சிட்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிட்னி
Sydney

நியூ சவுத் வேல்ஸ்
Sydney opera house and skyline.jpg
ஜாக்சன் துறையில் சிட்னி ஒப்பேரா மாளிகை மற்றும் சிட்னி வர்த்தக மையம்
மக்கள் தொகை: 4,284,379  (1வது)
அடர்த்தி: 2058/கிமீ² (5,330.2/சதுர மைல்) (2006)[1]
அமைப்பு: 26 ஜனவரி 1788
ஆள்கூறுகள்: 33°51′35.9″S 151°12′40″E / 33.859972°S 151.21111°E / -33.859972; 151.21111ஆள்கூற்று: 33°51′35.9″S 151°12′40″E / 33.859972°S 151.21111°E / -33.859972; 151.21111
பரப்பளவு: 12144.6 கிமீ² (4,689.1 சது மைல்)
நேர வலயம்:

 • கோடை (பசேநே)

ஆகீநே (UTC+10)

ஆகீபநே (UTC+11)

அமைவு:
உள்ளூராட்சிகள்: பல (38)
கவுண்டி: கம்பர்லாந்து
மாநில மாவட்டம்: பல (49)
நடுவண் தொகுதி: பல (22)
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
21.6 °செ
71 °
13.7 °செ
57 °
1,214.8 அங்
ஆஸ்திரேலியாவில் சிட்னியின் அமைவு

சிட்னி (Sydney) அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் இது அமைந்துள்ளது. 1788இல் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப் என்பவர் சிட்னி நகரத்தை அமைத்தார்.

வரலாறு[தொகு]

குறைந்தது 30,000 ஆண்டுகளுக்கு முன்னரிருந்து ஆஸ்திரேலியப் பழங்குடிகள் சிட்னி பகுதியில் வாழ்ந்து வருவதாக வரலாற்றாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்[2]. 1788 இல் முதலாவது கப்பல் இங்கு வந்துறங்கிய போது 4000 முதல் 8000 வரையான பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். பிரித்தானியர்கள் இவர்களை ஈயோரா என அழைத்தனர். இங்கு முக்கியமாக மூன்று மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர். அவை தாருக், தரவால் மற்றும் குரிங்காய் என்பனவாகும். இவர்கள் தனித்தனியே தமக்கென தனியான பிரதேசங்களைக் கொண்டிருந்தனர்.

1770இல் பிரித்தானிய கடற்படைத் தளபதி ஜேம்ஸ் குக் பொட்டனி விரிகுடாவில் வந்திறங்கினான். இங்குதான் அவன் குவேகல் என்ற பழங்குடியினருடன் முதன்முதலாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான்[3]. பிரித்தானிய அரசின் ஆணைக்கமைய ஆர்தர் பிலிப் இங்கு பிரித்தானியக் குற்றவாளிகளைக் குடியேற்றினார். இவர்கள் 11 கப்பல்களில் 1788, ஜனவரி 20 இல் பொட்டனி விரிகுடாவில் வந்திறங்கினர். இவர்கள் வந்திறங்கிய இடம் தரக்குறைவான மண்ணையும், குறைந்தளவு குடிநீரையும் கொண்டிருந்ததால் குடியேறுவதற்குத் தகுதியானதாக இருக்கவில்லை. இதனால் பிலிப் மேலும் மேற்கே சென்று ஜாக்சன் துறையின் சிட்னி கோவ் என்ற இடத்தில் ஜனவரி 26 இல் குடியேற்றத் திட்டத்தை ஆரம்பித்தார்.

புவியியல்[தொகு]

சிட்னியின் நகரப்பிரதேசம், கிழக்கே பசிபிக் பெருங்கடல், மேற்கே நீல மலைகள், வடக்கே ஹோக்ஸ்பரி ஆறு மற்றும் தெற்கே ரோயல் தேசிய பூங்கா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. சிட்னி பெருநகரப் பிரதேசத்தில் புகழ்பெற்ற பொண்டாய் கடற்கரை உட்பட சுமார் 70 துறைமுகங்கள் அல்லது கடற்கரைப்பிர்தேசங்கள் உள்ளன.

சிட்னி 2000[தொகு]

2000-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ், நகரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நகரின் போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு எல்லாமே கிட்டத்தட்ட புதிதாய் அமைக்கப்பட்டன. ஏராளமான புதிய உணவு விடுதிகள், குடியிருப்பு மனைகள், நகரின் அழகையும் இயல்பையும் கெடுத்து விட்டது என்பது உள்ளூர்வாசிகளின் புகார். ஆம், நான்கு கோடி மக்கள் வாழும், பிரபலமான வர்த்தக நகராக இருந்தாலும், கவர்ச்சிகரமான, எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஒரு சிறு நகர இயல்பு இங்கு உண்டு.

சிட்னியின் சிறப்பு இடங்கள்[தொகு]

ஜாக்சன் துறை எனும் சிட்னி துறைமுகம் தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம். இதன் குறுக்கே உள்ள சிட்னி துறைமுகப் பாலம் பிரசித்தமானது. இந்தப் பாலமும் அருகில் இருக்கும் சிட்னி ஓப்பரா மாளிகை ஆகியன உலகம் முழுவது அறிந்துள்ள சிட்னியின் அடையாளங்கள். இந்த இயற்கைத் துறைமுகம் உண்மையில் ஒரு கடலில் மூழ்கிய பள்ளத்தாக்கு. ஆகவே சுற்றிலும் பல வளைவுகள், நெளிவுகள் துறைமுகக் கடற்கரையை சுவாரசியமாக ஆக்குகிறது. இது போதாதென்று பாரமட்டா நதி இங்கு கடலில் கலக்கிறது. கோடை காலத்தில் (டிசம்பர் - ஜனவரி) சிட்னியின் கடற்கரை நிரம்பி வழியும்.

நகரின் மையத்தில் உள்ள 'மத்திய வர்த்தக மாவட்டம்' (CBD) வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட நகரின் வர்த்தக நாடி. நகரின் சம்பிரதாய பூங்காவான ஹைட் பார்க்கின் நடுவில் செல்லும் பார்க் தெருவின் வழியாக மற்றொரு முனையில் நகர மண்டபம் மற்றும் ஷாப்பிங் மையங்களை அடையலாம். ஹைட் பார்க்கைச் சுற்றிலும் ஆஸ்திரேலிய அரும்பொருட் காட்சியகம், போர் நினைவுச் சின்னங்கள் ஆகியவை உள்ளது.

ஒப்பரா மாளிகை அருகிலேயே பழமையான 'தி ராக்ஸ்' என்னுமிடத்தில் ஆதிவாசிகள் பாறைகள், குகைகளில் செதுக்கிய சிற்பங்களை இன்றும் காணலாம்.

நகரிலிருந்து சிறிது நேரப் படகு சவாரியில் நகரின் வெளியே உள்ள, இன்னும் கூட அதிகம் பாதிப்படையாத புதர்ப் பகுதிகளை அடையலாம். ஆஸ்திரேலிய விலங்குகளும், பறவைகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

இரவில் சிட்னி துறைமுகம். இடது பக்கத்தில் ஒப்பேரா மாளிகையும் வர்த்தக மையம் நடுவிலும், துறைமுகப் பாலம் வலது பக்கத்திலும் காணப்படுகின்றன

கல்வி[தொகு]

சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் பழமையான பல்கலைக்கழகம்

சிட்னியில் ஆஸ்திரேலியாவின் சில முதன்மைக் கல்வி மையங்கள் அமைந்துளன. 1850இல் நிறுவப்பட்ட சிட்னி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான பல்கலைக்கழகமாக கருதப்படுகின்றது. சிட்னியில் அமைந்துள்ள மற்ற அரசு பல்கலைக்கழகங்கள் - சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், மக்குவாரி பல்கலைக்கழகம், மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம். சிட்னியில் சிறிய வளாகங்கள் வைத்திருக்கும் மற்ற பல்கலைக்கழகங்கள் நொற்ரே டேம் பல்கலைக்கழகம், வல்லன்கொங் பல்கலைக்கழகம் மற்றும் கேர்ட்டின் பல்கலைக்கழகம் ஆகும்.

சிட்னியில் அரசாங்க, கிறிஸ்துவ மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Explore Your City Through the 2006 Census Social Atlas Series
  2. Settlers' history rewritten: go back 30,000 years
  3. http://www.smh.com.au/articles/2002/11/10/1036308574533.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி&oldid=2220959" இருந்து மீள்விக்கப்பட்டது