சங்குவாசபா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள மாநில எண் 1-இல் அமைந்த சங்குவாசபா மாவட்டம்

சங்குவாசபா மாவட்டம் (Sankhuwasabha District) (நேபாளி: सङ्खुवासभा जिल्ला Listen) நேபாள மாநில எண் 1-இல் [1]அமைந்த 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் கிழக்கு பிராந்தியத்தில் கோசி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காத்பாரி நகரம் ஆகும். [2]

இதன் பரப்பளவு 3,480 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 1,58,742 ஆகும். இம்மாவட்டத்தில் செயின்புர் மற்றும் மடி எனும் இரண்டு நகராட்சிகள் உள்ளது.

இதன் எல்லைப்புற மாவட்டங்களாக போஜ்பூர் மாவட்டம், தேஹ்ரதும் மாவட்டம், தாப்லேஜுங் மாவட்டம், சோலுகும்பு மாவட்டம் மற்றும் வடக்கே சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தின் டிங்கிரி நகரம் அமைந்துள்ளது.

உள்ளூர் பழங்குடிகளான குமால், யக்கா, குலூங், ராய், குரூங், லிம்பு, நேவா மக்கள் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் ஏலக்காய் விளைச்சல் நன்கு உள்ளது. அருண் ஆறு இம்மாவட்டத்தின் குறுக்கே பாய்கிறது.

கிராம வளர்ச்சி சபைகள்[தொகு]

சங்குவாசாபா மாவட்ட கிராம வளர்ச்சிக் குழுக்கள்

இம்மாவட்டத்தில் 35 கிராம வளர்ச்சிக் குழுக்கள் செயல்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளப் புவியியல் / தட்ப வெப்பம்[3] உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டருக்குக் கீழ் 0.3%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள் 10.0%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 24.8%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 23.3%
Montane ecology#Subalpine zone 3,000 - 4,000 மீட்டர்கள் 12.8%
Montane ecology#Alpine grasslands and tundra 4,000 - 5,000 மீட்டர்கள் 8.4%
Snow line 5,000 மீட்டருக்கு மேல் 20.4%

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nepal passes new Constitution, splits country into 7 federal provinces
  2. Sankhuwasabha district
  3. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 91 (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்குவாசபா_மாவட்டம்&oldid=3893133" இலிருந்து மீள்விக்கப்பட்டது