திரிபிடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திரிபிடகம் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும்.[1]. பிடகம் என்பது கூடை அல்லது திரட்டு எனப்பொருள்படும். அதன்படி மூன்றுவகையான போதனைத் திரட்டுகளை திரிபிடகம் கொண்டுள்ளது. அவை: சுத்தபிடகம், வினையபிடகம், அதிதருமபிடகம் என்பவையாகும்.

மூன்று வகைகள்[தொகு]

சுத்தபிடகம்[தொகு]

இது முதன்மையாக புத்தரின் போதனைகளையும் தத்துவங்களையும் நேரடியாக பாளி அல்லது சமசுகிருதத்தில் கொண்டுள்ளது. ஞான போதனைகள் மூலம் ஒருவரின் உள்ளொளொளியை அல்லது ஆத்ம விமோசனத்தை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டது.

அதிதருமபிடகம்[தொகு]

பௌத்த மெய்யியல் தத்துவங்களைக் கொண்டதாக இது அமைகின்றது.

வினையபிடகம்[தொகு]

தனி மனித வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் பிரமாணங்கள் இதில் விபரிக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Buddhist Books and Texts: Canon and Canonization." Lewis Lancaster, Encyclopedia of Religion, 2nd edition, pg 1252
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபிடகம்&oldid=1946164" இருந்து மீள்விக்கப்பட்டது