3 (எண்)
| ||||
|---|---|---|---|---|
| முதலெண் | மூன்று | |||
| வரிசை | 3ஆவது மூன்றாவது | |||
| காரணியாக்கல் | பகா எண் | |||
| காரணிகள் | 1, 3 | |||
| ரோமன் | III | |||
| ரோமன் (ஒருங்குறியில்) | Ⅲ, ⅲ | |||
| கிரேக்க முன்குறி | tri- | |||
| இலத்தீன் முன்குறி | tre-/ter- | |||
| இரும எண் | 112 | |||
| முன்ம எண் | 103 | |||
| நான்ம எண் | 34 | |||
| ஐம்ம எண் | 35 | |||
| அறும எண் | 36 | |||
| எண்ணெண் | 38 | |||
| பன்னிருமம் | 312 | |||
| பதினறுமம் | 316 | |||
| இருபதின்மம் | 320 | |||
| 36ம்ம எண் | 336 | |||
| அரபு | ٣,3 | |||
| வங்காளம் | ৩ | |||
| சீனம் | 三,弎,叁 | |||
| தேவநாகரி | ३ | |||
| செஸ் | ፫ | |||
| கிரேக்கம் | γ (or Γ) | |||
| எபிரேயம் | ג | |||
| சப்பானியம் | 三 | |||
| கெமர் | ៣ | |||
| கொரியம் | 셋,삼 | |||
| மலையாளம் | ൩ | |||
| தமிழ் | ௩ | |||
| தெலுங்கு | ౩ | |||
| தாய் | ๓ | |||
3 அல்லது மூன்று (three) என்பது 2 இற்குப் பிந்தையதும், 4 இற்கு முந்தையதுமான இயல் எண்ணாகும். இது மிகச் சிறிய ஒற்றைப்படை பகா எண்ணும், சதுர எண்ணுக்கு முந்தைய ஒரே பகா எண்ணும் ஆகும். 3 என்பது தமிழ் எண்களில் ௩ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] இது பல சமூகங்களில் சமய மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

காரணிகள்
[தொகு]மூன்றின் நேர்க் காரணிகள் 1, 3 என்பனவாகும்.[2]
இயல்புகள்
[தொகு]- மூன்று ஓர் ஒற்றை எண்ணாகும்.
- மூன்றானது இரண்டாவது முக்கோண எண்ணாகும்.
- மூன்றை மூன்று வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- மூன்றானது நான்காவது பிபனாச்சி எண் ஆகும்.
- மூன்றானது இரண்டாவது லூகாஸ் எண்ணாகும்.
- மூன்று ஒரு சோஃவி ஜெர்மேன் முதன்மை எண் ஆகும். ஏனெனில், என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சமபக்க முக்கோணியை உருவாக்கலாம்.[3]
மூன்றின் பெருமை
[தொகு]
வேதம் மூன்று - இருக்கு,யசூர்,சாமம்
மூன்று மூர்த்திகள் - பிரம்மா, விஷ்ணு, சிவன்
தொழில்கள் மூன்று - படைத்தல்,காத்தல்,அழித்தல்
உலகம் மூன்று - பூதலம்,மீதலம்,பாதலம்
கடவுளின் நிலை மூன்று - அருவம்,உருவம்,அருவுருவம்
காலம் மூன்று - இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்
ஆசைகள் மூன்று - மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை
குணங்கள் மூன்று - சத்துவம்,ராயசம்,தாமதம்
தமிழ் மூன்று - இயல், இசை, நாடகம்
கனிகள் மூன்று - மா, பலா, வாழை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ உதயை மு. வீரையன் (20 September 2012). "உலக எண்கள் தமிழ் எண்களே!". தினமணி. https://www.dinamani.com/editorial-articles/2010/Aug/02/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-220400.html.
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வோல்ஃப்ராம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)