உள்ளடக்கத்துக்குச் செல்

பீமரன் தூபி

ஆள்கூறுகள்: 34°28′N 70°21′E / 34.47°N 70.35°E / 34.47; 70.35
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீமரன் தூபி
சார்லஸ் மேசன் வரைந்த பீமரன் தூபியின் வரைபடம்
பீமரன் தூபி is located in ஆப்கானித்தான்
பீமரன் தூபி
Shown within Afghanistan
ஆயத்தொலைகள்34°28′N 70°21′E / 34.47°N 70.35°E / 34.47; 70.35
வகைதூபி
பீமரன் பேழை

பீமரன் தூபி (Bimaran) ஆப்கானித்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்தின் மேற்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பௌத்த தொல்லியல் களமாகும்.[1] இத்தொல்லியல் களம் பீமரன் பௌத்தத் தூபிகளுக்கும், அதனருகே அகழாய்வில் கண்டுபிடித்த பீமரன் பேழைக்கும் பெயர் பெற்றது.[1]

பீமரன் தூபிகள்

[தொகு]

பல தொகுப்புகளாக இருந்த பீம்ரன் தூபிகளில், நான்கு முக்கியமான தூபிகள் மட்டும் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. [2]

38.40 மீட்டர் சுற்றளவு கொண்ட முதல் தூபி பாழடைந்த நிலையில் உள்ளது. காந்தாரி எழுத்தில் குறிப்புகள் கொண்ட இத்தூபியின் அருகே அகழாய்வு செய்த போது தங்கத்தில் செய்யப்பட்டு, கௌதம புத்தர் உருவம் பொறிக்கப்பட்டு, அதன் மீது நவரத்தினங்களாலும் அலங்கரிப்பட்ட பீமரன் பேழை கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இப்பேழை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

43.90 மீட்டர் சுற்றளவு கொண்ட இரண்டாவது தூபி, பீமரன் கிராமத்தின் நடுவில் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தூபி சதுர வடிவ மேடை மீது கட்டப்பட்டுள்ளது. இத்தூபியில் அழகிய கண்னாடிக் குவளைகள், தங்க நகைகள் மற்றும் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தூபி 33 மீட்டர் சுற்றளவு கொண்டது. இத்தூபியைச் சுற்றிலும் பல மணல் திட்டுக்களும், சிறு தூபிகளையும் கொண்டுள்ளது. இத்தூபியில் வெள்ளி மற்றும் நாணயங்கள் கொண்ட பேழை கண்டுபிடிக்கப்பட்டது.

நான்காவது தூபி 43.9 மீட்டர் சுற்றளவு கொண்ட நான்காவது தூபி அருகே பெருமளவில் கட்டிட இடிபாடுகளின் குவியல்கள் உள்ளது;.

இந்நான்கு தூபிகள் அல்லாது, பீமரன் வடக்கின் மலையடிவாரத்தில் செயற்கையாக உருவாக்கிய ஆறு குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

Source: Warwick Ball, Archaeological Gazetteer of Afghanistan, 1982, n. 127

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமரன்_தூபி&oldid=4058078" இலிருந்து மீள்விக்கப்பட்டது