நேபாளத்தில் பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தர் பிறந்த இடம், நேபாளத்தில்
சுயம்புநாதர் கோயில் ஸ்தூபி மற்றும் பிரார்த்தனை கொடிகள்.

நேபாளத்தில் பௌத்தம் அசோகரின் ஆட்சிக் காலம் முதல் இந்திய மற்றும் திபெத்திய சமயத் தூதுவர்களால் பரவத் தொடங்கியது.

புத்தர் பிறப்பு[தொகு]

இளவரசர் சித்தார்த்தராக, இயற்பெயருடன் பிறந்த புத்தர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதை அறுதியிட்டுக் கூற இயலவில்லை. எனினும் பொதுவாக அவர் கி. மு. 563ஆம் ஆண்டு பிறந்தார் எனக் கருதப்படுகிறது.[1] புத்தர் பிறந்த, சாக்கிய இராச்சியத்தில் உள்ள லும்பினியானது நேபாளத்தின் லும்பினி பகுதியின் தற்போதைய ரூபந்தேஹி மாவட்டத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.[2][3]

பௌத்தப் பிரிவுகள்[தொகு]

நேபாளத்தின் முக்கிய பௌத்தப் பிரிவுகள் திபெத்திய பௌத்தம் மற்றும் போன் பௌத்தம் என இருவகைப்படும். இங்கு பின்பற்றப்படும் சமயங்களில் இரண்டாவது பெரிய சமயமாக பௌத்தம் விளங்குகிறது.

பௌத்தத்தைப் பின்பற்றுவோர்[தொகு]

கௌதம புத்தரின் போதனைகளை நேபாளத்தில் பின்பற்றத் தொடங்கிய முதல் மக்கள் கிராதர்கள் ஆவர். அவர்களுக்குப் பிறகு லிச்சாவிகள் மற்றும் நேவார் மக்கள் பின்பற்றத் தொடங்கினர்.[4] 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நேபாளத்தின் மக்கள்தொகையில் 10.74% பேர் பௌத்தத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திபெத்திய-பர்மிய மொழிகளைப் பேசும் இன மக்களான நேவார் ஆவர்.[5] 2001ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தில் இனவாரியாக பௌத்த மக்கள்தொகை விவரம்:

இனக்குழுக்கள் பௌத்தர்களின் விழுக்காடு

2001(%)

மொத்த மக்கள் தொகை

2011

பௌத்தர்களின் விழுக்காடு

2011 (%)

மொத்த பௌத்தர்கள்

2011

தமாங் 90.26% 1,539,830 87.29% 1,344,139
மகர் 24.47% 1,887,733 18.04% 340,608
குருங் 69.03% 522,641 62.72% 327,813
நேவார் 15.35% 1,321,933 10.74% 141,982
செர்ப்பா 92.83% 112,946 98.34% 111,068
போடியா 59.40% 13,397 98.33% 13,173
காலே NEG 22,881 50.05% 11,451
அயோல்மோ 98.45% 10,752 91.32% 9,819
தகளி 65.01% 13,215 68.07% 8995
சந்தியால் 64.2% 11,810 0.00% 0
ஜிரெல் 87% 5,774 0.00% 0
லெப்சா 88.8% 3,445 0.00% 0
இதர பழங்குடியினர் 0.81% 21,028,147 0.41% 87051
மொத்தம் 10.74% 26,494,504 9.04% 2,396,099எனினும், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நேபாளத்தின் மொத்த மக்கள் தொகையில் 9% பேர் மட்டுமே பௌத்தத்தைப் பின்பற்றுகின்றனர்.[6]

பண்பாட்டுத் தாக்கம்[தொகு]

நேபாளப் பண்பாட்டில் பெளத்தத் தாக்கங்கள் பெரிதும் பரவி வருகின்றன. பௌத்த மற்றும் இந்து கோயில்களும் இருவரின் விசுவாசத்திற்காக வணக்க வழிபாட்டு இடங்களை பகிர்ந்து கொள்கின்றனர். நேபாளத்தில் இந்து மதத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு தெளிவாக இல்லை. அம்சுவர்மன் ஆட்சிக் காலத்தில், நேபாள இளவரசி பிருகுதி, திபெத்தில் பெளத்த மதம் பரவுவதற்கு பெரும் பங்காற்றினாள். மகாயான பௌத்தத்தில் உள்ள புனிதமான பௌத்த நூல்கள் முக்கியமாக ரஞ்சனா எழுத்துக்கள், நெவர்ஸின் அல்லது லஞ்சா என்ற எழுத்தில் எழுதப்பட்டன. [7] நேபாளத்தின் குன்று மற்றும் மலைப்பகுதிகளில் இந்து மதமானது புத்த மதக் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்டது. இரு மதங்களும் தெய்வங்களையும், கோயில்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு இது இருந்தது. உதாரணமாக, முக்திநாத் கோயிலானது இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் புனிதமான மற்றும் பொதுவான வழிபாட்டு இடமாகத் திகழ்கிறது.[8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thomas, E. J. (1927). "The Birth of Buddha". The Life of Buddha as Legend and History. New Delhi: Asian Educational Services. pp. 27–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0979-4.
  2. Smith, V. A. (1914). The Early History of India from 600 B.C. to the Muhammadan Conquest Including the Invasion of Alexander the Great (Third ed.). London: Oxford University Press. pp. 168–169.
  3. UNESCO (2012). "Lumbini, the Birthplace of the Lord Buddha". UNESCO: World Heritage Centre.
  4. Dutt, N. (1966). "Buddhism in Nepal". Bulletin of Tibetology 3 (2): 27–45. https://www.repository.cam.ac.uk/bitstream/handle/1810/242969/bot_03_02_02.pdf?sequence=1. 
  5. Dahal, Dilli Ram (2003). "Social Composition of the Population: Caste/Ethnicity and Religion in Nepal". Population Monograph of Nepal 2003 (Central Bureau of Statistics (CBS), Government of Nepal) 1: 104–106. http://cbs.gov.np/new/wp-content/uploads/2012/Population/Monograph/Chapter%2003%20%20Social%20Composition%20of%20the%20Population.pdf. 
  6. "Population Monograph of Nepal 2014 Volume II (Social Demography)" (PDF).
  7. Murthy, K. Krishna (1989). "Advent of Buddhism". Buddhism in Tibet. Delhi, India: Sundeep Prakashan. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85067-16-3. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  8. Shastri, G. C (July 1968). "Hinduism and Buddhism in Nepal". Ancient Nepal: Journal of the Department of Archaeology 4: 48–51. http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/ancientnepal/pdf/ancient_nepal_04_full.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாளத்தில்_பௌத்தம்&oldid=3849885" இலிருந்து மீள்விக்கப்பட்டது