100 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
99 100 101
முதலெண்நூறு
வரிசை100ஆவது
நூறாவது
காரணியாக்கல்22· 52
காரணிகள்1, 2, 4, 5, 10, 20, 25, 50, 100
ரோமன்C
ஒருங்குறியீடு(கள்)C, ⅽ
இரும எண்11001002
முன்ம எண்102013
நான்ம எண்12104
ஐம்ம எண்4005
அறும எண்2446
எண்ணெண்1448
பன்னிருமம்8412
பதினறுமம்6416
இருபதின்மம்5020
36ம்ம எண்2S36
கிரேக்கம்ρ
அரபு١٠٠
வங்காளம்১০০
சீனம்佰,百
கொரியன்
தேவநாகரி१००
எபிரேயம்ק (Kuf)
கெமர்១០០
தமிழ்௱, க00
தாய்ร้อย, ๑๐๐

100 (நூறு) (ஆங்கிலம்: One Hundred) என்பது தமிழ் எண்களில் ௱ அல்லது ௧௦௦ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] நூறு என்பது தொன்னூற்று ஒன்பதுக்கும் நூற்று ஒன்றுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.

கணிதவியல்[தொகு]

காரணிகள்[தொகு]

 • நூறின் நேர்க் காரணிகள் 1, 2, 5, 10, 20, 25, 50, 100 என்பனவாகும்.

சிறப்புகள்[தொகு]

 • விழுக்காடு கணிப்பதற்கு நூறு எண்ணே அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது
 • முதல் ஒன்பது பகா எண்களின் கூட்டுத்தொகை நூறு ஆகும்
 • நான்கு இணை (சோடி) பகா எண்களின் கூட்டுத்கொகை (47 + 53, 17 + 83, 3 + 97, 41 + 59)
 • முதல் நான்கு எண்களின் மூன்றடுக்கு கூட்டுத்தொகை நூறு (100 = 13 + 23 + 33 + 43)
 • அதுமட்டுமின்றி, 26 + 62 = 100, அதனால் 100 என்பது ஒரு லேலண்டு எண் ஆகும்.
 • நூறு 18- கோண எண்ணாகும்
 • நூறு ஒரு ஹசார்டு எண் ஆகும்
 • மிகச்சரியாக 100 பகா எண்களின் இலக்கங்கள் ஏறு வரிசையில் அமைந்த்துள்ளது (எ. கா. 239, 2357 மற்றும் பல)

அறிவியல்[தொகு]

அரசியல்[தொகு]

பணம்[தொகு]

 • பெரும்பாலான நாடுகளில் 100-என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு நாணயம் மற்றும் பண மதிப்பீடு செய்யப்படுகிறது.

எ.கா. 100 பைசா = 1 ரூபாய்

பொழுதுபோக்கு[தொகு]

 • ஒரு திரைப்படம் அல்லது மேடை நாடகம் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக நடந்தால், அத்திரைப்படம் அல்லது மேடை நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

விளையாட்டு[தொகு]

 • பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் 100 என்ற எண் முக்கிய பங்கு வகிக்கின்றது.
 • 100 மீற்றர் ஓட்டப் பந்தயம் என்பதில் துவங்கி பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் 100 அல்லது அதனுடைய அடுக்கை அடிப்படையாகக் கொண்டு போட்டியாளர்களின் இலக்கின் தூரம் நிர்ணயிக்கப்படுகின்றன.
 • துடுப்பாட்டத்தில் ஒருவர் 100 - ஓட்டம் எடுக்கும் பொழுது மைதானத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று அவரைப் பாராட்டுகின்றனர்.

பிற துறைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
100 (எண்)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=100_(எண்)&oldid=3291548" இருந்து மீள்விக்கப்பட்டது