பெரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரு குடியரசு
República del Perú
பெரு குடியரசு
பெரு கொடி பெரு சின்னம்
நாட்டுப்பண்
Somos libres, seámoslo siempre  (எசுப்பானிய மொழியில்)
நாங்கள் கட்டற்றவர்கள், எப்பொழுதும் அப்படியே இருப்போமாக

Location of பெரு
தலைநகரம்
பெரிய நகரம்
லிமா
12°2.6′S, 77°1.7′W
ஆட்சி மொழி(கள்) எசுப்பானிய மொழி1
மக்கள் பெரூவியர்
அரசு அரசியல்சட்டக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் ஆலன் கார்சியா பெரேசு
 -  தலைமை அமைச்சர் ஹோர்கெ டெல் காஸ்ட்டியோ
(Jorge Del Castillo)
விடுதலை ஸ்பெயின் பேரரசிடம் இருந்து 
 -  அறிவிப்பு ஜூலை 28 1821 
பரப்பளவு
 -  மொத்தம் 12,85,220 கிமீ² (20 ஆவது)
4,96,222 சது. மை 
 -  நீர் (%) 8.80
மக்கள்தொகை
 -  ஜூலை 2007 மதிப்பீடு 28,674,757 (41 ஆவது)
 -  2005 குடிமதிப்பு 27,219,266 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $170.089 பில்லியன் (51 ஆவது)
 -  நபர்வரி $6,715 (94 ஆவது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $93.268 பில்லியன் (55 ஆவது)
 -  நபர்வரி $3,374 (87 ஆவது)
ஜினி சுட்டெண்? (2002) 54.6 () 
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg0.767 (நடு) (82 ஆவது)
நாணயம் நூவோ சோல் (PEN)
நேர வலயம் PET (ஒ.ச.நே.-5)
இணைய குறி .pe
தொலைபேசி +51
1 கெச்சுவா, அய்மாரா மற்றும் பல பழங்குடி மக்கள் மொழிகள் பல இடங்களில் பேசப்படுகின்றன.

பெரு (எசுப்பானியம்: Perú; ஐமர: Piruw கெச்சுவா: Piruw;) அதிகாரப்பூர்வமாக பெரு குடியரசு (Republic of Peru எசுப்பானியம்: República del Perú, [reˈpuβlika ðel peˈɾu]  ( கேட்க)), என்பது தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள ஒரு நாடாகும். இதன் வடக்கில் ஈக்வெடார், கொலம்பியா நாடுகளும் கிழக்கில் பிரேசில் நாடும் தெற்கில் சிலி மற்றும் பொலிவியா நாடுகளும் உள்ளன. தென் கிழக்கே பசிபிக் பெருங்கடல் உள்ளது. பெருவில் உள்ளவர்களில் மிகப்பெரும்பாலானோர் எசுப்பானிய மொழி பேசுகிறார்கள். இநாட்டில் உலகிலேயே மிகப்பெரும் ஆறாகிய அமேசான் ஆறு பாய்கின்றது. .

தொல் பழங்காலத்தில் இன்றைய பெரு நாட்டுப் பகுதியில் உலகின் சிறப்பு வாய்ந்த தொல்பழம் நாகரீகங்களில் ஒன்றான வடச் சிக்கோ நாகரீகம் செழித்து இருந்தது. அது மட்டுமல்லாமல், கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தில் கால் வைக்கும் முன்னர் அமெரிக்கக் கண்டங்களில் இருந்த யாவற்றினும் மிகப்பெரிய பேரரசாக விளங்கிய இன்கா பேரரசும் இங்குதான் இருந்தது. 16 ஆவது நூற்றாண்டில் (கி.பி), எசுப்பானியப் பேரரசு இன்க்கா பேரரசை வென்று ஆட்சி செலுத்தத்தொடங்கியது. 1821ல் இன்றைய பெரு நாடு எசுப்பானிய பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது. கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக பெரு நாடு பலவிதமான அரசியல் மற்றும் பொருளியல் குழப்பங்களுக்கும் உள்ளாகி, ஏற்றத்தாழ்வுகள் அடைந்து இன்று முனைந்து முன்னேறி வரும் ஒரு நாடு ஆகும்.

பெரு நாடு மக்களால் தேர்ந்தெடுக்கும் குடியரசுத் தலைவரால் மக்களாட்சி முறையில் 25 நிலப்பகுதிகளாக வகுத்து ஆளப்படுகின்றது. இந்நாட்டின் நில, வானிலைச் சூழல் அமைப்புகள் மிகப் பல வகையின. உலகில் உள்ள 32 வகையான வானிலைச் சூழல் வகைகளில் 28 வகையை இந்நாட்டில் காணலாம்[1]. நில உலகில் உள்ள தனித்து அறியத்தக்க 117 வகையான நில-உயிரின-செடிகொடியின சூழகங்களில் 84 வகையான பகுதிகள் இநாட்டில் உள்ளன[1], இந்நாட்டு நிலப்பகுதிகளில் பசிபிக் பெருங்கடல் கரையோரப்பகுதிகளில் இருக்கும் ஈரப்பதம் குறைந்த வரண்ட நிலப்பகுதிகளில் இருந்து மழைக்காடுகள் நிறந்த அமேசான் காடுகளும் பனி சூழ்ந்த உயர் ஆண்டீய மலைகளும் உள்ளன. இந்நாட்டில் 60% பரப்பளவு காடுகள் சூழ்ந்துள்ளன. என்றாலும் அதில் 6% மக்கள்தொகையினரே வாழ்கின்றனர். இந்நாடு வளரும் நாடுகளில் ஒன்றாகும். தற்பொழுது 50% மக்கள் ஏழ்மையில் இருக்கின்றார்கள் எனினும் நடுத்தரமான மனித வளர்ச்சி சுட்டெண் கொண்டுள்ள நாடு ஆகும். இந்நாட்டின் பொருள்வளம் கூட்டும் தொழில்கள் வேளாண்மையும், மீன்பிடித்தலும், நிலத்தடி கனிவளம் எடுத்தலும், துணிமணிகள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்தலும் ஆகும்.

இந்நாட்டின் 28 மில்லியன் மக்கள் பல இனத்தவர்களாகவும் பன்முக பண்பாடுகள் கொண்டவர்களாகவும் உள்ளனர். எசுப்பானிய மொழி பேசுவோர்கள்தாம் பெரும்பான்மையாக இருந்தபோதிலும், இப்பகுதிகளின் "இந்தியர்கள்" என்று சொல்லப்படும் பழங்குடிகளின் மொழிகளாகிய கெச்சுவா மொழியும் (மலைப்பகுதிகளில்), அய்மாரா மொழியும் (தெற்கே), வேறுபல மொழிகளும் (அமேசான் காடுகளில்) பேசுகிறார்கள். பல்லின மக்க்கள் கூடி வாழ்வதால் பல தனித்தன்மை வாய்ந்த உணவு வகைகளும், இசை, இலக்கியம், நடனம் போன்ற கலை வடிவங்களும் சிறப்பாக உள்ளன.

பெயர் காரணம்[தொகு]

பெரு என்னும் பெயர் பிரு (Birú) என்னும் பெயரிலுருந்து உருவானதாகும். இது பனாமா, சான் மிகுயேல் வலைகுடாவிற்கருகே 16ம் நூற்றாண்டில் வசித்துவந்த மன்னர் ஒருவரின் பெயராகும்.[2] அவரை 1522 இல் எசுபானியர்கள் முதன்முதலில் சந்தித்தப் போது, ஐரபியருக்கு புதிய உலகின் தெகோடியாக இவரின் ஆட்சியிடத்தை கருதினர்.[3] ஆகவே பிரான்சிஸ்கோ பிசாரோ, மேலும் தெற்கு நோக்கி சென்றபோது, இவரின் பெயராலேயே அவ்விடங்களை அழைத்தார்.[4]

எசுபானிய அரசு 1529இல் இப்பெயரை எசுப்பானிய அரசு அதிகாரப்பூர்வமானதாக ஏற்று அதிலிருந்த இன்கா பேரரசின் ஆட்சிப்பகுதியை பெரு மாகாணம் (province of Peru) எனப்பெயரிட்டது.[5] பிற்கால எசுப்பானிய ஆட்சியில் இவ்விடத்தின் பெயர் பெருவின் ஆட்சிப்பகுதி (Viceroyalty of Peru) என இருந்தது. பெருவிய சுதந்திரப்போருக்கு பின் பெரு குடியரசு என்று அழைக்கப்படுகின்றது.

வரலாறு[தொகு]

பெருவியன் பகுதியில் மனிதர்கள் சுமார் கி.மு 9,000 ஆண்டுகள் முன்னர் இருந்ததற்கான ஆதாரம் ஊல்லன. பெருவியன் பகுதியின் முகப்பழைய நாகரிகமாக இருந்தது நோத்ரே சிக்கோ நாகரிகமாகும். இது பசபிக் கடற்கரையில் கி.மு 3000 முதல் 1800 வரை செழித்திருந்தது.[6] 15ஆம் நூற்றாண்டில் இன்கா பேரரசு பெரும் சக்தியாக இவ்விடத்தில் விளங்கியது. இவ்விடத்தில் மக்கள் நீர்ப்பாசனம் சார்ந்த உழவுத்தொழில் செய்துவந்தனர். இவர்களிடம் பண்டமாற்ற முறையே இருந்துவந்தது.

டிசம்பர் 1532இல் பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசர் அதால்பாவை தோற்கடித்து இவ்விடத்தை எசுபானியாவுக்காக வென்றார். பத்துவருதங்கள் கழித்து எசுப்பானிய அரசு அருகின் இருந்த பிற ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்து, பெரு மாகாணத்தை உறுவாக்கியது.

ஆட்சியமைப்பு[தொகு]

பெரு நாடு 25 ஆட்சிப்பகுதிகளையும் லிமா ஒன்றியத்தையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆட்சிப்பகுதியும் மக்களால் தேர்வுசெய்யப்படும் தலைவர் மற்றும் ஆலேசகர்குழுவால் நிர்வகிக்கப்படுகின்றது. இவர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும்.[7] ஆட்சிப்பகுதியின் வளர்ச்சி திட்டம், பொது முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துவம், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், மற்றும் பொது சொத்து நிர்வகிப்பதும் இவர்களின் பணியாகும்.[8] லிமா ஒன்றியம் மட்டும் நகர சபை மூலமாக நிர்வகிக்கப்படுகின்றது.[9] அரச சார்பற்ற அமைப்புகள் பலவும் அதிகாரம் பரவலாக்கத்திற்கு பெரிதும் உதவி இன்றளவும் அரசியலில் செல்வாக்கும் செலுத்திவருகின்றன.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Peru, Footprint
  2. Porras Barrenechea, p. 83.
  3. Porras Barrenechea, p. 84.
  4. Porras Barrenechea, p. 86.
  5. Porras Barrenechea, p. 87.
  6. Haas, Jonathan, Creamer, Winifred and Ruiz, Alvaro (2004). "Dating the Late Archaic occupation of the Norte Chico region in Peru". Nature 432: 1020–1023. doi:10.1038/nature03146. பப்மெட் 15616561. http://www.scribd.com/doc/93993434/HAAS-Et-Al-2004-Dating-the-Late-Archaic-Occupation-of-the-Norte-Chico-Region-in-Peru. 
  7. Ley N° 27867, Ley Orgánica de Gobiernos Regionales, Article N° 11.
  8. Ley N° 27867, Ley Orgánica de Gobiernos Regionales, Article N° 10.
  9. Ley N° 27867, Ley Orgánica de Gobiernos Regionales, Article N° 66.
  10. Monika Huber, Wolfgang Kaiser (February 2013). "Mixed Feelings". dandc.eu.

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=பெரு&oldid=1553577" இருந்து மீள்விக்கப்பட்டது