அருகதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அருகதர் (Arhat or Arahant) என்பதற்கு ஆன்மீக ஞான ஒளி (நிர்வாணம்) அடைவதற்கு மிகவும் தகுதியானவர் (one who is worthy)[1] அல்லது மிகச் சரியான மனிதர் என்று தேரவாத பௌத்தப்பிரிவு குறிப்பிடுகிறது.[1][2] புத்தத்தன்மை அடையாத, ஆனால் போதிசத்துவ நிலையை அடைந்த பௌத்த பிக்கு அருகதர் என்று அழைக்கப்படுகிறார்.[2][1] [3]

பௌத்த சமயத்தில் புத்தத்தன்மை அடைதற்கான ஆன்மீக முன்னேற்றத்தின் படிநிலைகளில் உள்ளவர்களுக்கு போதிசத்துவர், அருகதர் போன்ற பட்டப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.[4][5]

கௌதம புத்தரின் நேரடிச் சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோர் அருகதர் நிலையை அடைந்தவர்கள். மகாயான பௌத்தம், அருகதர் நிலையை அடைந்தவர்களில் 18 பேரைக் குறிப்பிடுகிறது. கி மு 150இல் வாழ்ந்த மகாயானத்தின் சரஸ்வதிவாத பௌத்தப்பிரிவின் பிக்குவான நாகசேனரும் அருகதர் நிலையை அடைந்தவர்களில் ஒருவர் ஆவார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


  • 1.0 1.1 1.2 Encyclopedia Britannica, Arhat (Buddhism)
  • 2.0 2.1 Warder 2000, பக். 67.
  • Rhie & Thurman 1991, பக். 102.
  • Arhat
  • Arhat or Arahant
  • "https://ta.wikipedia.org/w/index.php?title=அருகதர்&oldid=2362796" இருந்து மீள்விக்கப்பட்டது