நேபாள மக்கள்தொகையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள மகர் இன இளம்பெண்கள்
நேபாள மக்கள் தொகை வளர்ச்சி (1960-2011)
நேபாள கஸ் பகாடி பெண்கள்
நேபாள பிராமணப் பையன்
நேபாள சத்திரிய இன குழந்தைகள்

2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் மக்கள்தொகை 2,64,94,504 (2 கோடியே, 64 இலட்சத்து, 94 ஆயிரத்து 504) என கணக்கிடப்பட்டது. கடந்த 21.6 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1.35% மட்டுமே உயர்ந்துள்ளது. [1] 2016-இல் பெண்களின் சராசரி வயது 25 ஆகவும், ஆண்களின் சராசரி வயது 22 ஆண்டுகளாகவும் இருந்தது.[2]நேபாள மக்கள்தொகையில் 4.4% மட்டுமே 65 வயதினர்க்கு மேற்பட்டவர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் பெண்கள் 6,81,252 மற்றும் ஆண்கள் 5,97,628 ஆகவுள்ளனர். 15 முதல் 64 வயதிற்குட்டவர்கள் மக்கள்தொகையில் 61% ஆக உள்ளனர் மற்றும் 14 வயதிற்குட்பட்டவர்கள் 34.6% ஆகவுள்ளனர். 2011-ஆம் ஆண்டின் கணக்குப்ப்படி, சராசரி சிசு பிறப்பு விகிதம் 1,000 நபர்களுக்கு 22.17 வீதமும், சராசரி சிசு இறப்பு வீதம் 46 ஆக உள்ளது. 2006-இல் சிசு மரணம் 1000 குழந்தைகளுக்கு 48 வீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் மகப்பேறு மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதால், சிசு இறப்பு வீதம், நகரப்பகுதிகளை காட்டிலும், கிராமப்பகுதிகளில் கூடுதலாக உள்ளது.[3] பெண்களில் ஆயுள் எதிர்பார்ப்பு 67.44 வயதாகவும், ஆண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு 64.94 வயதாகவும் உள்ளது. இறப்பு வீதம் ஒரு இலட்சம் பேரில் 681 ஆகவுள்ளது. நிகர இடப்பெயர்வு வீதம் ஒரு இலட்சம் பேரில் 61 ஆகவுள்ளது. 2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சராசரி எழுத்தறிவு வீதம் 65.9% ஆக உள்ளது.[4]

மக்கள்தொகை வளர்ச்சி[தொகு]

சூன் 2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் மக்கள்தொகை 23 மில்லியன் ஆக இருந்தது.[5]1991-ஆம் ஆண்டிலிருந்து மக்கள்தொகை வளர்ச்சி 2.3% (5 மில்லியன்) உயர்ந்துள்ளது.[5] ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் மக்கள்தொகை 3 மில்லியன் வீதம் உயர்ந்து தற்போது சராசரி மக்கள்தொகை 30 மில்லியனாக உள்ளது.

இந்தியா மற்றும் திபெத்திலிருந்து நேபாளத்திற்கு மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தால், நேபாளத்தில் 60 ஜாதியினரும், மொழிப்பிரிவினரும் உள்ளனர்.[6][6] 1950-ஆம் ஆண்டு முதல் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் காரணமாக, மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் காத்மாண்டு சமவெளி மற்றும் தராய் சமவெளிகளில் இடம்பெயர்ந்துள்ளனர்.[6] 1980களில் மேற்கு சித்வான் சமவெளிப் பகுதி, நேபாளத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக மாறியது. நேபாளத்தின் சமவெளிப் பகுதிகளில் போக்குவரத்து, தொழில், வணிகம், வேளாண்மை மற்றும் அரசு சேவைகள் உயர்ந்ததால், சமவெளிப் பகுதிகளில் இடப்பெயர்வு மூலமும், இயற்கையாகவும் மக்கள்தொகை வேகமாக உயர்ந்து வருகிறது. [6]

முக்கிய புள்ளி விவரங்கள்[தொகு]

நேபாளத்தின் மக்கள்தொகை பரம்பல் அமைப்பு[தொகு]

2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 22 சூன் 2011-இல் நேபாளத்தின் மக்கள்தொகை அமைப்பு:[7]

வயதினர் ஆண் பெண் மொத்தம் %
மொத்தம் 12 849 041 13 645 463 26 494 504 100
0-4 1 314 957 1 253 006 2 567 963 9.69
5-9 1 635 176 1 569 683 3 204 859 12.10
10-14 1 764 630 1 710 794 3 475 424 13.12
15-19 1 443 191 1 488 789 2 931 980 11.07
20-24 1 043 981 1 314 090 2 358 071 8.90
25-29 917 243 1 162 111 2 079 354 7.85
30-34 770 577 964 728 1 735 305 6.55
35-39 740 200 864 119 1 604 319 6.06
40-44 660 290 725 831 1 386 121 5.23
45-49 575 101 597 858 1 172 959 4.43
50-54 505 864 499 612 1 005 476 3.80
55-59 412 892 405 371 818 263 3.09
60-64 368 451 388 376 756 827 2.86
65-69 277 782 276 667 554 449 2.09
70-74 199 610 195 543 395 153 1.49
75-79 117 358 117 777 235 135 0.89
80-84 62 787 65 990 128 777 0.49
85-89 25 810 26 716 52 526 0.20
90-94 8 940 11 395 20 335 0.08
95+ 4 201 7 007 11 208 0.04
வயதினர் ஆண் பெண் மொத்தம் %
0-14 4 714 763 4 533 483 9 248 246 34.91
15-64 7 437 790 8 410 885 15 848 675 59.82
65+ 696 488 701 095 1 397 583 5.27

ஆயுள் எதிர்பார்ப்பு[தொகு]

காலம் ஆயுள் எதிர்பார்ப்பு
/ ஆண்டுகள்
காலம் ஆயுள் எதிர்பார்ப்பு
/ஆண்டுகள்
1950–1955 34.0 1985–1990 52.1
1955–1960 34.6 1990–1995 56.4
1960–1965 36.2 1995–2000 60.5
1965–1970 39.1 2000–2005 64.0
1970–1975 42.0 2005–2010 66.7
1975–1980 44.9 2010–2015 68.9
1980–1985 48.3

ஆதாரம்: UN World Population Prospects[8]

மக்கள் தொகை புள்ளி விவரம்[தொகு]

நேபாளத்தின் பெரிய இனக் குழுவான சத்திரியப் பையன்
அதிக மக்கள்தொகை கொண்ட இனக்குழுக்கள்/சாதியினர் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு)[9][10] மக்கள்தொகை மொத்தம் %
சத்திரிய (கஸ்) 4,398,053 16.6%
பிராமணர் கஸ் மக்கள் 3,226,903 12.2%
மகர் 1,877,733 7.3%
தாரு 1,737,470 6.6%
நேவார் மக்கள் 1,539,830 5.9%
தமாங் மக்கள் 1,321,933 5%
சன்யாசி மக்கள் 1,287,633 4.8%
காமி மக்கள் (கஸ்) 1,258,554 4.7%
இசுலாமியர் 1,164,255 4.4%
யாதவர்கள் 1,054,458 4.0%
ராய் மக்கள் 620,004 2.3%
குரூங் மக்கள் 522,641 1.9%
செர்ப்பா 472,862 1.8%
தாக்கூரி மக்கள் 425,623 1.6%
லிம்பு மக்கள் 387,300 1.4%
சிர்கி மக்கள் 374,816 1.41%
தேலி மக்கள் 369,688 1.4%
சாமர் (தலித்) 335,893 1.3%
குஷ்வாஹா 306,393 1.1%
முசாகர் 234,490 0.88%
குர்மி மக்கள் 231,129 0.87%
தானுக் 219,808 0.82%
துசாத்/பசவன் 208,910 0.79%
தமாலி/தோலி 112,946 0.42%
சுனுவார் மக்கள் 100,000 0.38%

குமால் மக்கள்

121,196 0.46%
பிறர் (100-க்கும் மேற்பட்ட சாதிகள்/இனக்குழுக்கள்) 4,229,290 15.96%

கரு வளர்ச்சி மற்றும் குழந்தை பிறப்பு புள்ளிவிவரம்[தொகு]

நேபாளத்தின் மொத்த கருவள வீதம் மற்றும் பிறப்பு வீதம்::[11]

ஆண்டு பிறப்பு வீதம் (மொத்தம்) கருவள வீதம் (மொத்தம்) பிறப்பு வீதம் (நகர்புறம்) கருவள வீதம் (நகர்புறம்) பிறப்பு வீதம் (கிராமப்புறம்) கருவள வீதம் (கிராமப்புறம்)
1996 37 4.64 (2,9) 27 2.85 (1,9) 38 4.83 (3,1)
2001 33.5 4.1 (2,5) 20.6 2.1 (1,4) 34.9 4.4 (2,6)
2006 28.4 3.1 (2,0) 21.9 2.1 (1,4) 29.5 3.3 (2,1)
2011 24.3 2.6 (1,8) 16.6 1.6 (1,2) 25.5 2.8 (1,8)
2016 22.4 2.3 (1.7) 19.9 2.0 (1.5) 26.3 2.9 (2.1)

2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் நலம் புள்ளிவிவரப்படி கீழ்கண்ட புள்ளி விவரங்கள் காட்டுகிறது.[12]

குழந்தை பிறப்பின் போது சராசரி இடைவேளை (மாதங்கள்)

மொத்தம்: 36.2
கிராமப்புறம்: 35.9
நகர்புறம்: 40.3 (2011)

முதல் குழந்தை பிறப்பின் போது சராசரி வயது

சராசரி: 20.1 (2011)

கருவள வீதம் - முன்னரும் தற்போதும்

மொத்த கருவள வீதம் : 4.6 குழந்தை பிறப்பு/பெண்கள் (1996)
மொத்த கருவள வீதம்: 4.1 குழந்தை பிறப்பு/பெண்கள் (2001)
மொத்த கருவள வீதம்: 3.1 குழந்தை பிறப்பு/பெண்கள் (2006)
மொத்த கருவள வீதம்Total fertility rate: 2.6 குழந்தை பிறப்பு/பெண்கள்
கிராமப்புற கருவள வீதம்: 2.8 குழந்தை பிறப்பு/பெண்கள்
நகர்ப்புற கருவள வீதம்: 1.6 குழந்தை பிறப்பு/பெண்கள் (2011)

ஒரு குடும்பம் வீதம் குழந்தைகளின் எண்ணிக்கை

ஒட்டு மொத்தமாக (பெண்/ஆண்): 2.1 / 2.3
தற்போது மணமானவர்கள் (பெண்/ஆண்): 2.2 / 2.3
நகர்புறம் (பெண்/ஆண்): 1.9 / 2.0
கிராமப்புறம் (பெண்/ஆண்): 2.2 / 2.3 (2011)

பாலினம் மற்றும் வயது வாரியாக குடும்ப அளவு

2011-இல் பாலினம் மற்றும் வயது வாரியாக குடும்ப அளவு
வயது பெண்கள் ஆண்கள்
15-19 1.9 2.2
20-24 1.9 2.1
25-29 2.1 2.1
30-34 2.2 2.3
35-39 2.3 2.4
40-44 2.5 2.4
45-49 2.6 2.6

மொழிகள்[தொகு]

நேபாளத்தில் அதிகம் பேசப்படும் மூன்று வகையான மொழிக் குடும்பங்கள் உள்ளது. அவைகள்:இந்திய-ஆரிய மொழிகள், திபெத்திய-பர்மிய மொழிகள் மற்றும் வட்டார பழங்குடி மொழிகள் ஆகும். 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் நேபாளத்தில் 92 மொழிகள் குறிப்படாதவைகள் பட்டியலில் இருந்தது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் நேபாள மொழி ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் உள்ளது.[13]

நேபாள நாட்டு மொழிகள் (2011 )[14]
மொழிகள் %
நேபாளி
44.6%
மைதிலி
11.7%
நேபால் பாசா & பிற மொழிகள்
10.4%
போஜ்புரி
6%
தாரு
5.8%
தாமாங்
5.1%
நேவார்
3.2%
மகர் மொழி
3%
பஜ்ஜிகா மொழி
3%
உருது
2.6%
செர்ப்பா
1.9%
லிம்பு
1.3%
குரூங் மொழி
1.2%
குறிக்கப்படாதவைகள்
0.2%

சமயம்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தில் இந்துக்கள் 81.3%, பௌத்தர்கள் 9.0%, இசுலாமியர் 4.4%, கிராதர்கள் 3.0%, கிறித்தவர்கள் 1.42% மற்றும் பிறர் 0.9% ஆக உள்ளனர்.[15]

நேபாள இந்து மணமக்கள்

2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நேபாளம் மதச்சார்ப்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. [16] முன்னர் நேபாளம் இந்து சமய நாடாக விளங்கியது.



நேபாளத்தில் சமயங்கள் (2011)[14]

  பிற சமயங்கள் (0.9%)

நேபாள இனக்குழுக்கள் மற்றும் வட்டார மக்கள்[தொகு]

நேபாள இனக்குழுக்கள் (2011)[14]

  காமி மக்கள் (4.8%)
  இசுலாமியர் (4.4%)
  ராய் மக்கள் (4%)

நேபாள மொழி தேசிய மொழியாக உள்ளது. 2000-ஆம் முன்னர் வரை சமஸ்கிருத மொழி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டது. மாவோயிஸ்டுகள் சமஸ்கிருத மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களை கொடூரமாக தாக்கியதால் 2001-ஆண்டிலிருந்து பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்பிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னர் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் 2019 முதல் மீண்டும் சமஸ்கிருத மொழி பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.[17] தெராய் சமவெளிகளில் மட்டும் வாழும் மாதேசி மக்கள் மற்றும் இமயமலைகளில் வாழும் திபெத்திய மக்கள், தாரு மக்கள், செர்ப்பா மக்கள் போன்றவர்கள் அவரவர் வட்டார மொழிகளில் பேசுகின்றனர்.

மனித வள குறியீட்டில் மாதேசி மக்கள் நேபாளத்தில் முதலிடத்தில் உள்ளனர்.[18] பாலின சமத்துவத்தில் நேவார் இனப் பெண்கள் கல்வியிலும், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மற்ற இனக்குழுக்களை விட அதிகம் முன்னேறியுள்ளனர். நேவார் பெண்களை ஒப்பிடும் போது, பிராமண மற்றும் சத்திரியப் பெண்களின் நிலை குறைவாகவே உள்ளது.[19][20][21][22][23]

வெளிநாடுகளில் நேபாள மக்கள்[தொகு]

நேபாளம் தவிர்த்து நேபாளி மக்களில் கூர்க்கா இன மக்கள் அதிகமாக இந்தியா, ஐக்கிய இராச்சியம், வளைகுடா நாடுகள், மலேசியா, ஆங்காங்கு, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் இராணுவம் மற்றும் காவல் துறையில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிகின்றனர். இந்தியாவிலும், ஐக்கிய இராச்சியத்திலும், நேபாள கூர்க்கா மக்களை கொண்ட கூர்க்கா ரெஜிமெண்ட் படைப்பரிவு உள்ளது.

சிங்கப்பூர் காவல் துறையில் பணிபுரியம் நேபாள கூர்க்கா காவலர்

2001-ஆம் கணக்கெடுப்பின் படி, ஐக்கிய இராச்சியத்தில் 6,000 கூர்க்கா மக்கள் வாழ்ந்து வந்தனர்.[24] தற்போதைய கணக்கெடுப்பின் படி, ஐக்கிய இராச்சியத்தில் 51,000 நேபாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.[25]

வெளிநாடு வாழ் நேபாளிகள்[தொகு]

2000-ஆம் ஆண்டு முதல் இந்தியா தவிர்தது மத்திய கிழக்கு நாடுகள், சவுதி அரேபியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் நேபாளிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.[26]

வெளிநாட்டு வாழ் நேபாளிகள்
நாடு மக்கள் தொகை
சவுதி அரேபியா 250,000
மலேசியா 6,175
கத்தார் 200,000[27]
ஜப்பான் 80,038[28]
ஐக்கிய அரபு அமீரகம் 400,000
ஐக்கிய இராச்சியம்[25] 62,000
ஈராக்[29] 30,000
சீனா 21,000
போர்த்துக்கல் 50,000
ஆங்காங்கு 16,000
தென் கொரியா 22,015
கனடா 15,000
சிங்கப்பூர் 4000
இந்தியா தவிர்த்து பிற வெளிநாடு வாழ் நேபாளிகள் ~1,616,709

இந்தியாவில் நேபாளிகள்[தொகு]

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கே அமைந்த டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பெங் மாவட்டங்களில் நேபாள கூர்க்கா மக்கள் அதிகம் வாழும் பகுதிகளைக் கொண்டு கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம் அமைக்கப்பட்டது. மேலும் நேபாள நாட்டு கூர்க்கா இன மக்கள் கொண்ட கூர்க்கா ரெஜிமெண்ட மற்றும் கூர்க்கா துப்பாக்கிப் படைகள் இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்படுகிறது.[30][31]

ஐக்கிய இராச்சியத்தில்[தொகு]

மே 2009 முதல் பிரித்தானியப் பேரரசின் இராணுவத்தில் குறைந்தது நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த கூர்க்கா படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் ஐக்கிய ராச்சியத்தில் குடியேற அனுமதிக்கப்பட்டது.

நேபாளத்தில் வாழும் வெளிநாட்டவர் மக்கள்தொகை[தொகு]

லண்டனில் உள்ள நேபாள கூர்க்கா படைவீரரின் நினைவுச் சின்னம்

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தில் பிறந்த வெளிநாட்டவர்களின் குழந்தைகள் 1,16,571 ஆக இருந்தது. வெளிநாட்டு குழந்தைகளில் 90% இந்திய நாட்டவர்களின் குழந்தைகளாக இருந்தனர். மீதம் 10% குழந்தைகள் பூட்டான், பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டவர்களின் குழந்தைகள் ஆவார்.[32]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Population and Housing Census 2011 (National Report)" (PDF). Central Bureau of Statistics (Nepal). Archived from the original (PDF) on 18 April 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
  2. "The World Factbook — Central Intelligence Agency". www.cia.gov (in ஆங்கிலம்). Archived from the original on 2018-01-14. பார்க்கப்பட்ட நாள் 2017-04-04.
  3. Lamichhane, Reeta; Zhao, Yun; Paudel, Susan; Adewuyi, Emmanuel O. (2017-01-01). "Factors associated with infant mortality in Nepal: a comparative analysis of Nepal demographic and health surveys (NDHS) 2006 and 2011". BMC Public Health 17 (1): 53. doi:10.1186/s12889-016-3922-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2458. பப்மெட்:28068969. 
  4. "Nepalese peoples and nationality law". The World Factbook. CIA. பார்க்கப்பட்ட நாள் 3 September 2016.
  5. 5.0 5.1 "Population Growth Continues to Hinder Nepal's Economic Progress". www.prb.org. Archived from the original on 2018-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-03-28.
  6. 6.0 6.1 6.2 6.3 Massey, Douglas S.; Axinn, William G. (August 2010). "Environmental change and out-migration: evidence from Nepal". Population and Environment 32 (2–3): 109–136. doi:10.1007/s11111-010-0119-8. பப்மெட்:21350676. 
  7. http://unstats.un.org/unsd/demographic/products/dyb/dyb2.htm
  8. "World Population Prospects – Population Division – United Nations". பார்க்கப்பட்ட நாள் 2017-07-15.
  9. "Nepal Demographics Profile 2014". IndexMundi. CIA World Factbook.
  10. "National Population and Housing Census 2011 (National Report)" (PDF). United Nations Statistics Division. United Nations Statistics Division.
  11. "MEASURE DHS: Demographic and Health Surveys". worldbank.org.
  12. "Nepal Demographic and Health Survey 2011" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2011-05-07.
  13. "Official Summary of Census" (PDF). Central Bureau of Statistics, Nepal. 2011. Archived from the original (PDF) on 2 December 2012.
  14. 14.0 14.1 14.2 "South Asia ::NEPAL". CIA The World Factbook.
  15. "2011 Nepal Census Report" (PDF). cbs.gov.np. p. 16. Archived from the original (PDF) on 18 April 2013.
  16. Ostrowski, Ally (2006). "The Framing of Religion". South Asian Popular Culture 4 (1): 3–18. doi:10.1080/14746680600555410. 
  17. https://kathmandupost.com/national/2020/05/17/government-decision-to-introduce-sanskrit-in-school-education-draws-controversy
  18. https://archive.nepalitimes.com/news.php?id=16224
  19. OCHA Nepal – Situation Overview. Issue 12. OCHA. April 2007. http://www.internal-displacement.org/8025708F004CE90B/(httpDocuments)/B66F206172F49BE4C12572D50030C3F0/$file/OCHA+overview+no+12+April+07.pdf. பார்த்த நாள்: 2011-05-07. 
  20. OCHA Nepal – Situation Overview. Issue 16. OCHA. July–August 2007. http://reliefweb.int/sites/reliefweb.int/files/resources/2E89F2121C2C57A24925733F000F4F21-Full_report.pdf. பார்த்த நாள்: 2011-05-07. 
  21. OCHA Nepal – Situation Overview. Issue 30. OCHA. June–July 2008. http://www.internal-displacement.org/8025708F004CE90B/(httpDocuments)/5CC0BE0C971587F2C1257496004A9B9E/$file/ocha+sitrep+12+july08.pdf. பார்த்த நாள்: 2011-05-07. 
  22. Sharma, Hari (2010-11-18). "Body of murder victim found in Gulmi". Gulmi: The Himalayan Times online. Archived from the original on 25 May 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-05-07.
  23. Hatlebakk, Magnus (2007). "Economic and social structures that may explain the recent conflicts in the Terai of Nepal" (PDF). Kathmandu: Norwegian Embassy. Archived from the original (PDF) on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2011-05-08.
  24. Jessica, Sims (2008). Soldiers, Migrants, and Citizens - Nepalese in Britain. Runnymede. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-906732-09-7. 
  25. 25.0 25.1 "Population by Country of birth and nationality Jan10-Dec10". Office for National Statistics. September 2011. பார்க்கப்பட்ட நாள் 17 September 2010.
  26. "'Natural deaths' raise doubts". ekantipur.com. Archived from the original on 2014-04-05. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
  27. "Qatar's population - by nationality". bq Magazine. Archived from the original on 23 ஏப்பிரல் 2015.
  28. 【平成29年度末】在留外国人確定資料, 在留外国人確定資料 (PDF), Tokyo: Ministry of Justice, April 2018, archived from the original (PDF) on 2018-03-27, பார்க்கப்பட்ட நாள் 2018-04-13
  29. "Nepal government lifts Iraq working ban". BBC News.
  30. Gorkha regiments (India)
  31. 11th Gorkha Rifles
  32. Subedi, Bhim Prasad (2007). "The Issue of Foreign Born Population in Nepal: A Short Essay in Honor of Dr. Harka Gurung". The Himalayan Review 38: 23–34. http://www.nepjol.info/index.php/HR/article/view/2015. 

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_மக்கள்தொகையியல்&oldid=3561200" இலிருந்து மீள்விக்கப்பட்டது