ஜேத்தவனராமயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆள்கூறுகள்: 8°21′06″N 80°24′13″E / 8.35167°N 80.40361°E / 8.35167; 80.40361

ஜேத்தவனராமயா
Jetavanaramaya
ජේතවනාරාමය
SL Anuradhapura asv2020-01 img24 Jetavanaramaya Stupa.jpg
ஜேத்தவனராமயா தூபி
Map
முந்திய பெயர்கள்தேனநகா, தேனவிகாரம்
பொதுவான தகவல்கள்
வகைதூபி
இடம்அனுராதபுரம், ஸ்ரீலங்கா
உயரம்122 m (400 ft)
பரிமாணங்கள்
பிற பரிமாணங்கள்233,000 m2 (2,508,000 sq ft)
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு5.6 ஹெக்டர்கள்

ஜேத்தவனராமயா (Jetavanaramaya), இலங்கையின் அனுராதபுரம் நகரத்தின் சிதலமடைந்த ஜேத்தவனத்தின் மகாவிகாரையில் அமைந்த பௌத்த தூபி ஆகும். இது பன்னாட்டு பௌத்த யாத்திரை தலங்களில் ஒன்றாகும்.

சிதிலமடைந்த மகாவிகாரையில், அனுராதபுரத்தின் மன்னர் மகாசேனன் (273–301) கட்டத் துவங்கியத் இத்தூபியை, அவரது மகன் முதலாம் மகாசேனர் கட்டி முடித்தார்.[1].

இப்பௌத்த கட்டிட அமைப்பு, இலங்கையின் தேரவாதம் மற்றும் மகாயானப் பௌத்தப் பிரிவினர்களிடையே இருந்த பிணக்குகளை வெளிப்படுத்துகிறது. இத்தூபி பண்டைய வரலாற்று உலகின் உயரமான கட்டிட அமைப்புகளில் ஒன்றாக விளங்கியது.[2] பிரமிடு அல்லாத கட்டிடங்களில் எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்க மண்டபத்திற்கு அடுத்து, இத்தூபி 400 அடி (122 மீட்டர்) உயரம் கொண்டது. இதன் அடிப்பரப்பு 2,33,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.[3] இத்தூபி 93.3 மில்லியன் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.

இதன் வளாகம் 5.6 எக்டேர் பரப்பளவு கொண்டது. இவ்வளாகத்தில் 10,000 பிக்குகள் தங்கி பௌத்தக் கல்வியைப் பயில்கின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "Jetavanaramaya". 2008-01-26 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  2. Silva, R. 1990, "Bricks – A unit of construction in ancient Sri Lanka", ICTAD Journal, Vol.2, No. 1, pp. 21-42, Colombo.
  3. Ranaweera, Munidasa P (December 2004). "Ancient Stupas in Sri Lanka – Largest Brick Structures in the World". CHS Newsletter (Construction History Society) (70). 

மேற்கோள்கள்[தொகு]

  • This page incorporates content from Dr. Rohan Hettiarachchi's lankalibrary.com used with permission of website owner.
  • Ratnayake, Hema (1993) Jetavana. In The Cultural Triangle of Sri Lanka. Paris: Unesco Publishing/CCF.
  • Schroeder, Ulrich von. (1990). Buddhist Sculptures of Sri Lanka. (752 p.; 1620 illustrations). Hong Kong: Visual Dharma Publications, Ltd. ISBN 962-7049-05-0

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேத்தவனராமயா&oldid=3214201" இருந்து மீள்விக்கப்பட்டது