உள்ளடக்கத்துக்குச் செல்

அசிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனரிடம், அசிதர் குழந்தை சித்தார்த்தனின் வருங்காலத்தை எடுத்துரைக்கும் காந்தார நாட்டுச் சிற்பம், ஜூரீச் அருங்காட்சியகம், சுவிட்சர்லாந்து

அசிதர் (Asita) கி மு ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த கடும் நேன்பு நோற்கும் துறவியாவார். கபிலவஸ்துவின் இளவரசர் சித்தார்த்தன் வருங்காலத்தில் மிகப்பெரிய பேரரசராகவோ அல்லது புத்தராகவோ விளங்குவார் என முன்பே கணித்துக் கூறியவர். இவரை காலதேவலா என்றும் அழைப்பர். [1]

கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களின் ஒருவரான காத்தியாயனர் இளமையில் உச்சையினி நகரத்தில் அசிதரிடம் வேத பாடங்கள் பயின்றவர்.


மேற்கோள்கள்

[தொகு]
  1. Narada (1 January 2006). The Buddha and His Teachings. Jaico Publishing House. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7992-617-8.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிதர்&oldid=2135157" இலிருந்து மீள்விக்கப்பட்டது