ஜாப்பா மாவட்டம்
13. மொரங் மாவட்டம்
14. சுன்சரி மாவட்டம்

அரசியல்[தொகு]

இம்மாநில சட்டமன்றத்தின் 93 சட்டமன்ற உறுப்பினர்களில் 56 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும்; 37 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 28 உறுப்பினர்களையும் தேர்வு செய்கின்றனர்.

இம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின் செர்தன் ராய் 15 பிப்ரவரி 2018 அன்று பதவியேற்றார். [8]

சுற்றுலா தலங்கள்[தொகு]

மாநில சட்டமன்றத் தேர்தல், 2017[தொகு]

2017ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற இம்மாநில சட்டமன்றத்தின் 93 உறுப்பினர்களுக்கான பொதுத் தேர்தலில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 51 இடங்களையும், மாவோயிஸ்ட் 15 இடங்களை வென்று கூட்டணி அரசு அமைத்துள்ளது. நேபாளி காங்கிரஸ் 21 இடங்களையும், பிற கட்சிகள் ஆறு இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

அரசியல் கட்சி நேரடி தேர்தலில் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 36 673,709 38.79 15 51
நேபாளி காங்கிரஸ் 8 586,246 33.76 13 21
மாவோயிஸ்ட் 10 206,781 11.91 5 15
நேபாள சோசலிச கூட்டமைப்பு முன்னணி 1 70,476 4.06 2 3
ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி 0 57,342 3.30 1 1
சாங்கிய லோக்தாந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச் 0 26,123 1.50 1 1
பிறர் 0 115,945 6.68 0 0
சுயேட்சைகள் 1 1
மொத்தம் 56 1,736,622 100 37 93
Source: Election Commission of Nepal
எவரெஸ்ட் மலைத்தொடர்கள், மீரா சிகரத்திலிருந்து

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Winners root for Biratnagar as provincial capital" (18 சனவரி 2018).
  2. "Nepal Provinces". statoids.com. பார்த்த நாள் 2016-03-21.
  3. Nepal passes new Constitution, splits country into 7 federal provinces
  4. Biratnagar celebrates its status of provincial capital
  5. "Locals intensify protest in Dhankuta after Biratnagar named as provincial HQ" (19 January 2018).
  6. "Nepal government announces Provincial Capitals and Chiefs" (17 January 2018).
  7. "Province 1: Call for opportunities in land of great promise". Kantipur Publications Pvt. Ltd. (12 August 2015).
  8. Rai sworn in as Province 1 chief minister
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_மாநில_எண்_1&oldid=2738797" இருந்து மீள்விக்கப்பட்டது