உலக பாரம்பரியக் குழு
உலக பாரம்பரியக் குழு (World Heritage Committee) என்பது உலகின் பல பாகங்களிலும் காணப்படும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களங்கள் எவை எனத் தீர்மானிப்பதற்கும், அவற்றைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கும், உலக பாரம்பரிய மரபொழுங்குகளைச் செயல்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கும் ஒரு குழுவாகும். 21 நாட்டு உறுப்பினர்களைக்[1] கொண்ட இக்குழு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறது.[2]
உலக பாரம்பரிய மரபொழுங்கின்படி குழுவின் உறுப்பினர் ஒருவர் ஆறு வருடங்களுக்கு தமது பணியில் இருக்கலாம். ஆயினும், பல நாடுகளும் தமது நாட்டின் குழு உறுப்பினரை நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் தாமாகவே விலக்கிக் கொன்டு, ஏனைய நாடுகளுக்கு உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கி வருகின்றன.[2]. 2005 ஆம் ஆண்டு, 15 ஆவது பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட, இக்குழுவிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் தமது ஆறு ஆண்டு பணிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைத்துக் கொள்ள முடிவு செய்தனர்[2].
பொறுப்புகள்
[தொகு]இக்குழுவின் பொறுப்புகள்
- பாரம்பரிய களங்கள் தொடர்பான மரபொழுங்குகள் கடைபிடிக்கப்படுவதைக் கவனித்துக் கொள்ளுதல்
- மரபொழுங்குகள் தொடர்பான நடைமுறைகளை செயல்படுத்துதல்
- உலக பாரம்பரிய நிதியத்தின் பயன்பாட்டை வரையறுத்தல்
- ஒரு நாடானது தனது எல்லைக்குட்பட்ட பாரம்பரியக் களத்தைப் பாதுகாக்க நிதி உதவி கோரும்பொழுது, அதனை உலக பாரம்பரிய நிதியத்திலிருந்து வழங்குதல்
அமர்வுகள்
[தொகு]உலகப் பாரம்பரியக் குழு, ஏற்கனவே உள்ள பாரம்பரியக் களங்களின் மேலாண்மை குறித்தும் நாடுகளிலிருந்து பெறப்பட்ட புதியக் களங்களுக்கான பரிந்துரைகளை ஏற்பது குறித்தும் கலந்துரையாட ஆண்டுக்கொருமுறை கூடுகிறது.[2]
அமர்வு[3] | ஆண்டு | நாள் | நடந்த நகரம் | நாட்டுக் குழு |
---|---|---|---|---|
1 | 1977 | 27 சூன்–1 சூலை | பாரிசு | பிரான்சு |
2 | 1978 | 5 செப்டம்பர்–8 செப்டம்பர் | வாஷிங்டன், டி.சி. | ஐக்கிய அமெரிக்கா |
3 | 1979 | 22 அக்டோபர்–26 அக்டோபர் | கெய்ரோ & லுக்சார் | எகிப்து |
4 | 1980 | 1 செப்டம்பர்–5 செப்டம்பர் | பாரிசு | பிரான்சு |
5 | 1981 | 26 அக்டோபர்–30 அக்டோபர் | சிட்னி | ஆத்திரேலியா |
6 | 1982 | 13 திசம்பர்–17 திசம்பர் | பாரிசு | பிரான்சு |
7 | 1983 | 5 திசம்பர்–9 திசம்பர் | பிளாரென்சு | இத்தாலி |
8 | 1984 | 29 அக்டோபர்–2 நவம்பர் | புவெனஸ் ஐரிஸ் | அர்கெந்தீனா |
9 | 1985 | 2 திசம்பர்–6 திசம்பர் | பாரிசு | பிரான்சு |
10 | 1986 | 24 நவம்பர்–28 நவம்பர் | பாரிசு | பிரான்சு |
11 | 1987 | 7 திசம்பர்–11 திசம்பர் | பாரிசு | பிரான்சு |
12 | 1988 | 5 திசம்பர்–9 திசம்பர் | பிரசிலியா | பிரேசில் |
13 | 1989 | 11 திசம்பர்–15 திசம்பர் | பாரிசு | பிரான்சு |
14 | 1990 | 7 திசம்பர்–12 திசம்பர் | பான்ஃப் | கனடா |
15 | 1991 | 9 திசம்பர்–13 திசம்பர் | கார்த்தேஜ் | தூனிசியா |
16 | 1992 | 7 திசம்பர்–14 திசம்பர் | சான்டா ஃபே | ஐக்கிய அமெரிக்கா |
17 | 1993 | 6 திசம்பர்–11 திசம்பர் | கார்டஜெனா | கொலம்பியா |
18 | 1994 | 12 திசம்பர்–17 திசம்பர் | பூகெத் | தாய்லாந்து |
19 | 1995 | 4 திசம்பர்–9 திசம்பர் | பெர்லின் | செருமனி |
20 | 1996 | 2 திசம்பர்–7 திசம்பர் | மெரிடா | மெக்சிக்கோ |
21 | 1997 | 1 திசம்பர்–6 திசம்பர் | நேப்பிள்சு | இத்தாலி |
22 | 1998 | 30 நவம்பர்–5 திசம்பர் | குயோட்டோ | சப்பான் |
23 | 1999 | 29 நவம்பர்–4 திசம்பர் | மார்ரெகெச் | மொரோக்கோ |
24 | 2000 | 27 நவம்பர்–2 திசம்பர் | கெய்ர்ன்ஸ் | ஆத்திரேலியா |
25 | 2001 | 11 திசம்பர்–16 திசம்பர் | ஹெல்சிங்கி | பின்லாந்து |
26 | 2002 | 24 சூன்–29 சூன் | புடாபெஸ்ட் | அங்கேரி |
27 | 2003 | 30 சூன்–5 சூலை | பாரிசு | பிரான்சு |
28 | 2004 | 28 சூன்–7 சூலை | சுசூ | சீனா |
29 | 2005 | 10 சூலை–17 சூலை | டர்பன் | தென்னாப்பிரிக்கா |
30 | 2006 | 8 சூலை–16 சூலை | வில்னியசு | லித்துவேனியா |
31 | 2007 | 23 சூன்–1 சூலை | கிறைஸ்ட்சர்ச் | நியூசிலாந்து |
32 | 2008 | 2 சூலை-10 சூலை | குயுபெக் நகரம் | கனடா |
33 | 2009 | 22 சூன்-30 சூன் | செவைல் | எசுப்பானியா |
34 | 2010 | 25 சூலை-3 ஆகத்து | பிரசிலியா | பிரேசில் |
35 | 2011 | 19 சூன்-29 சூன் | பாரிசு | பிரான்சு |
36 | 2012 | 25 சூன்-5 சூலை | சென் பீட்டர்ஸ்பேர்க் | உருசியா |
37 | 2013 | 17 சூன்-27 சூன் | புனோம் பென் | கம்போடியா |
38 | 2014 | 15 சூன்-25 சூன் | தோகா | கத்தார் |
39 | 2015 | 28 சூன்-08 சூலை | பான் | செருமனி |
40 | 2016 | சூலை | இசுதான்புல் | துருக்கி |
உறுப்பினர்கள்
[தொகு]2016ல் துருக்கியில் நடைபெற உள்ள 40ம் ஆண்டுக் கூட்டத்தில் பங்குபெறும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் குழு உறுப்பினர்கள்.
உறுப்பினர்[4] | சார்பாளர் | குறிப்புகள் |
---|---|---|
அல்ஜீரியா | ||
கொலம்பியா | ||
குரோவாசியா | ||
பின்லாந்து | ||
செருமனி | ||
இந்தியா | ||
ஜமேக்கா | ||
சப்பான் | ||
கசக்கஸ்தான் | ||
லெபனான் | துணைத் தலைவர் | |
மலேசியா | ||
பெரு | துணைத் தலைவர் | |
பிலிப்பீன்சு | துணைத் தலைவர் | |
போலந்து | துணைத் தலைவர் | |
போர்த்துகல் | ||
கத்தார் | ||
தென் கொரியா | யூஜின் ஜோ | ஒருங்கிணைப்பாளர் |
செனிகல் | துணைத் தலைவர் | |
செர்பியா | ||
துருக்கி | குர்கன் துர்கோக்லு | அவைத்தலைவர் |
வியட்நாம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ யுனெசுக்கோ உலக பாரம்பரிய வலைத்தளத்தின்படி இந்நாடுகள் உலக பாரம்பரிய மரபொழுங்கை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டன. 15 ஆகத்து 2014ன் படி, மொத்தம் 191 உறுப்பினர் நாடுகள் உள்ளன.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "The World Heritage Committee". UNESCO World Heritage Site. பார்க்கப்பட்ட நாள் 2006-10-14.
- ↑ "Sessions". UNESCO World Heritage Site.
- ↑ http://whc.unesco.org/en/sessions/40COM
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் — (ஆங்கிலம்) மற்றும் (பிரெஞ்சு)
- உலக பாரம்பரியக் களங்கள் பட்டியல் — தேடக்கூடிய வகையில் அனைத்து களங்களையும் கொண்டிருப்பது