சிட்னி துறைமுகப் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிட்னி துறைமுகப் பாலம்
Sydney Harbour Bridge
சிட்னி துறைமுகப் பாலம்Sydney Harbour Bridge
அதிகாரபூர்வ பெயர் சிட்னி துறைமுகப் பாலம்
வாகன வகை/வழிகள் தொடருந்து, தானுந்து, பாதசாரிகள், ஈருருளிகள்
கடப்பது ஜாக்சன் துறைமுகம்
வடிவமைப்பு வளைவுப் பாலம்
அதிகூடிய தாவகலம் 503 மீ (1,650 அடி)
மொத்த நீளம் 1149 மீ (3,770 அடி)
அகலம் 49 மீ (161 அடி)
உயரம் 139 மீ (456 அடி}
கீழ்மட்டம் 49 மீட்டர்கள் (161 அடி) நடுப்பாகத்தில்
திறக்கப்பட்ட நாள் மார்ச் 19, 1932
சிட்னி துறைமுகத்தின் தோற்றம்
பாலத்தின் கட்டுமானத்திற்கு 6,000,000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டன.

சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும். இது தொடருந்து, தானுந்து, நடைபாதை மற்றும் ஈருருளி வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD), வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னி பாலமும் இதன் அருகே அமைந்திருக்கும் ஓப்பரா மாளிகையும் சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும். இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது "கோர்ட்டுக் கொழுவி" (Coathanger) என்று அழைக்கப்படுகின்றது.[1].

1967 ஆம் ஆண்டு வரை இதுவே சிட்னியின் மிகப்பெரும் கட்டமைப்பாக இருந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும். அத்துடன் உருக்கினாலான மிக உயரமான பாலமும் ஆகும். இதன் அதி உயர் புள்ளி பாலத்தில் இருந்து 134 மீட்டர்கள் (429.6 அடி) ஆகும்[1]. இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும்.

வரலாறு[தொகு]

1815 ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிறீன்வே என்பவரால் திட்டமிடப்பட்டு சிட்னி துறைமுகத்தின் வட, தென்முனைகளுக்கான தொடுப்பாக இது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் 1900 ஆம் ஆண்டு வரை வரைபட மாதிரிகளுக்காகக் காலம் செலவழிந்தது. பின்னர் முதலாம் உலகப் போரைத் தொடந்து பொதுவான ஒரு நிர்மாண மாதிரிப்படத்தை "ஜே. பிறாட்ஃபீல்ட்" என்பவரின் தலைமையில் நிபுணர்கள் குழு தயாரித்தனர். அதனைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் இதை நிர்மாணிப்பதற்கான கேள்விப் பத்திரங்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசினால் கோரப்பட்டு 1922 ஆம் ஆண்டு இங்கிலாந்து மிடில்ஸ்பரோவைச் சேர்ந்த "டோர்மன் லோங் அன் கோ" என்ற நிறுவனத்திடம் இதன் கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டது.

1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் பாலம் நிர்மாணிக்கப்பட்டது. 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. 1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் "ஜோன் லாங்" இப்பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். தற்போது 8 வாகனச் சாலைகள் 2 தொடருந்து தடங்கள் கொண்டு அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ட்ராம் வண்டிக்கான வழித்தடமொன்றும் இருந்தது. 1950 டிராம் சேவை நிறுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "7BridgesWalk.com.au". Bridge History. பார்த்த நாள் 23 October 2006.

வெளி இணைப்புகள்[தொகு]