மீயுரை பரிமாற்ற நெறிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீயுரை பரிமாற்ற நெறிமுறை என்பது இணையத்தில் எவ்வாறு உலாவிகள், வலைத்தள வழங்கிகள், மற்றும் இதர வலை ஒருங்கியங்கள் தமக்கிடையேயான தகவல் பரிமாற்றத்தை வரையறை செய்யும் நெறிமுறை ஆகும். இதன் மூலமே உலகளாவிய வலை செயற்படுகிறது. ஆங்கிலத்தில் இது Hypertext Transfer Protocol (HTTP) எச்.டி.டி.பி என அறியப்படுகிறது.

நமது வங்கிக் கணக்கு, மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பயண முன்பதிவு போன்றவைகளை நாம் இணையதளங்கள் மூலம் செய்யும் போது நம்முடைய வங்கிக் கணக்கு எண், கடவுச் சொல் போன்றவைகளை யாரும் திருடி விடாமலும் இவைகளை எந்த இடத்திலும் சேமிக்காமலும் இருக்க https (hyper text transfer protocol secure)மீயுரை பரிமாற்ற நெறிமுறை பாதுகாப்பு உதவுகிறது.