கோர்க்கா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


நேபாளத்தின் மாநில எண் 4-இல் அமைந்த கோர்க்கா மாவட்டம்

கோர்க்கா மாவட்டம் (Gorkha District) (நேபாளி: गोरखा जिल्लाஇந்த ஒலிக்கோப்பு பற்றி Listen), நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மேற்கு பிராந்தியத்தின், நேபாள மாநில எண் 4-இல் கண்டகி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பிரிதிவி நாராயணன் நகரம் ஆகும்.

கோர்க்கா மாவட்டம் 3,610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 272069 மக்கள் தொகையும் கொண்டது.[1] இம்மாவட்டத்தில் புகழ் பெற்றா மனகாமனா கோயில் அமைந்துள்ளது. [2]இம்மாவட்டத்தில் வாழும் குருங், நேவாரிகள், மகர்கள் மற்றும் செட்டிரி மக்கள் நேபாளி மொழி, நேவாரி மொழி, காலே மொழி மற்றும் மகர் மொழிகள் பேசுகின்றனர்.

இம்மாவட்டத்தில் கோரக்க சித்தரின் கோயில், கோரமான காளி கோயிலும் அமையப் பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் செப்பி, தரௌதி, மர்ச்சியாந்தி மற்றும் புத்தி கண்டகி என நான்கு ஆறுகள் பாயும் இப்பகுதியில் கோர்க்கா நாடு அமைந்திருந்தது.

பெயர்க் காரணம்[தொகு]

கோர்க்கா எனும் இம்மாவட்டத்திற்கு பெயர் அமைய இரண்டு தொன்மக் கதைகள் கூறப்படுகிறது.

  • நேபாள மொழியில் கார்க்கா என்பதற்கு மேய்ச்சல் நிலம் என்று பொருள். பின்னர் இப்பெயர் மருவி கோர்க்கா எனப் பெயராயிற்று.
  • கோரக்க சித்தர் இப்பகுதியில் வாழ்ந்த காரணத்தினால் இப்பகுதியை கோர்கா எனப் பெயராயிற்று.
கோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயனன் சகாதேவன்

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளின் புவியியல்[3] உயரம் பரப்பளவு விழுக்காடு
Lower Tropical climate 300 மீட்டருக்கும் கீழ் (1,000 அடிக்கு கீழ்) 0.1%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடி
19.8%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடி
14.6%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடி
13.3%
மான்ட்டேன்#சப்-ஆல்பைன் மண்டலம் 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடிகள்
14.9%
மான்ட்டேன்# ஆல்பைன் மற்றும் தூந்திர புல்வெளிகள் 4,000 - 5,000 மீட்டர்கள்
13,100 - 16,400 அடிகள்
10.6%
பனிபடர்ந்த பகுதிகள் 5,000 மீட்டர்களுக்கு மேல் 11.5%
டிரான்ஸ்-இமயமலை[4]

[5]

3,000 - 6,400 மீட்டர்கள்
9,800 - 21,000 அடிகள்
14.8%

போக்குவரத்து வசதிகள்[தொகு]

கோர்க்கா நகரத்திலிருந்து காட்மாண்டு (ஆறு மணி நேரம்) மற்றும் பொக்காரா (மூன்று மணி நேரம்) நகரங்களுக்குச் செல்ல அன்றாடம் பேருந்து சேவைகள் உள்ளது.[6]

நகராட்சிகளும், கிராம வளர்ச்சி குழுக்களும்[தொகு]

கோர்க்கா மாவட்டத்தின் கிராம வளர்ச்சி குழுக்களின் வரைபடம்

கோர்க்கா மாவட்டத்தில் ஒரு நகராட்சியும், 78 கிராம வளர்ச்சிக் குழுக்களும் உள்ளது.

மலைகள்[தொகு]

  • மானசலு (8,516 மீட்டர்)
  • இமால் சூலி (7,895 மீட்டர்)
  • சிரிங்கி இமால் (7,177 மீட்டர்)
  • புத்த இமால் (6,674 மீட்டர் )
  • கணேஷ் இமால் ( 7,422 மீட்டர்)
  • நாக்தி சூலி (7,871 மீட்டர்)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 28°17′24″N 84°41′23″E / 28.289976°N 84.68975°E / 28.289976; 84.68975

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்க்கா_மாவட்டம்&oldid=2164189" இருந்து மீள்விக்கப்பட்டது