லும்பினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
லும்பினி, புத்தரின் பிறப்பிடம்
Name as inscribed on the World Heritage List
Lumbini 4.jpg
வகை பண்பாடு
ஒப்பளவு iii, vi
உசாத்துணை 666
UNESCO region ஆசியா-பசிபிக்
Inscription history
பொறிப்பு 1997 (21ஆவது தொடர்)
Lumbini
लुम्बिनी
City era
Lumbini
Lumbini
ஆள்கூறுகள்: 27°29′02″N 83°16′34″E / 27.484°N 83.276°E / 27.484; 83.276ஆள்கூற்று: 27°29′02″N 83°16′34″E / 27.484°N 83.276°E / 27.484; 83.276
Country நேபாளம்
Zone Lumbini
District Rupandehi
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 150
Languages
 • Official Nepali
நேர வலயம் NST (ஒசநே+05:45)
Postal Code 32914
தொலைக் குறியீடு(கள்) 71
மாயாதேவி கோயில், லும்பினி, நேபாளம்

லும்பினி, நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத யாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, பிற்காலத்தில் ஞானம் பெற்றுக் கௌதம புத்தர் ஆன, சித்தார்த்த கௌதமரைப் பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். புத்த மதத்தினரைப் பெருமளவில் கவரும் நான்கு புனித யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. ஏனைய மூன்றும் குசிநகர், புத்த காயா, வைசாலி, சாரநாத் என்பனவாகும். லும்பினி இமய மலை அடிவாரத்தில் உள்ளது. இது கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லும்பினியில், மாயாதேவி கோயில் உட்படப் பல கோயில்களும் புஷ்கர்னி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இவ்வேரியிலேயே புத்தரைப் பெற்றெடுக்குமுன் மாயாதேவி மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது. புத்தரின் முதற் குளியலும்கூட இந்த ஏரியிலேயே இடம்பெற்றது. இங்கே கபிலவஸ்து அரண்மனை இடிபாடுகளையும் காணமுடியும்.

லும்பினியை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[1]

பார்க்க வேண்டிய பிற இடங்கள்[தொகு]

பிற பௌத்த தலங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lumbini, the Birthplace of the Lord Buddha

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லும்பினி&oldid=2144563" இருந்து மீள்விக்கப்பட்டது