வங்காளதேசத்தில் பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழமையான சோமபுரம் மகாவிகாரை, நவகோன் மாவட்டம், வங்கதேசம்
ஜெகத்தல மகாவிகாரை, நவகோன் மாவட்டம், வங்கதேசம்
தங்க விகாரை, பந்தர்பன் மாவட்டம், வங்கதேசம்

வங்காளதேசத்தில் பௌத்தம் (Buddhism in Bangladesh) உலகின் மூன்றாவது பெரிய சமயமான பௌத்தம், வங்காளதேச மக்கள் தொகையில் 0.63% மட்டுமே பயில்கின்றனர்.[1][2]கௌதம புத்தர் கிழக்கு வங்காளப் பகுதிக்கு தனது போதனைகளைப் பரப்புவதற்காக வந்ததாகவும், உள்ளூர் மக்களை பௌத்தத்திற்கு மாற்றுவதில் அவர் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வங்காளத்தை ஆண்ட் பாலப் பேரரசு காலத்தில் வங்காளம் முழுவதும் பௌத்த மதத்தைப் பரப்பி ஆதரித்தது.[3] வங்காளதேசத்தில் ஏறத்தாழ 1 மில்லியன் மக்கள் தேரவாத பௌத்தம் பயில்கின்றனர்.[4]சிட்டகாங் மலைப்பகுதிகளில் அடர்த்தியாக வாழும் வங்கதேச பௌத்தர்களில்வ் 65% பேர் ரக்கைன் மக்கள், சக்மா மக்கள், மர்மா மக்கள், தன்சன்கியா மக்கள், பரூவா மகக்ள் மற்றும் சும்மா மக்கள் ஆவார். எஞ்சிய 35% பேர் வங்காள பௌத்தர்கள் ஆவார். தற்போது வங்கதேச பௌத்தர்கள் சிட்டகாங் மற்றும் டாக்கா நகரங்களில் அதிகம் வாழ்கின்றனர்.

வரலாறு[தொகு]

வங்காளதேசத்தில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கௌதமபுத்தர் சிலை

சில பௌத்த நூல்களின் குறிப்புகளின்படி, கௌதம புத்தர் வங்காளதேசத்தின் சில பகுதிகளில் தர்மத்தைப் பரப்பியதாகவும், சிலர் பிக்குகளாக மாறி புத்தரின் பாதையில் பயணித்ததாக கூறப்படுகிறது. பேரரசர் அசோகர் காலத்திலும் பௌத்தம் வங்கதேசததில் பரவவில்லை. தற்கால பிகார், மேற்கு வங்காளம், நேபாளம் மற்றும் வங்காளதேசம் பகுதிகளை கிபி எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆண்ட பாலப் பேரரசு காலத்தில் வங்காளதேசத்தில் பௌத்தம் வேகமாக பரவியது. பௌத்த பிக்குகளுக்காக விகாரைகள் பல கட்டப்பட்டது. பாலப் பேரரசில் வாழ்ந்த பௌத்த குரு அதிசர் மகாயான பௌத்தத்தை பரப்பினார்.

கிபி பத்தாம் நூற்றாண்டில் வங்கதேசத்தை ஆண்ட சந்திர வம்சத்தவர்கள் பௌத்த சமயத்தை தழுவி ஆட்சி செய்தனர்.[5] சந்திர வம்சத்தின் கட்க குலத்தினர் பௌத்த சமயத்தை தழுவி, பல பௌத்தக் கோயில்களையும், விகாரைகளையும் கட்டினர்.[6]

1202ஆம் ஆண்டில் இசுலாமியர்களின் வருகைக்குப் பின்னர் வங்கதேச பௌத்தம் பல பிரிவுகளாக பிரிந்து இருந்தது.[7]வங்கதேசத்தில் ஆக்கிரமிப்பு செய்த துருக்கிய இசுலாமியர்கள் பௌத்த விகாரைகள் பலவற்றை இடித்து தரைமட்டம் ஆக்கினர். அவைகளில் குறிப்பிடத்தக்கது பக்தியார் கில்ஜி இடித்த நாளந்தா பல்கலைக்கழகம் ஆகும்.[8]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்கு முன்னரே, தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசுகளால் வங்காளதேசத்தின் சிட்டகாங் பகுதியில் இருந்த பௌத்த விகாரைகள் இடிக்கப்பட்டது. 19அம் நூற்றாண்டில் துவங்கிய மறுமலர்ச்சி இயக்கத்தின்[9]வளர்ச்சியால் வங்கதேசத்தில் தேரவாத பௌத்தம் செழித்தது. சிட்டகாங் மலைவாழ் பழங்குடிகளே வங்கதேச பௌத்த்தின் பெரும்பான்மையான மக்கள் ஆவார். இவர்களது பௌத்த சமயத்தில் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளும் கலந்திருக்கும். 1981ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வங்கதேசத்தில் 5,38,000 பௌத்த சமயத்தினர் உள்ளனர். இது வங்கதேச மக்கள் தொகையில் 1% மட்டுமே.

வங்க தேச பௌத்தர்கள்[தொகு]

வங்கதேச பௌத்த மக்கள் தொகை
ஆண்டும.தொ.±%
1951 2,94,437—    
1961 3,55,634+20.8%
1974 4,28,871+20.6%
1981 5,22,722+21.9%
1991 6,37,893+22.0%
2001 8,62,063+35.1%
2011 8,98,634+4.2%
2022 10,07,467+12.1%
ஆதாரம்: Bangladesh government census authority[10][11]

பத்தாண்டுகளில் வங்கதேசத்தில் பௌத்தம்[10][12]

ஆண்டு விழுக்காடு % கூடுதல்
1951 0.7% -
1961 0.7% -0%
1974 0.6% -0.1%
1981 0.6% -0%
1991 0.6% -0%
2001 0.7% +0.1%
2011 0.6% -0.1%
2022 0.63% +0.03%

2014ஆம் ஆண்டில் வங்கதேச பௌத்தர்கள் மற்றும் அரக்கான் மலைப்பகுதி பூர்வகுடி பௌத்தர்கள் சிட்டகாங் மற்றும் டாக்கா நகரங்களில் மட்டும் காணப்பட்டனர். குறிப்பாக வஙகதேசத்தில் பௌத்தம் தழுவிய மக்களில் 65% பேர் பரூவா மக்களாக இருந்தனர். இது வங்கதேச மக்கள் தொகையில் 0.07% ஆகும். பிற பூர்வகுடி வங்கதேச மக்களில் பௌத்தம் தழுவியர்கள் சக்மா மக்கள், சாக் மக்கள், மர்மா மக்கள், கியாங் மக்கள் ஆவார்.

வங்கதேசத்தில் பௌத்தம் பயில்பவர்கள்[13]
கோட்டம் விழுக்காடு (%) பௌத்த மக்கள் தொகை () மொத்த மக்கள் தொகை
பரிசால் கோட்டம் 0.18% 14,348 8,173,818
சிட்டகாங் கோட்டம் 7.08% 1,719,759 24,290,384
டாக்கா கோட்டம் 0.39% 152,274 39,044,716
குல்னா கோட்டம் 0.68% 99,995 14,705,229
ராஜசாகி கோட்டம் 0.36% 58,877 16,354,723
ரங்க்பூர் கோட்டம் 0.34% 47,080 13,847,150
சில்ஹெட் கோட்டம் 0.02% 1,621 8,107,766
மைமன்சிங் கோட்டம் 0.62% 27,999 11,370,102

பௌத்த விகாரைகள்[தொகு]

சோமபுரம் மகாவிகாரை, பாலப் பேரரசு, கிபி எட்டாம் நூற்றாண்டு

பண்பாடு[தொகு]

பாலப் பேரரசு காலத்திய பௌத்த குரு அதிசர்

சிட்டகாங் மலைப்பகுதிகளில் பல பௌத்த குடியிருப்புகள், கல்வி நிலையங்கள் மற்றும் விகாரைகள் இருந்தன. பௌத்தக் கல்வி நிலையங்களில் வங்காள மொழி மற்றும் பாளி மொழிகளில் பௌத்த சமயக் கல்வி போதிக்கப்பட்டது. [7] பௌத்த மடாலயங்களுக்கு வெளியே வாழ்ந்த பௌத்தர்கள், உள்ளூர் பூர்வகுடி மக்களின் நம்பிக்கைகளை உள்வாங்கித் தழுவினர். [7]சிலை வழிபாட்டை மறுத்த பௌத்தக் கொள்கைகளையும் மீறி பெரும்பாலான இடங்களில் கௌதம புத்தரின் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டனர். பிரபலமான பௌத்தத்தில் புத்தரின் தலைமையில் சிறிய தெய்வங்களின் வழிபாட்டையும் மேற்கொண்டனர். வங்கதேச சமய விவகார அமைச்சகம் பழமையான பௌத்தக் கோயில்கள்களையும், நினைவுச் சின்னங்களையும், தொன்மையான இடங்களையும் மற்றும் விகாரைகளையும் பராமரிப்பதற்கு நிதியுதவி வழங்குகிறது.[7]

பௌத்தப் படுகொலைகள்[தொகு]

இசுலாமிய தீவிரவாதிகளால் குறிவைத்து படுகொலை செய்யப்பட்ட சிறுபான்மை இந்து மற்றும் பௌத்தப் படுகொலைகள் பட்டியல்:

 • 1962 இராஜசாகி படுகொலைகள்
 • 1964 கிழக்கு-பாகிஸ்தான் கலவரங்கள்
 • 1971 வங்கதேச இனப்படுகொலை
 • 2012 ராமு வன்முறை
 • வங்கதேச பூர்வகுடி பௌத்தர்கள் மீதான வன்முறைகள்

புகழ்பெற்ற வங்கதேச பௌத்தர்கள்[தொகு]

தீபாங்கர சிறீஜன், சிட்டகாங் பௌத்த சமூகத் தலைவர்
பௌத்த பிக்குகள்
 • அதிசர் - பௌத்தத்தை திபெத்தில் பரவக் காரணம் ஆனவர்.
 • கவிஞர் சந்திரகோமின் - 7ஆம் நூற்றாண்டு
நிர்வாகம்
கலை மற்றும் இலக்கியம்
 • பெனிமாதாப் பரூவா
 • கனக் சன்பா சக்மா[14]
 • பிபிரதேஷ் பரூவா, எழுத்தாளர்
 • பார்த்தா பரூவா, இசைக் கலைஞர்
 • சேது பரூவா
 • சுப்ரதா பரூவா
 • ரததன் தாலுக்தார், நடிகர்
கல்வி
 • விக்கிரம் பிரசாத் பரூவா
 • சுக்கோமல் பரூவா
 • அமித் சக்மா
 • ஆயி தேயின் ரக்கைன்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Census 2022: Bangladesh population now 165 million". 27 July 2022 இம் மூலத்தில் இருந்து 27 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220727073234/https://www.dhakatribune.com/bangladesh/2022/07/27/bangladeshs-population-size-now-1651-million. 
 2. "Bangladesh : AT A GLANCE" இம் மூலத்தில் இருந்து 6 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110706132048/http://www.banbeis.gov.bd/bd_pro.htm. 
 3. "Bangladesh Buddhists Live in the Shadows of Rohingya Fear - IDN-InDepthNews | Analysis That Matters" இம் மூலத்தில் இருந்து 2020-11-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201117105548/https://www.indepthnews.net/index.php/the-world/asia-pacific/3041-bangladesh-buddhists-live-in-the-shadows-of-rohingya-fear. 
 4. "Census 2022: Bangladesh population now 165 million". 27 July 2022 இம் மூலத்தில் இருந்து 27 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220727073234/https://www.dhakatribune.com/bangladesh/2022/07/27/bangladeshs-population-size-now-1651-million. 
 5. P. 22 European Trade and Colonial Conquest: Volume 1
 6. P. 261 Early Advaita Vedanta and Buddhism: The Mahayana Context of the Gau?apadiya By Richard King
 7. 7.0 7.1 7.2 7.3 வார்ப்புரு:Country study
 8. "Caryagiti" இம் மூலத்தில் இருந்து 9 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150309075852/http://vajrayana.faithweb.com/rich_text_3.html. 
 9. "Jewel in the Crown: Bengal's Buddhist Revival in the 19th and 20th Centuries | Buddhistdoor" இம் மூலத்தில் இருந்து 2016-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160610114646/http://www.buddhistdoor.net/features/jewel-in-the-crown-bengals-buddhist-revival-in-the-19th-and-20th-centuries. 
 10. 10.0 10.1 "Bangladesh- Population census 1991: Religious Composition 1901-1991". 2 August 2016 இம் மூலத்தில் இருந்து 18 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160818162638/http://hrcbmdfw.org/files/22/population_data/entry489.aspx. 
 11. "Census 2022: Bangladesh population now 165 million". 27 July 2022 இம் மூலத்தில் இருந்து 27 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220727073234/https://www.dhakatribune.com/bangladesh/2022/07/27/bangladeshs-population-size-now-1651-million. 
 12. "Census 2022: Bangladesh population now 165 million". 27 July 2022 இம் மூலத்தில் இருந்து 27 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220727073234/https://www.dhakatribune.com/bangladesh/2022/07/27/bangladeshs-population-size-now-1651-million. 
 13. "Mymensingh District - Banglapedia" இம் மூலத்தில் இருந்து 2021-05-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210502143011/http://en.banglapedia.org/index.php/Mymensingh_District. 
 14. Jahangir, Apurba (6 March 2016). "A Free Spirit". The Daily Star இம் மூலத்தில் இருந்து 29 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150929152933/http://www.thedailystar.net/the-star/spotlight/free-spirit-5077.