உள்ளடக்கத்துக்குச் செல்

சோஃவி ஜெர்மேன் பகாத்தனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்கோட்பாட்டில் p என்பது ஒரு பகாத்தனி (பகா எண்) என்றால், அதன் இருமடங்கு கூட்டல் ஒன்று (2p + 1) என்னும் எண்ணும் பகாத்தனியாக இருந்தால் அந்த p என்னும் பகா எண் சோஃவி ஜெர்மேன் பகாத்தனி (Sophie Germain prime) என்று அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக 29 என்னும் எண் ஒரு சோஃவி ஜெர்மேன் பகாத்தனி; ஏன் என்றால், 29 என்னும் எண் ஒரு பகாத்தனியாக இருப்பது மட்டுமல்லாமல் 2 × 29 + 1 = 59 என்று கணக்கிடும் பொழுது 59 என்னும் எண்ணும் ஒரு பகா எண்ணாக இருக்கின்றது. ஆகவே 29 என்பது ஒரு சோஃவி ஜெர்மேன் பகாத்தனி. இவ்வகை பகாத்தனிகளுக்கு இப்பெயர் பிரான்சிய பெண்பால் கணிதவியலாளர் மாரி-சோஃவி ஜெர்மேன் (Marie-Sophie Germain) (17761831)என்பவரின் பெயரை ஒட்டி சூட்டப்பட்டது.

ஒரு பகா எண்னை 2p+1 என்று எழுத முடிந்தால், அந்த p என்பதும் பகா எண்ணாக இருந்தால், 2p+1 என்று எழுதத்தக்க எண்ணைப் பாதுகாப்பான பகாத்தனி (safe prime) என்பர். இதில் p என்பது சோஃவி ஜெர்மேன் பகாத்தனி என்பதால் பாதுகாப்பான பகாத்தனியும் சோஃவி ஜெர்மேன் பகாத்தனியும் நெருங்கிய தொடர்புடையவை. 2p+1 என்று எழுதத்தக்க எல்லா எண்களும் பகாத்தனிகள் அல்ல. எ.கா: 2 ×4 + 1 = 9 என்பது ஒரு பகு எண் (3 ×3 = 9)

ஒரு சோஃவி ஜெர்மேன் பகாத்தனி p > 3 என்பது 6k−1 என்னும் வடிவில் உள்ள எண், மாற்று வழியில் கூறுவதென்றால் p ≡ 5 (mod 6) - இது 2p+1 என்று எழுதப்பெறும் பாதுகாப்பான பகாத்தனியுடன் ஒத்துள்ளது. இன்னும் வேறு ஒரு வடிவில், பகாத்தனி p > 3 என்றால் 6k+1 என்பதும் p ≡ 1 (mod 6), 3|(2p+1) - இப்படியாக சோஃவி ஜெர்மேன் பகாத்தனி புலத்தில் சேராத p விலக்கிவிடுகின்றது. இதனை மாடுலோ கணிதத்துறை வழி நிறுவலாம்.

இந்த சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள் எண்ணிக்கையில் முடிவிலியாக இருக்க வேண்டும் என்பது ஒரு நிறுவப்படாத ஊகம். முதல் சில சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

2, 3, 5, 11, 23, 29, 41, 53, 83, 89, 113, 131, 173, 179, 191, 233, … (OEIS-இல் வரிசை A005384)

.

அறிந்தவற்றுள் மிகப்பெரிய சோஃவி ஜெர்மேன் பகாத்தனி: 48047305725 × 2172403−1. இதில் 51910 பதின்ம (தசம) இலக்கங்கள் உள்ளன.. இதனை டேவிட் அண்டர்பக்கெ (David Underbakke) ஜனவரி 25, 2007 இல், டுவின்ஜென் (TwinGen ) மற்றும் எல் எல் ஆர் (LLR) என்னும் நிரலிகளைக் கொண்டு நிறுவினார் [1] இதற்கு முன் இருந்த பெரிய எண் பதிவு 137211941292195 × 2171960−1; இது 51780 பதின்ம இலக்கங்களைக் கொண்டிருந்தது. இதனை யராய் என்பவரும் மற்றவர்களும் மே 3, 2006இல் கண்டுபிடித்தனர் [2].


தோராயக் கணக்கீடு[தொகு]

n என்னும் எண்ணைவிட சிறியனவாக உள்ள எண்களில் எத்தனை எண்கள் சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகளாக இருக்கும் என்று ஒரு தோராயக் கணக்கீட்டை ஜி. எச். ஹார்டி மற்றும் ஜே. இ. லிட்டில்வுட் (G. H. Hardy and J. E. Littlewood) ஆகியோர் அளித்தனர். அவ் மதிப்ப்பீடு, 2C2 n / (ln n)2 என்பதாகும் இதில் C2 என்பது இரட்டைப் பகாத்தனி நிலைஎண், சற்றேறக்குறைய 0.660161. n = 104 என்றால், இந்த தோராய மதிப்பீடு 156 சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள் இருப்பதாகக் கூறுகின்றது, ஆனால் உண்மையில் மொத்தம் 190 சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள் உள்ளன. எனவே இதன் பிழையளவு 20%. n = 107 என்று எடுத்துக்கொண்டால். இந்த தோராய மதிப்பீடு 50822 சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள் இருக்க வேண்டும் என்று கூறுகின்றது, ஆனால் உண்மையில் 56032 எண்கள் உள்ளன. எனவே பிழை 10%.

1 முதல் 10,000 வரையிலும் உள்ள இயல் எண்களில் உள்ள 190 சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள்[தொகு]

2 3 5 11 23 29 41 53 83 89 113 131
173 179 191 233 239 251 281 293 359 419 431 443
491 509 593 641 653 659 683 719 743 761 809 911
953 1013 1019 1031 1049 1103 1223 1229 1289 1409 1439 1451
1481 1499 1511 1559 1583 1601 1733 1811 1889 1901 1931 1973
2003 2039 2063 2069 2129 2141 2273 2339 2351 2393 2399 2459
2543 2549 2693 2699 2741 2753 2819 2903 2939 2963 2969 3023
3299 3329 3359 3389 3413 3449 3491 3539 3593 3623 3761 3779
3803 3821 3851 3863 3911 4019 4073 4211 4271 4349 4373 4391
4409 4481 4733 4793 4871 4919 4943 5003 5039 5051 5081 5171
5231 5279 5303 5333 5399 5441 5501 5639 5711 5741 5849 5903
6053 6101 6113 6131 6173 6263 6269 6323 6329 6449 6491 6521
6551 6563 6581 6761 6899 6983 7043 7079 7103 7121 7151 7193
7211 7349 7433 7541 7643 7649 7691 7823 7841 7883 7901 8069
8093 8111 8243 8273 8513 8663 8693 8741 8951 8969 9029 9059
9221 9293 9371 9419 9473 9479 9539 9629 9689 9791

பயன்பாடுகள்[தொகு]

சோஃவி ஹெர்மேன் பகாத்தனிகள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வரும் எண் வரிசைத்தொடர்கள் வகைகளில் சிலவற்றை உருவாக்கப் பயன்படுகின்றது. போலி அல்லது அரைகுரை சீருறா எண்தொடர் ஆக்கிகளில் இது பயன்படுகின்றது. q என்னும் ஓர் பாதுகாப்பான பகாத்தனி, p என்னும் ஒரு சோஃவி ஜெர்மேன் பகாத்தனியால் உருவாகி இருந்து, p என்பது 3, 9, அல்லது 11 (mod 20) ஆகியவற்றுடன் முற்றீடு மீதகமாக இருந்தால், 1/q என்னும் பதின்ம வகுத்தல் q−1 இலக்கங்களை அரைகுறையான சீருறா வரிசையில் தரும். இதற்கு ஏற்ற பகாத்தனிகள் (q): 7, 23, 47, 59, 167, 179, .. முதலியன ஆகும். (தொடர்புடைய p = 3, 11, 23, 29, 83, 89, etc.). இதன் விளைவு q−1 இலக்கங்கள் நீளமுடைய (முன் நிற்கும் சுழிகள் உட்பட) வரிசையாகும். எடுத்துக்காட்டாக q = 23 என்பது கீழ்க்காணும் அரைகுறையான சீருறா எண் வரிசையைத் தருகின்றது: 0, 4, 3, 4, 7, 8, 2, 6, 0, 8, 6, 9, 5, 6, 5, 2, 1, 7, 3, 9, 1, 3. இந்த எண்கள் மறைமுகமாகவோ, கமுக்கமாகவோ, செய்திகளை அனுப்பத் தேவையான அளவு போதிய மறைவரைவுத் தன்மை அல்லது ஒளிவுத்தமை (cryptographic properties) கொண்டதல்ல.

மேற்கோள்கள்[தொகு]

  • Maximally Periodic Reciprocals, R.A.J. Matthews (1992). Bulletin of the Institute of Mathematics and its Applications; vol 28 pp 147-148.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோஃவி_ஜெர்மேன்_பகாத்தனி&oldid=1667835" இலிருந்து மீள்விக்கப்பட்டது