சாரநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரநாத்
இசிபதனம்

सारनाथ
சாமாத, மிரிகதாவ,
மிகதாய, ரிசிபட்டணம், இசிபத்தான
நகரம்
தாமேக் தூபி, சாரநாத்
தாமேக் தூபி, சாரநாத்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மொழிகள்
 • அதிகாரபூர்வம்இந்தி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
சாரநாத் குன்றில் அமைந்த சௌகந்தி தூபி

சாரநாத் அல்லது இசிபதனம் (Sarnath) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 10 கிமீ வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்.[1][2]

இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள சிங்பூர் என்ற இடத்திலேயே சைன மதத்தின் 11வது தீர்த்தங்கரர் என அழைக்கப்படும் சிரேயன்சுவநாதர் பிறந்த இடமாகும். இங்குள்ள அவரது கோவில் ஓர் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

சாரநாத் (மான்களின் நகரம்) என்ற இந்நகரம் சாமாத, மிரிகதாவ (மான் பூங்கா), மிகதாய, இசிபதனம் (ரிசிகள் தரையிறங்கிய இடம்) எனப் பல பெயர்களில் வழங்கி வருகின்றது. புத்தரால் குறிப்பிடப்பட்டுள்ள இசிபதனம் என்ற தலம் பௌத்தர்கள் தரிசிக்க வேண்டிய நான்கு பௌத்த தலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.[3]

குப்தர்கள் காலத்தில் சாரநாத் குன்றில் எண்கோண வடிவ சௌகந்தி தூபி நிறுவப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

இரட்டை சிங்கப் போதிகைகள், சாரநாத்

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "SARNATH". Archived from the original on 2018-07-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.
  2. Saranath - History
  3. (D.ii.141)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரநாத்&oldid=3553534" இலிருந்து மீள்விக்கப்பட்டது