ஆத்திரேலியத் தலைநகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆத்திரேலியாவில் எட்டுத் தலைநகரங்கள் உள்ளன. இவை அனைத்துமே துணை தேசிய அளவிலானவை. ஆத்திரேலியக் கூட்டமைப்பின் தலைநகரமாக 1901 முதல் 1927 வரை மெல்பேர்ண் விளங்கியது. 1927இல் புதியதாக கான்பரா நகரம் உருவாக்கப்பட்ட பின்னர் அதுவே தேசியத் தலைநகரமாக உள்ளது.

ஒவ்வொரு தலைநகரத்திலும் தனது ஆள்புலத்திற்குண்டான நகர, உள்ளாட்சி சட்டவாக்க, நீதி மற்றும் நிர்வாக முறைமை செயலாக்கப்படுகின்றன. மாநில மற்றும் ஆள்புலத் தலைநகரங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மிகுந்த மக்கள்தொகை மிக்க நகரமாகவும் திகழ்கின்றன. ஆத்திரேலியாவின் கடல்கடந்த ஆள்புலமான நோர்போக் தீவிற்கு அலுவல்முறை தலைநகரமாக கிங்சுடன் உள்ளது; இருப்பினும் இது அரசு நிர்வாகத்தின் மையமாக மட்டுமே உள்ளது. நடைமுறைப்படியான தலைநகரமாக பர்ன்ட் பைன் உள்ளது.[1]

ஆத்திரேலியாவின் மாநில, ஆள்புல தலைநகரங்கள்
ஆட்சிப்பகுதி தலைநகரம் நகர மக்கள்தொகை மாநில/ஆள்புல மக்கள்தொகை[2] மாநிலத் தகுதி பெற்ற நாள் தலைநகரமாக எப்போதிலிருந்து படிமம்
ஆஸ்திரேலியா மற்றும்
ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்
கான்பரா* 381,488 1911 1913
ஐன்சுலீ மலையிலிருந்து நகர மையத்தின் காட்சி - டெல்சுட்ரா கோபுரம் பின்னணியில் காணலாம்
நியூ சவுத் வேல்ஸ் சிட்னி 4,757,083 7,410,399 1788 1788
சிட்னி மைய வணிக மாவட்டத்தின் தொடுவானக் காட்சி
விக்டோரியா மெல்பேர்ண் 4,347,955 5,739,341 1851 1851
குயின்ஸ்லாந்து பிரிஸ்பேன் 2,238,394 4,656,803 1859 1860
பிரிஸ்பேனின் மைய வணிக மாவட்டம் - முன்னணியில் இசுடோரி பாலத்தைக் காணலாம்
மேற்கு ஆஸ்திரேலியா பேர்த் 1,972,358 2,519,321 1829 1829
வானிலிருந்து பேர்த்தின் மைய வணிக மாவட்டம்
தெற்கு ஆஸ்திரேலியா அடிலெய்டு 1,291,666 1,670,827 1842 1856
எல்டர் பூங்காவிலிருந்து டோரென்சு ஆற்றுக்கரை
தாசுமேனியா ஹோபார்ட் 217,973 513,159 1825 1826
ஹோபார்ட்டின் நகரப்பகுதியும் வெல்லிங்டன் மலையும்
வட ஆள்புலம் டார்வின் 136,245 240,759 மாநிலத் தகுதி எட்டவில்லை** 1911
டார்வின் நகர மையப்பகுதி

* கான்பரா ஆத்திரேலியாவின் தலைநகரமாக உள்ளபோதும் ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலத்தின் அலுவல்முறையான தலைநகராக கருதப்படவில்லை; ஆள்புலத்தினுள் உள்ளதோர் முதன்மை குடியிருப்பாகவும் ஆள்புலமாகவும் கருதப்படுகின்றது. ** 1911இல், தெற்கு ஆத்திரேலியா வட ஆள்புலத்தை ஆளும் பொறுப்பை ஆத்திரேலியப் பொதுநலவாய அரசிற்கு மாற்றியது. 1978இல் இதற்கு தன்னாட்சி நிலை வழங்கப்பட்டாலும் பொதுநலவாய விதிகளின்படி இது ஓர் ஆள்புலமாக, மாநிலமாக அல்ல, மட்டுமே கருதப்படுகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]