ஜேம்ஸ் குக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேம்ஸ் குக்
Captainjamescookportrait.jpg
பிறப்பு 7 நவம்பர் [யூ.நா. 27 அக்டோபர்] 1728
மார்ட்டன், யோர்க்சயர், இங்கிலாந்து, பெரிய பிரித்தானியா
இறப்பு 14 பெப்ரவரி 1779(1779-02-14) (அகவை 50)
ஹவாய்
தேசியம் ஐக்கிய இராச்சியத்தின் கொடி பிரித்தானியா
பணி நாடுகாண் பயணி
பட்டம் கப்டன்
பெற்றோர் ஜேம்ஸ் குக், கிரேஸ் பேஸ்
வாழ்க்கைத் துணை எலிசபெத் பாட்ஸ்
பிள்ளைகள் ஜேம்ஸ், நத்தானியல், எலிசபெத், ஜோசப், ஜோர்ஜ், ஹியூ
கையொப்பம்

ஜேம்ஸ் குக் (James Cook, 7 நவம்பர் 1728 - 14 பெப்ரவரி 1779) இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி, பிரிட்டிஷ் ஆய்வாளர், மாலுமி, வரைபடங்கள் உருவாக்குனர் மற்றும் பிரிட்டிஷ் அரச கடற்படையின் (Royal navy) அணித்தலைவரும் (Captain) ஆவார். நியூபவுண்ட்லாந்துத் தீவினை முதன்முதலில் உலகப்படத்தில் குறித்ததுடன் பசுபிக் சமுத்திரத்தில் தனது கப்பல் எச்.எம்.பார்க் என்டேவரில் மூன்று பயணங்களை மேற்கொண்டவர். பசுபிக் பெருங்கடலில் பல இடங்களையும்,தீவுகளையும் கண்டறிந்தவர். ஆஸ்திரேலியா, ஹவாய் போன்ற தீவுகளை முதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஆவார்.

பிறப்பு[தொகு]

ஜேம்ஸ் குக் 1728-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் யார்க்செயரில் பிறந்தார். இவர் பதினாறு குழந்தைகள் கொண்ட ஒரு ஸ்காட்லாந்து விவசாயின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அய்டான் நகரில் தனது பள்ளிக்கல்வியை பயின்ற குக், தனது பதினேழு வயதில் ஒரு கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பதினெட்டு வயதில் படகு ஓட்டுனராக மாறினார். விட்பை (Whitby) துறைமுகத்தில் ஜான் வாக்கர் என்னும் நிலக்கரியினை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்பவரிடம் பயிற்சி பெறுபவராக சேர்ந்தார்[1]. வாக்கரிடமிருந்து அடிப்படை கணித அறிவையும், திசையமைப்பு குறித்தனவற்றையும் குக் கற்றுத் தேர்ந்தார். தனது சொந்த முயற்சியில் அறிவியலையும் கற்றுத் தேர்ந்தார்.

===திருமணம்=== ஜேம்ஸ் குக் திசம்பர் 21, 1762 அன்று எலிசபத் பாட்ஸ் என்பவரை மணம் புரிந்துக்கொண்டார். இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள், ஜேம்ஸ் (1763–94), நாத்னெய்ல் (1764–80), எலிசபத் (1767–71), ஜோசப் (1768–68), ஜியாஜ் (1772–72) மற்றும் ஹக் (1776–93) ஆகியோராவர். கடைசி மகன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இறந்து விட்டார். இவரின் குழந்தைகள் பற்றிய விடயங்கள் வெளியுலகு அறியாதவையாகும்.

பயணங்களும் கண்டுபிடிப்புகளும்[தொகு]

தனது முதற்பயணத்தின்போது 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்டார். இவரே அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்ட முதல் ஐரோப்பியராவார். அப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானதென உரிமை கோரினார். அவர் தன் வாழ்நாளில் இரு முறை உலகத்தை வலம் வந்துள்ளார். அன்டார்டிகா பகுதிகளிலும் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார் குக். வட அமெரிக்காவிலும் பல தீவுகளை இவர் கண்டுபிடித்துள்ளார். தனது கடல் பயணங்களின்போது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், தான் பார்த்த இடங்களின் வரைபடங்களை வரையவும் நேரங்களைச் செலவு செய்துள்ளார். இவர் கண்டுபிடித்த இடங்களைப் பற்றியும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.

கண்டுபிடிப்புகளின் நோக்கம்[தொகு]

மிகப்பெரிய நீண்ட பயணங்களைக் குக் சில காரணங்களுக்காகவே ஓய்வு இல்லாமல் செய்தார்.

  • தெற்கு கண்டத்தில் உள்ள பகுதிகளைக் கண்டுபிடிப்பது,
  • வீனஸ் கிரகத்திற்கு வானியல் அளவீடுகள் செய்வது,
  • புதிய நிலங்களைக் கண்டறிவது,
  • பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ் மூன்றாமவருக்கு நிலங்களைக் கையகப்படுத்துவது,
  • புதிய இராணுவத் தளங்கள் அமைக்க நல்ல இடங்கள் கண்டுபிடிப்பது,
  • பசிபிக் மற்றும் அட்லாண்டிக் இடையில் புதிய வழித்தடங்களைக் கண்டுபிடிப்பது ஆகியனவே அவரின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.

முதல் பயணம்[தொகு]

1766 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்யக் குக்கை அழைத்தது. இப்பயணத்தின் நோக்கம் வீனஸ் கிரகத்திற்கு உண்டான தூரத்தினை அளவிடவும், புதிய ஆராய்ச்சிகள் செய்யவுமாக இருந்தது. 39 வயதில், லெப்டினன்ட் பதவிக்கு குக் உயர்த்தப்பட்டார். கடல் பயணத்தின்போது தளபதியாகவும் ஆக்கப்பட்டார் குக். இப்பயணம் இங்கிலாந்திலிருந்து ஆகத்து 26,1768 அன்று தொடங்கப்பட்டது. மேற்கு மார்க்கமாகச் சென்று பசுபிக் பெருங்கடல் வழியே டெஹீட்டி தீவை அடைந்தார். அங்கு வீனஸ் பற்றிய சில ஆராய்ச்சிகளைக் குக் மேற்கொண்டார். பின் பூமியை ஒரு முறை வலம் வந்த இவரது பயணம் 1771, ஜீலை 12 அன்று செயின்ட் ஹெலனாவில் வந்து முடிந்தது[2].

இரண்டாம் பயணம்[தொகு]

குக்கின் பயணப்பாதை. முதல் பயணம் சிவப்பு நிறமிடப்பட்டுள்ளது, இரண்டாம் பயணம் பச்சை நிறமிடப்பட்டுள்ளது, மூன்றாம் பயணம் நீல நிறமிடப்பட்டுள்ளது. குக் இறந்த பின் அவரின் படைவீரர்கள் சென்ற பகுதி விடுபட்ட நீலநிறமாக்கிய கோடுகள்.

1771 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் பயணம் முடித்து வந்த உடனேயே ஜேம்ஸ் குக்கிற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது [3][4].பின் 1772 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவினை கண்டுபிடிப்பதற்காக அணுப்பி வைக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவினைக் கண்டுபிடித்து 1775 ஆம் ஆண்டு தாயகத்தை அடைந்தார் குக்.

மூன்றாம் பயணமும், இறப்பும்[தொகு]

ஜேம்ஸ் குக்கின் இறப்பைப் பற்றிய யொகான் சொபானியால் வரையப்பட்ட முழுமைப்படுத்தப்படாத ஓவியம்

1776 ஆம் ஆண்டு குக் தனது மூன்றாவது பயணத்தினைத் தொடர்ந்தார். அந்தப் பயணத்தின்போது ஹவாய்த் தீவுவாசிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டார். ஜேம்ஸ்குக் இறந்ததால் அவரின் வீரர்கள் குக்கின் சடலத்துடன் பயணத்தின் பாதியில் நாடு திரும்பினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Cook, James (1728-1779) Biographical Entry" (in English). Australian Dictionary of Biography On Line Edition. Australian National University. 1966. Retrieved 2010-05-28.
  2. "Secret Instructions to Captain Cook, 30 June 1768". National Archives of Australia. பார்த்த நாள் 3 September 2011.
  3. Hough 1994, ப. 180
  4. McLynn 2011, ப. 167

== வெளியிணைப்புகள் == * * * * * Captain Cook Society

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_குக்&oldid=2303063" இருந்து மீள்விக்கப்பட்டது