தமிழ் எண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் எண்கள், இந்திய-அரேபிய எண்கள் இரண்டையும் பயன்படுத்தும் ஒரு மைல்கல் (தஞ்சாவூர் அருங்காட்சியகம்)


ஒன்று என எழுதப்பட்ட எல்லைக்கல், இடம்: சேலம் அருங்காட்சியகம்

தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும். இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப்போல் தமிழில் சுழியம் கிடையாது. தமிழ் எண்கள் தற்போது பெருவழக்கில் இல்லை, தமிழில் எண்களை எழுத இந்திய-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

எண் வடிவங்கள்[தொகு]

1 2 3 4 5 6 7 8 9 10 100 1000

தமிழ் எண்களில் பழங்காலத்தில் சுழியம் (பூஜ்யம்) இல்லாமல் போயினும், தற்காலத்தில் சுழியம் தமிழில் எண்களை எழுதும் போது பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1825ஆம் ஆண்டு வெளி வந்த கணித தீபிகை என்னும் நூல் கணித செயல்பாடுகளை எளிமையாக்கும் பொருட்டு தமிழில் சுழியம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறுகிறது.[1]. ஒருங்குறியின் 4.1 பதிப்பில் இருந்து தமிழ் எண் சுழியம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தும் முறை[தொகு]

தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் (Positional System) எழுதப் பயன்படுத்தப்படவில்லை. 10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் இருப்பதைக்கொண்டு இதை அறியலாம். தமிழ் எண்கள் எழுத்தால் எழுதப்படும் எண்களைச் சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே (Abbreviational System) பயன்படுத்தப்பட்டது. சுழியம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட ஆரம்பித்தது.[2]

உதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டது.

அதாவது,

இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று

௨-௲-௪-௱-௫-௰-௩

தற்கால புதிய முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகிறது .

துள்ளுந்தில் தமிழ் எண்

எண்கள்[தொகு]

 • ௧ = 1
 • ௨ = 2
 • ௩ = 3
 • ௪ = 4
 • ௫ = 5
 • ௬ = 6
 • ௭ = 7
 • ௮ = 8
 • ௯ = 9
 • ௰ = 10
 • ௰௧ = 11
 • ௰௨ = 12
 • ௰௩ = 13
 • ௰௪ = 14
 • ௰௫ = 15
 • ௰௬ = 16
 • ௰௭ = 17
 • ௰௮ = 18
 • ௰௯ = 19
 • ௨௰ = 20
 • ௨௰௧ = 21
 • ௨௰௨ = 22
 • ௨௰௩ = 23
 • ௨௰௪ = 24
 • ௨௰௫ = 25
 • ௨௰௬ = 26
 • ௨௰௭ = 27
 • ௨௰௮ = 28
 • ௨௰௯ = 29
 • ௩௰ = 30
 • ௩௰௧ = 31
 • ௩௰௨ = 32
 • ௩௰௩ = 33
 • ௩௰௪ = 34
 • ௩௰௫ = 35
 • ௩௰௬ = 36
 • ௩௰௭ = 37
 • ௩௰௮ = 38
 • ௩௰௯ = 39
 • ௪௰ = 40
 • ௪௰௧ = 41
 • ௪௰௨ = 42
 • ௪௰௩ = 43
 • ௪௰௪ = 44
 • ௪௰௫ = 45
 • ௪௰௬ = 46
 • ௪௰௭ = 47
 • ௪௰௮ = 48
 • ௪௰௯ = 49
 • ௫௰ = 50
 • ௫௰௧ = 51
 • ௫௰௨ = 52
 • ௫௰௩ = 53
 • ௫௰௪ = 54
 • ௫௰௫ = 55
 • ௫௰௬ = 56
 • ௫௰௭ = 57
 • ௫௰௮ = 58
 • ௫௰௯ = 59
 • ௬௰ = 60

பின்ன வடிவங்கள்[தொகு]

பின்ன வடிவங்களை குறிக்கவும் தமிழ் குறியீடுகள் இருந்தன. அவை தற்போது வழக்கில் இல்லை.

தமிழ்எண் எழுத்து அச்சுப்பதிவு[தொகு]

தமிழின் தாக்கம்[தொகு]

திராவிட மொழிகளில் மிகப் பழைய செவ்வியல் மொழியாகிய தமிழ் மொழியில் உள்ள எண்குறிகள் மற்ற திராவிட மொழிக்குடும்ப எண்குறிகளின்பால் தாக்கம் விளைவித்து அவற்றின் வடிவத்தை வடிவமைத்துள்ளது. கீழுள்ள அட்டவணை முதன்மையான தென்னிந்திய/திராவிட மொழிகளை ஒப்பிடுகிறது.

எண் தமிழ் கன்னடம் மலையாளம் துளு தெலுங்கு கோலமி கூர்க் பிராகுயி தொல்-திராவிடம்
1 ஒன்று ஒண்டு ஒண்ணு ஒஞ்சி ஒகட்டி ஒக்கோடு ஒண்ட அசித் *ஒரு(1)
2 இரண்டு எரடு ரண்டு ராடு ரெண்டு இராட் இண்டின் இராட் *இரு(2)
3 மூன்று மூரு மூன்னு மூ(ஞ்)சி மூடு மூண்டின் மூண்ட்(உ) முசித் *முச் (மூ)
4 நாலு, நான்கு நால்கு நாலு நால் nālugu நாலின் நாலுகு சார் (II) *நான் (நால்)
5 ஐந்து ஐது அஞ்சு அய்ண் (ஐந்) அயிது அய்த் 3 பஞ்செ (II) பான்யே (பானே) (II) *சய்ந்
6 ஆறு ஆறு ஆறு ஆஜிi ஆறு ஆர் 3 சொய்யே (II) ஸஸ் (II) *சாறு
7 ஏழு ஏளு ஏளுகு (ஏடு) யேல் ஏடு ஏட்(உ) 3 சத்தே (II) ஹாஃப்த் (II) *ஏளு (ஏழ்)
8 எட்டு எண்டு எட்டு எட்ம எனிமிதி எனுமதி 3 அத்தே (II) ஹஸ்த் (II) *எட்டு
9 ஒன்பது ஒம்பது ஒன்பது ஒர்ம்ப தொம்மிதி தொம்தி 3 நைம்யே (II) நோஹ் (II) *தொல்
10 பத்து ஹத்து பத்து பத்த் பதி பதி 3 தசே (II) தஹ் (II) *பத்(து)

மேலும் தமிழ், பல்லவ எழுத்து ஊடாகவும் அதில் இருந்துப் பின்னர் கவி எழுத்து ஊடாகவும் கேமர் எழுத்து ஊடாகவும் பிற தென்கிழக்கு ஆசிய எழுத்துகளூடாகவும் பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய வரைவன்களை/எண்குறிகளை வடிவமைத்துள்ளது.

தமிழ் இலக்கம் - எண் எழுத்துக்கள்[தொகு]

தமிழ் இலக்கம் - எண் எழுத்துக்கள்[3]

தமிழ் இலக்கம் பெயர் எண் அளவு
௨ந முந்திரி 1/320
அரைக்காணி 1/160
அரைக்காணி முந்திரி 3/320
காணி 1/80
கால் வீசம் 1/64
அரைமா 1/40
அரை வீசம் 1/32
முக்காணி 3/80
முக்கால் வீசம் 3/64
ஒருமா-தமிழ்க் குறியீடு.png ஒருமா 1/20
மாகாணி (வீசம்) 1/16
இருமா 1/10
அரைக்கால் 1/8
மூன்றுமா 3/20
மூன்று வீசம் 3/16
நாலுமா 1/5
கால்-தமிழ்க் குறியீடு.png கால் 1/4
அரை 1/2
முக்கால்-தமிழ்க் குறியீடு.png முக்கால் 3/4
ஒன்று 1
இரண்டு 2
மூன்று 3
நான்கு 4
ஐந்து 5
ஆறு 6
ஏழு 7
எட்டு 8
ஒன்பது 9
பத்து 10
௨௰ இருபது 20
௩௰ முப்பது 30
௪௰ நாற்பது 40
௫௰ ஐம்பது 50
௬௰ அறுபது 60
௭௰ எழுபது 70
௮௰ எண்பது 80
௯௰ தொண்ணூறு 90
நூறு 100
ஆயிரம் 1000
௰௲ பதினாயிரம் 10,000
௱௲ நூறாயிரம் (இலக்கம்) 100,000
௰௱௲ பத்து நூறாயிரம் (பத்திலக்கம்) 10, 00, 000
௱௱௲ நூறு நூறாயிரம் (கோடி) 1, 00, 00, 000

பழைய தமிழ் எண்கள்[தொகு]

தமிழ் எண்களுக்குப் பயன்படுத்திய குறியீடு.

Old Tamil numerical characters

எண் பழமை வாய்ந்த தமிழ்க்குறியீடு
1
Old tamil numberone.jpg
2
Old tamil number2.jpg
3
Old tamil number3.jpg
4
Old tamil number4.jpg
5
Old tamil number5.jpg
6
Old tamil number6.jpg
7
Old tamil number7.jpg
8
Old tamil number8.jpg
9
Old tamil number9.jpg

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

Add caption here
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_எண்கள்&oldid=2413554" இருந்து மீள்விக்கப்பட்டது