பொண்டாய் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொண்டாய் கடற்கரை (Bondi Beach) அவுஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பொண்டாய் என்னும் இடத்திலுள்ள புகழ்பெற்ற கடற்கரை ஆகும். இது சிட்னியின் கிழக்குப் பிரதேசத்தில் நகரின் மத்தியில் இருந்து அண்ணளவாக ஏழு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. வருடம் முழுவதும் பெருந்தொகையான உல்லாசப்பயணிகள் பொண்டாய் கடற்கரைக்கு வருகைதருகிறார்கள். பல பிரித்தானிய மற்றும் அயர்லாந்து சுற்றுலாப்பயணிகள் கிறிஸ்துமஸ் தினத்தினை இங்கே கழிக்கிறார்கள்."https://ta.wikipedia.org/w/index.php?title=பொண்டாய்_கடற்கரை&oldid=2740461" இலிருந்து மீள்விக்கப்பட்டது